சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு ஆன்லைன் தேர்வு பயிற்சி அளிக்கும் மையம்!
செயற்கை நுண்ணறிவு கொண்டு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவதால் இதில் நீங்கள் வினாத்தாளில் எழுதுவது போன்ற உணர்வு இருக்கும்.
கோவிட் 19 கொடூர நோய் தாக்குதலின் உறுதியற்றச் சூழலால் சிவில் சர்வீஸ் எழுதும் ஆர்வலர்களின் எதிர்கால கனவுகள் கேள்விக்குறியானது. 2020ம் ஆண்டிற்கான UPSC-ன் முதல் கட்டத் தேர்வு நெருங்கிக் கொண்டு இருக்கின்றன. அதற்குத் தயாராக பயிற்சி வகுப்புகள் நடைப்பெறாத சூழலில் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருக்கின்றனர்.
இந்த ஊரடங்குச் சூழலில், ExcelOn Academy என்ற பயிற்சி மைய நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (Ai) பயன்படுத்தி, பயிற்சி வகுப்புகளைத் துவக்கியுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் பற்றிய விபரங்கள் www.excelonacademy.com என்ற இணைய தளத்தில் உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் எளிதாக ஒவ்வொருவரும் தங்கள் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், தேர்வுக்கு எவ்வாறு தங்களை சீர் செய்து கொண்டு தயார் ஆகும் வழிமுறைகளை கற்றுத் தருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு கொண்டு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவதால் இதில் நீங்கள் வினாத்தாளில் எழுதுவது போன்ற உணர்வு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
- தேவையற்ற பதில்களை எளிதாக நீக்கி சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பது.
- மறுபரிசீலனைக்கான கேள்விகளை குறித்துக் கொள்ளும் எளிய வழிமுறையும் உள்ளது.
- பயிற்சியின் மீதமுள்ள நேரத்தை துல்லியமாக காட்டும் கடிகாரமும் உள்ளது.
- இந்தப் பயிற்சியில் மூன்று நிலையில் தனித்தனியாக விளக்கத்துடன் பல்வேறு கோணங்களில் உங்கள் திறனை ஆராயும் வாய்ப்பும் உள்ளது.
Excel On Academy அமைப்பை சென்னையைச் சேர்ந்த முன்னாள் ஐஐட் மாணவரும், சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புகளில் பல ஆண்டு அனுபவம் கொண்டவருமான டி. உதய்குமார், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன அமைப்பில் புதிய நிறுவனங்களை உருவாக்கும் முத்து குமார் ராஜு இணைந்து தொடங்கியதாகும்.
முதல் கட்டத் தேர்வுகளுக்கு ((PreliminaryExaminations) எவ்வாறு சிறப்பாகத் தயாராகிக் கொள்வது என விளக்கிய உதய்குமார்,
“பொதுவாக யூபிஎஸ்சி Preliminary தேர்வுக்கு 12 முதல் 15 மாதங்கள் வரை தேர்வாளர்கள் தயாராகுவார்கள். கடைசி சில வாரங்கள் மிக முக்கியமான காலக்கட்டம் என்பதால் தேர்வுக்கு தயாராவது மட்டுமின்றி பல்வேறு கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பதும் ஆகும். எங்கள் Ai பயிற்சி முறை சிறந்த மதிப்பு வழங்குவதோடு, எவ்வாறு மதிப்பெண் பெருவது, கேள்விகளுக்கான சிறந்த விளக்கம், என்று பலவற்றை பயிற்சியாக அளிக்கின்றது,” என்றார்.
மேலும் தங்கள் பயிற்சி முறையால் நம்பிக்கையோடு தேர்வை அணுக தேர்வாளர்களுக்கு வழிகாட்டல் இருக்கும் என்றும் இப்படிப்பட்ட தனிப்பயிற்சி அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
இந்த பயிற்சியில் உள்ள முக்கிய அம்சங்களாவது :
- தேர்வில் மூலம் எங்கு குறைகள் உள்ளது, அந்த குறைகளை மேம்படுத்துவது.
- எதைப்படித்தால் அதிக மதிப்பெண்கள் எளிதாக பெறலாம்.
- அடிப்படையாக பயிற்சியாளர்கள் எங்கு தங்களை சீர்செய்து கொள்வது.
- சரியான முடிவுகளை எடுப்பது.
- சக பயிற்சியாளர்களோடு ஒப்பிட்டு தன் நிலை அறிவது.
இந்த புதிய ஆன்லைன் தளத்தைப் பற்றி பேசிய எக்செல்ஆன் அகாடமியின் இணை நிறுவனர் முத்துகுமார் ராஜு,
“ஒவ்வொரு சவாலும் ஒரு வாய்ப்பு. இந்தியாவின் முக்கிய தேர்வான UPSC எழுதுபவர்களின் கற்றலின் ஆர்வத்தை தவறவிடாமல் பார்த்துக் கொள்ளக்கூடிய கருவிகளை தருவதும் அவசியம் என நம்புகிறோம். இந்த கடினமான காலத்தில் உடனடி தீர்வை வழங்க இந்த தளத்தை விரைவான முறையில் உருவாக்கினோம்,” என்றார்.
இதே தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்து, மேம்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம், என்றார். இனி வரும் காலங்களில் புதுமை மற்றும் தொழில்நுட்பம் அத்தியாவசியம் ஆகியுள்ள நிலையில் இந்தத் தலைமுறையினருக்கு கற்றலின் முக்கியப் பங்கினை இத்தொழில்நுட்பம் வகிக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
ExcelOnAcademy ஒரு பயிற்சிஅயி முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. எந்த கட்டணமும் இன்றி பின்னூட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.excelonacademy.com தளத்தில் தகவல்களை பெறலாம். மின்னஞ்சல்: [email protected], மொபைல் எண்: +917428510265).