Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சோழா எம்.எஸ் காப்பீடு நிறுவன 2024-2025 3ஆம் காலாண்டு பிரிமியத்தில், ரூ.2057 கோடியை எட்டி 10% வளர்ச்சி!

சோழா எம்.எஸ். ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 2025ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த பிரிமியத்தில், 10 சதவீத வளர்ச்சியுடன் ரூ.2,057 கோடியை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.

சோழா எம்.எஸ் காப்பீடு நிறுவன 2024-2025 3ஆம் காலாண்டு பிரிமியத்தில், ரூ.2057 கோடியை எட்டி 10% வளர்ச்சி!

Friday January 31, 2025 , 2 min Read

சோழா எம்.எஸ். ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் 2025ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த பிரிமியத்தில், 10 சதவீத வளர்ச்சியுடன் ரூ.2057 கோடியை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.

Key Takeaways

நிதிநிலை முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

  • சோழா எம்.எஸ் நிறுவனம் தனது மொத்த சந்தைப் பங்கை 3.12 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.2855 கோடி ஆகும். 85 சதவீதம் லாபத்தின் சேர்க்கையால் வந்தது.
  • 9 மாத காலத்தில் பங்கு மீதான பலன் 12.7 சதவீதமாக உள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான முருகப்பா குழுமம் மற்றும் ஜப்பானின் மிட்சுய் சுமிமோட்டோர் காப்பீடு குழுமம் இடையிலான கூட்டு நிறுவனமான சோழமண்டலம் எம்.எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் (சோழா எம்.எஸ்) 2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும், டிசம்பர் மாதம் வரையான 9 மாத காலத்திற்கான நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது.

இந்த காலத்தில் நிறுவனம் மொத்த பிரிமியமாக (GWP) 11 சதவீத வளர்ச்சியுடன் ரூ.6,193 கோடியை எட்டியிருப்பதாகவும், இது பல்வேறு காப்பீடு நிறுவனங்களின் மொத்த வளர்ச்சி விகிதமான 6.9 சதவீதத்தை விட அதிகம் என்றும் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாம் காலாண்டில் மொத்த பிரிமியத்தில், இணையான காலாண்டுடன் ஒப்பிடும் போது 10 சதவீத வளர்ச்சியுடன் ரூ.2057 கோடியை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இன்சு

2024 அக்டோபர் முதல் நிறுவனம், பிரிமியம் அங்கீகாரம் தொடர்பான கட்டுப்பாடு அமைப்பின் புதிய நெறிமுறைகளை பின்பற்றியது, காலாண்டுக்கான தொகையை ரூ.124 கோடி குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், வரிக்கு முந்தைய லாபம் ரூ.137 கோடி ஆகும். 9 மாத காலத்தில் இது ரூ.486 கோடி ஆகும். இணையான காலத்தில் ஒப்பிடும் போது இது 38 சதவீத வளர்ச்சி.

நிதிநிலை முடிவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • சோழா எம்.எஸ் நிறுவனம் தனது மொத்த சந்தைப் பங்கை 3.12 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.2855 கோடி ஆகும். 85 சதவீதம் லாபத்தின் சேர்க்கையால் வந்தது.
  • 9 மாத காலத்தில் பங்கு மீதான பலன் 12.7 சதவீதமாக உள்ளது.
  • புதிய வாகன ஓ.இ.எம் பிரிவில் நுழைந்தது மூலம் நிறுவனம் தனது வலைப்பின்னலை மேலும் விரிவாக்கியது.
  • பயிர் கோரிக்கைகள் தவிர, 4 லட்சத்திற்கும் மேலான கோரிக்கைகளை வெற்றிகரமாக பைசல் செய்துள்ளது.
  • நிறுவனத்தின், 16500+கேரேஜுகள் மற்றும் 12,000 +மருத்துவமனைகள் வலைப்பின்னல் இந்த செயல்பாட்டில் முக்கிய அங்கம் வகித்துள்ளன.

லாபத்துடன் கூடிய வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதே நிறுவன வெற்றிக்கு காரணம் என நிர்வாக இயக்குனர் வி.சூரியநாராயணன் கூறியுள்ளார்.


Edited by Induja Raghunathan