Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பிரபலங்கள்: ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்!

ஆசியாவின் டாப் 100 டிஜிட்டல் நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ்!

சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க பிரபலங்கள்: ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்!

Tuesday December 29, 2020 , 2 min Read

ஃபோர்ப்ஸ் அண்மையில் ஆசியாவின் டாப் 100 டிஜிட்டல் நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இது 2020 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் சமூக ஊடகங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க, கவனத்தை ஈர்த்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.


2020 ஒரு தொற்றுநோயான ஆண்டாக இருந்தாலும் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த பட்டியல் சமூக ஊடங்களில் சக்திவாய்ந்த பிரபலங்களின் இருப்பை உணர்த்தும் வகையில் இருக்கிறது.

"நேரடியாக நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்திருந்த போதிலும், சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு நம்பிக்கையையும், விழிப்புணர்வையையும் ஏற்படுத்தும் பிரபலங்களுக்கு நாங்கள் கூடுதல் கவனத்தை கொடுத்தோம். பெரும்பாலும் பலர் தங்கள் செல்வாக்கை தகுதியான காரணங்களுக்காக பயன்படுத்தினார்கள். குறிப்பாக கொரோனா குறித்து கவனம் செலுத்தினார்கள்,” என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
forbes list

அக்ஷ்ய்குமார் முதல் ஆலியா பட் வரை டிஜிட்டல் ஆசியா பட்டியலில் இடம்பிடித்த இந்தி பிரபலங்கள் யார் என்பது குறித்து பார்ப்போம்.

அமிதாப் பச்சன் :

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், கொரோனா நிவாரண நிதியாக 70லட்ச ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். சமூக ஊடங்களில் 105 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருப்பவர் அமிதாப் பச்சன்.

ஃபோர்ப்ஸ்

அக்‌ஷய் குமார் :

இந்திய பிரபலங்களில் சமூக ஊடகங்களில் அதிக ஃபாலோவர்ஸ்களைக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய். 131 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்கள் இவருக்கு உண்டு. பாலிவுட்டில் அதிக ஊதியம் பெறும் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா நிவாரண நிதியாக ரூ.40 லட்சத்தை கொடுத்து உதவி பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

ஆலியா பட் :

சமூக வலைதளங்களில் 74 மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கொண்டவரும். இந்திய அளவில் அதிகம் ஊதியம் பெறும் நடிகையுமான ஆலியா பட், டாப் 100 டிஜிட்டல் நட்சத்திரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

ஷாருக்கான் :

பாலிவுட் கிங், பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளங்களில் 106 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டிருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை வென்றதற்காக உலகப் பொருளாதார மன்றம் அவரை 2018 இல் கௌரவித்தது.

அக்ஷ்ய் குமார்

ஜாக்குலின் பெர்னாண்டஸ் ;

இலங்கையின் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ், ஜாக்குலின் பெர்னாண்டஸ் இப்போது பிரபல பாலிவுட் நட்சத்திரங்களில் ஒருவர். அவர் சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் தொடரான திருமதி சீரியல் கில்லர் படத்தில் நடித்தார். சமூக ஊடகங்களில் ஜாக்குலின் 82 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.

ரன்வீர் சிங் :

சிறந்த நடிகருக்கான பல விருதுகளை வென்றெடுத்த நடிகர் ரன்வீர். இவர் சமூக ஊடகங்களில் 62 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை பெற்றிருக்கிறார்.

ஷாஹித் கபூர்:

ஷாஹித் கபூரின் பிளாக்பஸ்டர் திரைப்படம் கபீர் சிங். 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக பல்வேறு தரப்பினர் பாராட்டை பெற்றபடம். இவர் சமூக ஊடகங்களில் 67 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸூடன், கோல்கேட் மற்றும் ஃபாண்டா ஆகிய நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்ததாரராக இருக்கிறார்.


இதே போல, கத்ரீனா கைஃப் 40 மில்லியன் ஃபாலோவர்ஸ் மற்றும் அனுஷ்கா ஷர்மா 84 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். கூகிள் டியோவின் விளம்பர தூதுவராக அனுஷ்கா ஷர்மா இருப்பது குறிப்பிடத்தக்கது.


தகவல் உதவி: ஃபோர்ப்ஸ்