10 வயதில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய ஐக்யூ ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்திய வம்சாவளி சிறுவன்!
உலகின் ஆகச்சிறந்த அறிவியல் மேதைகளான ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் மதிப்பிடப்பட்ட ஐக்யூவை விட அதிக ஐக்யூ உடன் உலகளவில் தலைப்பு செய்தியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 வயது சிறுவனான கிரிஷ் அரோரா.
உலகின் ஆகச்சிறந்த அறிவியல் மேதைகளான ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் மதிப்பிடப்பட்ட ஐக்யூவை விட அதிக ஐக்யூ உடன் உலகளவில் தலைப்பு செய்தியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுவனான கிரிஷ் அரோரா.
மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த 10 வயது சிறுவனான கிரிஷ் அரோராவின் அறிவுத்திறன் சமீபத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் அனைவரையும் வியக்கும் வகையில், அவரது ஐக்யூ 162 -ஆக இருந்தது. இந்த மதிப்பானது ஆகச்சிறந்த இயற்பியலாளர்களான ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஐக்யூவை விட அதிகமாகும்.
ஐன்ஸ்டீனுக்கு ஐக்யூ சோதனை செய்ததில்லை என்றாலும், அவரது ஐக்யூ 160 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணைவிட கிரிஷ் அதிக ஐக்யூ மதிப்பெண் பெற்றதன் மூலம், உலகின் மிகச்சிறந்த 1% அறிவாளிகளின் பட்டியலில் இடம்பறெ்றுள்ளார். கிரிஷின் பெற்றோர்களான மௌலி மற்றும் நிஷால் அரோரா இருவரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்களாவர். அவர்களது மகனுக்கு 4 வயதாகும் போதே அவரது அறிவுத்திறனை கண்டறிந்துள்ளனர்.
"நான்கு வயதில் அவன் செய்து கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும், 4 வயதுக் குழந்தை செய்யக்கூடியதைவிட மிக அதிகமாக இருந்தது. அப்போதே அவன் சரளமாக படிப்பான், எழுத்துப்பிழையின்றி எழுதுவான். அப்போதிருந்தே அவனுக்கு கணிதம் பிடித்தமான ஒன்று. அவனுக்கு 4 வயதாகுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவன் என்னுடன் 3 மணி நேரம் அமர்ந்து ஒரு முழு கணித புத்தகத்தையும் படித்து முடித்தான். அவன் நான்கு வயதிலே தசம பிரிவுகளைச் செய்து கொண்டிருந்தார்," என்று பெருமையுடன் பகிர்ந்தார் கிரிஷ்ஷின் தாய்.
மேலும், அதிக ஐக்யூ உடன் அறிவுத்திறன் அதிகமான மாணவர்கள் மட்டும் படிக்கக்கூடிய மென்சா பள்ளியில் சேர, கிரிஷிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இங்கிலாந்து ராணி குயின் எலிசபெத்தின் பள்ளியிலும் படிக்கவிருக்கிறார்.
"தற்போது 11க்கும் மேற்பட்ட தேர்வுகள் இருந்தாலும், எளிமையாக உள்ளன. அடுத்து புதிதாக இணையவிருக்கும் பள்ளி சவாலான பாடத்தை கொண்டிருக்க வேண்டும், என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில், ஆரம்ப பள்ளி எனக்கு போர் அடிக்கிறது. அங்கு நான் எதையுமே கற்கவில்லை. நாள் முழுக்க எளிமையான கணக்குகளும், வாக்கியங்களையும் எழுத சொல்கிறார்கள். கணிதத்தில் எனக்கு அல்ஜீப்ரா மிகவும் பிடிக்கும்," என்று கூறினார் கிரிஷ்.
கணிதம் முதல் இசை வரை... எல்லா ஏரியாவிலும் கிங்கு!
ஒரு புறம் கல்வியில் சிறந்து விளங்கும் கிரிஷ், பியோனோ வாசிப்பிலும் கைத்தேர்ந்தவராக இருக்கிறார். பியானோ கற்கத் தொடங்கிய 6 மாதங்களிலே 4 கிரேடுகளை முடித்தார். பிறகு டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் "ஹால் ஆஃப் ஃபேமில்" சேர்க்கப்பட்டார். பியானோ கலைஞராக பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது கிரேடு 7 பியானோ சான்றிதழை வைத்திருக்கும் கிரிஷ், நோட்ஸ்களை பேப்பரில் பார்த்து இசைக்காமல் நினைவிலிருந்தே சிக்கலான நோட்ஸ்களையும் கணகச்சிதமாக இசைக்கும் திறன் கொண்டுள்ளார்.
கல்வி மற்றும் இசையை தாண்டி கிரிஷிற்கு புதிர்கள், குறுக்கெழுத்துக்கள் மற்றும் சதுரங்கம் விளையாடுவதில் விருப்பம். அவரது திறமையை உணர்ந்த அவரது பெற்றோர்கள் முறையாக செஸ் கற்றுக்கொள்ள ஒரு செஸ் பயிற்சியாளரை ஏற்பாடு செய்தனர். ஆனால், இப்போது க்ரிஷ் அவரது பயிற்றுவிப்பாளரைத் தொடர்ந்து தோற்கடித்து கொண்டிருக்கிறார்.
கற்றல் மற்றும் படைப்பாற்றலில் சிறந்துவிளங்கும் கிரிஷ், பல்லாயிர மாணவர்களுக்கான இன்ஸ்பிரஷேன்! வாழ்த்துகள் இன்டலிஜென்ட்!