Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

இந்திய விஞ்ஞானி ‘சந்திரசேகர்’ பெயரை தன் மகனுக்கு சூட்டிய எலான் மஸ்க்!

நோபல் பரிசு வென்ற இந்திய விஞ்ஞானி சந்திரசேகரை கவுரவிக்கும் வகையில், அவரது பெயரை தனது மகனுக்கு எலான் மஸ்க் சூட்டியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய விஞ்ஞானி ‘சந்திரசேகர்’ பெயரை தன் மகனுக்கு சூட்டிய எலான் மஸ்க்!

Friday November 10, 2023 , 2 min Read

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் முதலான பல்வேறு உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரும், தொலைநோக்கு தொழில்முனைவு சிந்தனையாளருமான எலான் மஸ்க் சமீபத்தில் தனது மகனுக்கு ‘சந்திரசேகர்’ என்று பெயர் சூட்டியதை பகிர்ந்துள்ளார்.

இந்தப் பெயர் புகழ்பெற்ற நோபல் விருதாளரான இந்திய விஞ்ஞானியும், இயற்பியலாளருமான 'பேராசிரியர் சுப்பிரமணியன் சந்திரசேகர்’க்கு மரியாதை செலுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ளது என்பதே இங்கே கவனிக்கத்தக்கது.

பிரிட்டனில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் எலான் மஸ்க் மற்றும் மின்னணு - தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சந்திரசேகர்’ என்ற பெயர் தேர்வு நோபல் வென்ற இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. பேராசிரியர் சந்திரசேகர் நட்சத்திரங்களின் இயற்பியல் நிகழ்முறைகளின் தத்துவார்த்த மற்றும் அறிவியல் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக கொண்டாடப்படுபவர் ஆவார்.

elon musk

பேராசிரியர் சந்திரசேகர் நட்சத்திரங்களின் கட்டமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முன்னோடியான கண்டுப்பிடிப்புக்காக 1983-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றார். எலான் மஸ்க்கின் மகன் சந்திரசேகர் என்ற குழந்தை, அவரது மனைவி ஷிவோன் ஜிலிஸிடம் வளர்ந்து வருகிறது.

எலான் மஸ்க் - ஷிவோன் ஜிலிஸ் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் உட்பட பல குழந்தைகள் உள்ளனர். ஷிவோன் ஆலிஸ் ஜிலிஸ் கனடா நாட்டைச் சேர்ந்த துணிகர முதலீட்டாளர் ஆவார். அவர் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். பெயரைத் தேர்ந்தெடுத்ததை உறுதிப்படுத்திய ஷிவோன் ஜிலிஸ் தங்கள் மகனை “சேகர்’ என்று செல்லமாக அன்புடன் அழைப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர்களின் குழந்தைகளின் பாரம்பரியத்தை கவுரவிக்கும் வகையிலும், சுப்ரமணியன் சந்திரசேகரின் நம்பமுடியாத பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகவும் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறுகின்றனர்.

உலகளாவிய ஏஐ (AI) உச்சிமாநாட்டின் பரந்த சூழலில், இந்த நிகழ்வானது செயற்கை நுண்ணறிவின் (AI) தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கிறது. இந்த உச்சிமாநாட்டின்போது, ஏஐ பாதுகாப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் நடந்துவரும் இந்தக் காலக்கட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு குறித்து அக்கறை ஏற்பட்டுள்ளது.

எலான் மஸ்க் தன் மகனுக்கு ’சந்திரசேகர்’ என்று பெயரிடப்பட்டது அறிவியல் மரபு மற்றும் கலாச்சார பாரம்பரியம் இரண்டையும் கவுரவிக்கும் ஓர் அழகான கலவையாகப் பார்க்கப்படுகிறது.

இது உலகளாவிய பல்தொடர்பு இணைவையும், கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு புலங்களில் இந்த இணைப்பு பரஸ்பர மரியாதையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

யார் இந்த சுப்ரமணியன் சந்திரசேகர்?

1983-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் சுப்ரமணியன் சந்திரசேகர், நட்சத்திரங்கள், நட்சத்திரம் போன்ற விண்மீன்கள், கருந்துளைகள் மற்றும் ஒயிட் டுவார்ஃப் பற்றிய நமது புரிதலுக்கு முன்னோடியாகப் பணியாற்றியதற்காக கொண்டாடப்படுகிறார்.

chandrasekhar

’ஒயிட் டுவார்ஃப்’ என்பது எலெக்ட்ரான் சிதைந்த பொருளால் ஆன ஒரு நட்சத்திர எச்சமாகும். அதாவது, சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் அணு எரிபொருளை தீர்ந்த பிறகு ஒயிட் டுவார்ஃப் ஆகின்றன. இதன் நிறை சூரியனுடனும் கன அளவு பூமியுடனும் ஒப்பிடத்தக்கது.

சந்திரசேகர் ஓர் இந்திய - அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளர் ஆவார். இவரது சித்தப்பாதான் நோபல் பரிசு வென்ற சர் சி.வி.ராமன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பால்வெளி மண்டலத்தில் நட்சத்திரங்கள் எவ்வாறு பொருட்களின் நகர்வை பகிர்ந்து கொள்கின்றன என்பதையும், வானம் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பதையும் கண்டுபிடித்தார். தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து சுப்பிரமணியன் சந்திரசேகர் ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ என்று நூலாக வெளியிட்டார். 1953-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். இவர் பத்மவிபூஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Induja Raghunathan