Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'வெற்றியின் ஆரம்ப அறிகுறிகள்' - நீங்கள் முக்கியம் என நினைக்காத 9 அம்சங்கள் இதோ!

வெற்றிகரமான மனிதரை உருவாக்கும், செல்வம் மற்றும் புகழை கடந்து நிறகும் 9 முக்கிய அம்சங்கள் இவை. வெற்றியை தீர்மானிக்கும் இந்த அம்சங்களை தெரிந்து கொண்டு அவற்றை நீங்களும் பின்பற்றலாம்.

'வெற்றியின் ஆரம்ப அறிகுறிகள்' - நீங்கள் முக்கியம் என நினைக்காத 9 அம்சங்கள் இதோ!

Wednesday November 06, 2024 , 3 min Read

வெற்றி என்பது பாராட்டுதல்கள் அல்லது வங்கி கணக்குகளிலோ மட்டும் இருப்பதில்லை. அது பெரும்பாலும், தினசரி செயல்கள் மற்றும் மனநிலை நுணுக்கங்களில் மறைந்துள்ளது.

ஒரு வெற்றிகரமான மனிதர், டிசைனர் ஆடைகள் அல்லது உடனிருக்கும் படையினர் இல்லாமல், கவர்ந்திழுக்கும் ஆளுமையுடன் ஒரு அறையில் நுழைவதை கற்பனை செய்து பாருங்கள். அவர்களை தனித்து நிற்கச் செய்வது எவை? அவர்கள் பயணத்தை தீர்மானிக்கும் கண்ணுக்குத்தெரியாத அம்சங்கள் எவை?

இந்தக் கட்டுரையில், பெரும்பாலும் கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் வெற்றிகரமான மனிதரின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த அம்சங்கள், உண்மையான வெற்றி என்பது, குணாதிசயம், மனநிலை, சிக்கலான சூழலை சிறப்பாக கையாளுதல் என்பதை உணர்த்துகின்றன. வெற்றி பற்றிய உங்கள் பார்வையையும் மாற்றக்கூடிய இந்த சிறந்த அம்சங்களை பார்க்கலாம்.

success

வெற்றிகரமான மனிதர்களின் முக்கிய அம்சங்கள்:

மார்ஷ்மெலோ சிந்தனைத்திறன்

மார்ஷ்மெலோ சிந்தனை என்பது ஸ்டான்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட பரிசோதனையின் கருத்தாக்கம். பின்னர், காத்திருக்கும் பெரிய பலனுக்காக உடனடி திருப்தியை தள்ளிப்போடுவதை அது குறிக்கிறது. இத்தகைய மனநிலை கொண்ட, இலட்சிய சிந்தனையாளர்கள் என குறிப்பிடப்படுபவர்கள் உடனடிய இன்பங்களை விட நீண்ட கால இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

உடனடி திருப்தி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம், மேம்பட்ட, புத்திசாலித்தனமான தேர்வுகளை நாடுகின்றனர். இது அவர்கள் ஒழுக்கத்தை உணர்த்தி, நாளைய பலனுக்காக பாடுபடுவதை உணர்த்துகிறது.

சாதாரண கார்கள்

பெரும்பாலானோர் வெற்றி என்பது ஆடம்பரமானது என நினைக்கின்றனர். ஆனால், வெற்றிபெற்றவர்களில் பலர் சாதாரண கார்களையே பயன்படுத்துகின்றனர். சாதாரண காரை பயன்படுத்துவது ஒருவர் வெற்றியை குறைப்பதில்லை. அவர்கள் யதார்த்தததை நாடுகின்றனர். இத்தகைய மனிதர்கள், பொருட்கள் சார்ந்த திருப்தியை விட சேமிப்பு மற்றும் அனுபவத்தில் கவனம் செலுத்துகின்றனர். நீடித்த தன்மை மற்றும் சிறந்த நிதி தேர்வுகளை இது உணர்த்துகிறது.

சுய விமர்சனம்

வெற்றிகரமான மனிதர்கள் தங்களை ஆய்வு செய்து கொள்ள நேரம் எடுத்துக்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் சிந்தனை, செயல்கள், இலக்குகளை அடிக்கடி ஆய்வு செய்கின்றனர். அவர்களின் சுயவிமர்சன சிந்தனை, அனுபவ பாடங்களை பெற உதவி, சவால்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள மற்றும் தொடர்ந்து மேம்பட வழி செய்கிறது. இது உணர்வு சார்ந்த அறிவாற்றலை மேம்படுத்தி, மற்றவர்களுடன் ஆழமாக தொடர்பு கொள்ள வழி செய்கிறது.

தகவல் தொடர்பில் தெளிவு

இன்றைய வேகமான உலகில், மெயில்கள் அல்லது செய்திகளுக்கு பதில் அளிக்க நாம் மறந்துவிடுகிறோம். இருப்பினும், வெற்றிகரமான மனிதர்கள் இவற்றுக்கு விரைவாக பதில் அளித்து, மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அவர்களின் வேகமான பதில், மதிப்பை வெளிப்படுத்தி, உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து, வலுவான கூட்டுறவை உருவாக்குகிறது.

கடினம் இல்லை

ஒருவர் சிக்கலான செயலை எளிதாக முடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். இது அவர்களுக்கு இயல்பாக இருக்கிறது.

இதன் ரகசியம் என்ன?

இது பயிற்சி மற்றும் திறனின் கலவையை குறிக்கிறது. இலக்கு சார்ந்த மனிதர், சிக்கலான செயல்களை சின்ன சின்ன செயல்களாக பிரித்து செய்து முடிக்கும் திறன் பெற்றுள்ளனர்.

இந்த அணுகுமுறை, தடைகளை எதிர்கொண்டு, செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. இது சூழலிலும் தாக்கம் செலுத்துகிறது.

அறிவுசார் நேர்மை

ஈடுபாடுமிக்க மனிதர்கள், விழுமியம் மற்றும் நம்பகத்தன்மையை போற்றுகின்றனர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத அம்சங்களை ஒப்புக்கொள்வதன் மூலம் அறிவுசார் நேர்மையை வெளிப்படுத்துகின்றனர். இது வெளிப்படையான உரையாடல் மற்றும் கற்றலுக்கு வழி வகுத்து, தொழில்முறை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், இது மற்றவர்கள் கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் சூழலையும் உருவாக்குகிறது.

வலுவான தன்னம்பிக்கை

வெற்றிபெற்ற மனிதர்களின் முக்கிய குணம், தன்னம்பிக்கை ஆகும். அவர்கள் நேர்நிறை அணுகுமுறையை கொண்டுள்ளனர். சவால்களை தடைகளாக அல்லாமல் வாய்ப்புகளாக பார்க்கின்றனர். இது அவர்கள் உறுதிக்கு வழிவகுத்து கடினமான நிலையிலும் இலக்குகளில் கவனம் செலுத்த வைக்கிறது. மேலும், அவர்கள் நேர்நிறை தன்மை மற்றவர்களையும் ஊக்குவிக்கிறது.

செயல்தன்மை

அவர்கள் பகல் கனவு காண்பவர்கள் மட்டும் அல்ல, செயல்வீரர்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களை வலுவான செயல்களாக மாற்றி இலக்குகளை நோக்கி முன்னேறுபவர்கள். இந்த மனநிலை, மற்றவர்களிடம் இருந்து அவர்களை வேறுபடுத்துகிறது மற்றும் அவர்கள் விருப்பங்களை சாதனைகளாக மாற்றுகிறது.

செயல்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், அவர்கள் பலன் சார்ந்த அணுகுமுறையை நாடுகின்றனர். அவர்கள் கனவுகள் துவக்கம் மட்டுமே என உணர்த்துகின்றனர்.

பேச்சில் தெளிவு

தெளிவாக பேசுபவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்கின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் தேவைகள் மற்றும் எண்ணங்களை தெளிவாக எடுத்துச்சொல்கின்றனர். இது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்றாலும், எத்தனை பேரால் தங்கள் எண்ணங்களை தெளிவாக சொல்ல முடியும் என யோசித்துப்பார்க்க வேண்டும். தனிப்பட்ட உரையாடல்கள், தொழில்முறை சூழல் ஆகியவற்றில் எண்ணங்களை வெளிப்படுத்த இது உதவுகிறது. பேச்சில் தெளிவு, சிந்தனை தெளிவை உணர்த்துகிறது.

முடிவாக...

ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு போன்ற வழக்கமான அம்சங்களைவிட வெற்றி பரந்த வரையறை கொண்டுள்ளது. இந்த 9 அம்சங்கள், ஒரு வெற்றிகரமான மனிதரின் ஆரம்ப நிலையை தெளிவாக உணர்த்துகின்றன. இந்த அம்சங்களை தழுவிக்கொள்வது உங்கள் வெற்றி பயணத்திலும் கைகொடுக்கும்.

உதவி: ஆஸ்மா கான்


Edited by Induja Raghunathan