2021: நம்பர் 1-ல் பிரியாணி; 1 கோடி மோமோஸ்: Zomatoவில் போட்டி போட்டு ஆர்டர் செய்த உணவுப் பிரியர்கள்!
2021ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளதாக ஜூமோட்டோநிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 88 லட்சம் ஆர்டர்களுடன் தோசை 2வது இடத்தை பிடித்துள்ளது.
2021ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளதாக ஜோமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் 88 லட்சம் ஆர்டர்களுடன் தோசை 2வது இடத்தை பிடித்துள்ளது.
2021ம் ஆண்டிற்கான ‘ஸ்டாட்ஈட்டிக்ஸ்டிக்ஸ்’ ரிப்போர்ட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் 2021ம் ஆண்டில் ஒரு நிமிடத்துக்கு 121 சிக்கன் பிரியாணியாக அதிகரித்திருப்பது தெரியவந்தது. அடுத்த இடத்தை சமோசா பெற்றிருந்தது. இனிப்பை பொறுத்த வரை குலாப் ஜாமூன் 21லட்சம் ஆர்டர்களுடன் முதலிடத்தில் இருந்தது.
எப்போதும் முதலிடத்தில் பிரியாணி; 2வது இடம்பிடித்த தோசை:
தற்போது ஸ்விக்கி நிறுவனத்தை தொடர்ந்து Zomato நிறுவனம் தங்களது ஆப்’பில் 2021ம் ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்விக்கியைத் தொடர்ந்து ஜோமாட்டோவிலும் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2 பிரியாணிகள் வீதம் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக ஜோமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக ஆர்டர்களை செய்த வாடிக்கையாளர்கள்:
2021ம் ஆண்டு அக்டோபரில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டியின் போது, நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உணவை ஆர்டர் செய்துள்ளனர். அகமதாபாத்தில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் Zomato தளத்தில் ரூ.33,000 மதிப்புள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஆர்டரைச் செய்ததாக Zomato தெரிவித்துள்ளது.
"ஸ்வேதா என்ற பெண்மணி ஒரே நாளில் 12 ஆர்டர்களை ஐஸ்கிரீம்களுக்காக மட்டுமே,” செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த துஷார் என்ற மற்றொரு நபர் 389 பீட்சாக்களை ஆர்டர் செய்துள்ளார். ஹனி கட்டியல் என்ற வாடிக்கையாளர், டெலிவரி பார்ட்னர்களுக்கு 1,250 ஆர்டர்களில் டிப்ஸ்களை வழங்கியுள்ளார். மற்றொரு வாடிக்கையாளரான ப்ரீதி அதிக பட்சமாக 1,907 ஆர்டர்களை செய்திருக்கிறார்.
நொறுக்குத்தீனியில் முதலிடம் பிடித்தது எது?
3.1 மில்லியன் வாடிக்கையாளர்கள் வடா பாவ்களையும், 7.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் சமோசாவையும், 10 மில்லியன் (1கோடி) வாடிக்கையாளர்கள் மோமோஸ் ஆர்டர் செய்துள்ளனர். பனீர் பட்டர் மசாலா மற்றும் பட்டர் நான் போன்ற உணவுகள் 2021 ஆம் ஆண்டில் 1.1 மில்லியனாக உள்ளது.
200,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஜோமாட்டோ செயலி மூலமாக டிப்ஸ் கொடுத்துள்ளனர்.