Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’-ல் நீங்கள் ஏன் பங்கேற்க வேண்டும்? - இதோ 10 காரணங்கள்!

Tamil Nadu Story 2024 - இது மாநிலத்தின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும், மண்ணின் சொந்த பிராண்ட்களையும் அடையாளப்படுத்தி அதிகாரம் அளிக்க முனையும் யுவர்ஸ்டோரி-யின் மாபெரும் நிகழ்வாகும். உடனே பதிவு செய்து இதில் கலந்து கொள்ளத் தயாராகுங்கள்.

‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’-ல் நீங்கள் ஏன் பங்கேற்க வேண்டும்? - இதோ 10 காரணங்கள்!

Monday June 24, 2024 , 4 min Read

சென்னையில் ஜூலை 19-ம் தேதி நடைபெறும் ‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’ நிகழ்வில் நீங்கள் ஏன் பங்கேற்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இது மாநிலத்தின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும், மண்ணின் சொந்த பிராண்ட்களையும் அடையாளப்படுத்தி அதிகாரம் அளிக்க முனையும் யுவர்ஸ்டோரி-யின் மாபெரும் நிகழ்வாகும்..

ஆம், இன்றிலிருந்து இந்த விழா நடைபெற இன்னும் சரியாக ஒரு மாதத்துக்கும் குறைவாகவே உள்ளது. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ‘யுவர் ஸ்டோரி’யின் முதல் முத்தாய்ப்பான தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மண்ணின் சொந்த பிராண்ட்களுக்கான ஓர் அரிய களம் இது.

இந்த நிகழ்வு, தொழில் நிறுவனத் தலைவர்கள், தொழில்முனைவோர், மாற்றத்தை ஏற்படுத்துவோர் கூடும் களமாக இருக்கும். இவர்கள்தான் இந்த மாநிலத்தை சர்வதேச புத்தாக்க படைப்புக்களமாக மாற்றப்போகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

இப்போதும்கூட இந்த மாநாட்டில் உங்களுக்காக என்ன இருக்கப் போகிறது என நீங்கள் யோசிப்பீர்கள். இதோ நாங்கள் உங்களுக்கு சில டிப்ஸ் தருகிறோம்.

‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’ (Tamil Nadu Story 2024) நிகழ்வில் நீங்கள் ஏன் பங்கேற்க வேண்டும் என்பதற்கு நாங்கள் 10 காரணங்களைச் சொல்கிறோம்.

TN Story- 10 reasons to attend

#1 அனல் பறக்கும் தலைப்புகள், காலத்துக்கு ஏற்ற கருப்பொருள்

தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில் சூழலுக்கு ஏற்ற அனல் பறக்கும் தலைப்புகளிலும், தற்காலத்துக்கு ஏற்ற கருப்பொருளும் கொண்ட பல்துறை நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் இருக்கும்.

சாஸ் ஸ்டார்ட்-அப்களுக்கான ஏஐ உத்திகள் முதல் ஹெல்த் டெக் தீர்வுகள் வரை, ஸ்பேஸ் தொழில்நுட்பத்தில் புத்தாக்கம் என பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் தொழில் வெற்றிக்கான எதிர்கால தொலைநோக்குப் பார்வை கொண்ட உத்திகளை, புரட்சிகளை ஏற்படுத்தும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வர். இது போதாதா? நீங்கள் அங்கே செவி கொடுத்து பயன்பெற!

#2 செயல்முறை விளக்கங்கள்

வெற்றிக் கதைகள் எப்போதும் அது எப்படி சாத்தியமானது என்ற விளக்கங்கள் இருந்தால்தான் சுவாரஸ்யப்படும். அந்த வகையில், உற்பத்தி, உள்ளடக்க உருவாக்க களம், D2C எனப்படும் டைரக்ட் டூ கஸ்டமர்ஸ் தொழில் வர்த்தகம் போன்ற துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை நேரடியாகப் பெறலாம்.

மண்ணின் அடையாளமாக உருவாக்கப்படும் பிராண்ட்களை வெற்றி பெறச் செய்வது தொடங்கி புதிய தலைமுறை தலைவர்கள் உருவாவது எப்படி என்பது வரை அறியலாம். அதேபோல், உங்கள் பகுதியைச் சேர்ந்த தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகளையும் கூட கேட்டு உத்வேகம் பெறலாம்.

பாலினப் பாகுபாடுகளைக் கடந்து உற்பத்தித் துறையில் தமிழகப் பெண்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை அவர்களே சொல்லக் கேட்கலாம்.

#3 தமிழகத்தின் முன்னணி தொழில்முனைவோரின் உத்வேக உரைகள்

தொழில்துறை ஜாம்பவான்கள், சிந்தனைக் குழுக்களின் முக்கியப் பிரதிநிதிகளின் உத்வேகப் பேச்சைக் கேட்கலாம். அவர்களின் ஆச்சரியப்பட வைக்கும் பார்வைகள், ஆலோசனைகள், விலைமதிப்பற்ற அனுபவப் பகிர்வுகள் மாநிலத்துக்கு எப்படி வலுசேர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

#4 ஒரே இடத்தில் மாற்றத்தின் வித்தகர்கள்!

தமிழ்நாடு ஸ்டோரி 2024 களத்தில் நீங்கள் நிச்சயமாக தமிழக தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய வித்தகர்கள் பலரை நேரில் காணலாம். அத்தனை பேரும் ஒரே இடத்திலா என்று நீங்கள் வியக்கும் அதேவேளையில், அவர்களின் தொழில் உத்தி ஆலோசனைப் பகிர்வுகளைப் பெறத் தவறிவிடாதீர்கள்.

நிகழ்வில் உங்கள் கருத்துக்கு நிகரான எண்ண ஓட்டம் கொண்டோரை நீங்கள் சந்திக்கலாம். அது மட்டுமல்ல, அங்கே சில முதலீட்டாளர்கள், ஏஞ்சல் இன்வஸ்டர்ஸும் கூட வரலாம்.

உங்கள் தொடர்புகளை நிறுவிக் கொள்ளுங்கள். அர்த்தமுள்ள கூட்டணிகளை உருவாக்குகள். உங்கள் வழியில் வரும் வாய்ப்புகள் எதையும் தவறவிடாதீர்கள்.

Tamilnadu Story 2024

#5 பயிலரங்குகள் மற்றும் வல்லுநர் வகுப்புகள்

நீங்கள் தொழில்முனைவராக துடிக்கும் நபராக இருக்கலாம் அல்லது ஒரு தொழிலை உருவாக்கி அதன் ஆரம்ப நிலையில் இருக்கலாம். இது உங்களுக்கான களம்தான். உங்கள் வளர்ச்சிப் பாதையில் அடுத்த பெரிய அடியை எடுத்துவைக்கக் கூடிய ஆலோசனைகளை இங்கே பெறலாம்.

அனுபவப் பகிர்வுகள் உங்களுக்கு செயல்முறை விளக்கங்களாக அமையும். வளர்ச்சிக்கான உத்திகள் கிடைக்கும். தொழில்துறை நிபுணர்கள், முன்னோடிகள் சொல்லும் ஆலோசனைகள் உங்களுக்கு படிப்பினையாகும்.

பொருட்களை உருவாக்குதல், சந்தைப்படுத்துதல், நிதி மேலாண்மை மற்றும் நிதி முதலீடுகளை ஈர்த்தல் என அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். அதுவும் தமிழக தொழில்துறை சூழலுக்கு சாதகமான ஏற்புடைய செயல்முறை விளக்கங்களைப் பெற்றுப் பயனடையுங்கள்.

#6 முதலீட்டாளர்கள் அமர்வு

'அப்ப நாங்களும் தொழில்முனைவோர்தானே' என்று நீங்கள் முனகுவது எங்களுக்குக் கேட்கிறது. அதை நீங்கள் இப்போது உரக்கச் சொல்லுங்கள். ஆழ்ந்த ஈடுபாட்டோடு, தீர்க்கமான லட்சியத்தோடு சொல்லுங்கள். உங்கள் தொழில்துறை சார்ந்த உலகம் கேட்கும்படி சொல்லுங்கள். இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள். முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் கூடியிருக்கும் ஒரு மேடையில் உங்களது பார்வையை, கனவை எடுத்துரைக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

#7 ஸ்டார்ட்-அப்களின் அணிவகுப்பு! 

‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’ வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உங்கள் கண்முண் அணிவகுத்துச் செல்லச் செய்யும். புத்தாக்க சிந்தனைகளால் முதலீட்டுகளை ஈர்த்து முன்னேறியதை பறைசாற்றும் ஸ்டார்ட்-அப்களையும் அங்கே காண முடியும். இதன் மூலம் நிகழ்வில் கலந்துகொள்ளும் உங்களுடைய முதலீட்டுத் தேடல் பயணங்களுக்கு புதிய பார்வைகளும், பரிமாணங்களும் கிடைக்கும்.

#8 தமிழகத்தின் உற்சாக மனநிலையைக் கொண்டாடுவோம்! 

மல்லிப்பூ முதல் உற்பத்தித் துறை வரை, சிலப்பதிகாரம் முதல் சாஸ் தீர்வுகள் வரை, ஃபில்டர் காபி முதல் ஃபின்டெக் ஃபண்டாஸ் வரை தமிழகத்தில் எல்லாம் இருக்கிறது.

இங்கே ஏன் கவிதை நடை என்று நினைத்தால், பொறுத்தருள்க! ஏனெனில், ‘யுவர் ஸ்டோரி’ தமிழகத்தின் இந்த உற்சாக மனநிலையைக் கொண்டாடுவதில் உத்வேகம் கொண்டுள்ளது. அதன் விளைவே இந்த நடை…

போட்டி நிறைந்த சந்தையில் இந்த நிகழ்ச்சியானது மாநிலத்தின் மிகவும் புதிய பிராண்ட்கள் பலவற்றை அடையாளம் கண்டு கவுரவிக்க உள்ளது. தமிழக தொழில்துறையின் போக்கில் தமக்கென ஒரு தடம் பதித்த தொழில்முனைவோரையும் கவுரவிக்கும்.

#9 அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்வு

தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கதையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த நிகழ்வு திறந்திருக்கிறது - நிறுவனர்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவோர், ஆர்வலர்கள், முதலீட்டாளர்கள் முதல் தொழில்துறை ஆதரவாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சூழலமைப்பு ஊக்குவிப்பாளர்கள் வரை. இதில் பங்குள்ள எவரும் கலந்துகொள்ளலாம்!

#10 மாற்றம் தரும் அனுபவம்!

மொத்தத்தில், ‘தமிழ்நாடு ஸ்டோரி 2024’ ஒரு திருவிழாவுக்கான அத்தனை உள்ளடக்கங்களோடு உங்களைக் கவர்ந்து, ஊக்குவித்து, ஆலோசனைகளை வழங்கி, புது படிப்பினைகளை நல்கி, தொடர்புகளை ஏற்படுத்தும்.

இப்ப என்ன சொல்றீங்க?

என்னம்மா கண்ணு? எதுக்கு காத்துகிட்டு இருக்க? இங்கே க்ளிக் செய்யுங்கள்… நிகழ்வில் உங்கள் இருப்பை உறுதி செய்யுங்கள். மாற்றத்தைத் தரும் பயணத்தில் பங்கு பெறுங்கள்.

வி ஆர் வெயிட்டிங்…!