Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மாதம் 1,000+ Linkedin ஃபாலோயர்கள் - இன்ஃப்ளூயன்சர் ஆக அசத்தல் உத்திகள்!

சரியான உத்திகளை பயன்படுத்தினால் ஒவ்வொரு மாதமும் உங்கள் லிங்க்ட்இன் நெட்வொர்க்கில் 1,000 ஃபாலோயர்ஸ்களை ஈர்க்கலாம். அதற்கான வழிகள் இதோ...

மாதம் 1,000+ Linkedin ஃபாலோயர்கள் - இன்ஃப்ளூயன்சர் ஆக அசத்தல் உத்திகள்!

Friday November 15, 2024 , 4 min Read

ஒரு சிம்பிள் நெட்வொர்க்கிங் ஃப்ளார்ட்பார்ம் என்பதை தாண்டி மேம்பட்டுள்ள LinkedIn தனிப்பட்ட பிராண்டிங் மற்றும் தொழில் வளர்ச்சி, வெற்றிக்கான சக்தி வாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது.

நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸராகவோ, தொழில்முனைவோராகவோ அல்லது கார்ப்பரேட் துறையை சேர்ந்தவராக இருந்தாலும் லிங்க்ட்இன் தளத்தில் நீங்கள் ஆக்டிவாக இருப்பது உங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை பெற்றுத்தரும். ஆனால், உங்களுக்கான ஃபாலோயர்ஸ்களை எப்படி தொடர்ந்து அதிகப்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதில்தான் உங்களுக்கான சவால் உள்ளது.

லிங்க்ட்இன் இன்ஃப்ளூயன்சர்கள் எப்படி ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை ஈர்க்கிறார்கள் என்பதை எப்போவதாவது யோசித்திருக்கிறீர்களா?

உங்களுக்கான நல்ல செய்தி... அதிகமான ஃபாலோயர்ஸ்களை பெற நீங்கள் பிரபலமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரியான உத்திகளை பயன்படுத்தினால் ஒவ்வொரு மாதமும் உங்கள் நெட்வொர்க்கில் 1,000 ஃபாலோயர்ஸ்களை ஈர்க்கலாம்.

linkedin

உங்களுக்கான லிங்க்ட்இன் ஆடியன்ஸ்களை அதிகரிக்கவும், உங்களின் ஃப்ரொஃபைலை (profile) மேம்படுத்தவும் உதவும் சில அதிரடியான டிப்ஸ்கள் இதோ...

1. தாக்கத்தை உருவாக்க ப்ரொஃபைலை மேம்படுத்தவும்:

ஃபாலோயர்ஸ்கள் ‘ஃபாலோ’ செய்வதை சிந்திக்கும் முன் நிச்சயம் உங்களின் ப்ரொஃபைலை பார்வையிடுவார்கள். அதனால் தான் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த உங்கள் ப்ரொஃபைலை மேம்படுத்துவது அவசியம்.

ஹெட்லைன் (Headline) :

நீங்கள் யார், நீங்கள் என்ன வசதிகளை வழங்குவீர்கள் என்பதை தெரிவிக்கும் மதிப்புள்ள ஒரு தலைப்பு மிகவும் முக்கியம். அதில், உங்களின் தொழில் துறை சம்பந்தமான கீவேர்டுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

ப்ரொஃபைல் படம் (Profile Picture) :

ஃப்ரொஃபைலுக்கான உங்களின் படம் கொஞ்சம் ப்ரொஃபஷனலாகவும், அதேநேரம், எளிய நோக்குடனும் இருக்க வேண்டும். ஹை குவாலிட்டி படங்களை கொண்ட ப்ரொஃபைல் அதிக என்கேஜ்மென்டை பெறுகின்றன.

மற்ற விவரங்கள் (About section):

சம்மரியை (summary) பொறுத்தவரை சுருக்கமாக எழுதினாலும் எங்கேஜிங்காக இருக்கக் கூடியதை எழுதுங்கள். அதில் உங்களின் சாதனைகள், நீங்கள் எதில் எக்ஸ்பர்ட், மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்துவது எது ஆகிய அம்சங்கள் இடம்பெறுவதில் கவனம் செலுத்துங்கள். கால் (Call) செய்யும் ஆப்ஷனை அதில் சேர்க்க மறக்காதீர்கள். உங்களிடம் கம்யூனிகேட் செய்யவும், உங்களை பின்தொடர ஃபாலோயர்களை அது ஊக்குவிக்கும்.

இப்படி, ப்ரொஃபைல் என்பது கவனத்தை ஈர்ப்பது என்பதை தாண்டி நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. இப்படி செய்வதனால், ஃபாலோயர்கள் அதிகம் பின்தொடர வாய்ப்புகள் அதிகம்.

2. கன்சிஸ்டன்ஸி முக்கியம்

உங்களின் லிங்க்ட்இன் ஃபாலோயிங்கை அதிகப்படுத்த இருக்கும் எளிய வழிகளில் ஒன்று, தொடர்ந்து போஸ்டுகளை பதிவிடுவது. இது தொடர்ந்து ஃபாலோயர்களுக்கு ஊக்கமளிக்கும். வாரத்திற்கு 3-4 முறையாவது ஹை குவாலிட்டி கன்டென்ட்களை பதிவிடுவதை வாடிக்கையாக்கி கொள்ளுங்கள்.

நீங்கள் பதிவிடும் போஸ்ட் என்பது உங்களின் தொழில், அனுபவம், அவை பற்றிய நுண்ணறிவு ஆகியன தொடர்புடையதாக இருக்க வேண்டும். மேலும், உங்களை ரிலேட் செய்யக்கூடிய வகையிலான போஸ்டுகளையும் பதிவிடலாம்.

உதாரணம்:

  • உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சமாளித்த சவால்களின் கதைகளைப் பகிரலாம்.
  • உங்கள் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சிக்கல்களை சமாளிக்க டிப்ஸ், வழிகாட்டுதல்களை பகிரலாம்.
  • சிந்திக்க வைக்கும் வகையில் தொழில் துறை சம்பந்தமான ட்ரெண்ட்டுகள், செய்திகள் உடன் உங்கள் கருத்துகளையும் பகிரலாம்.

லிங்க்ட்இன் அல்காரிதம் ஆக்டிவாக உள்ள யூசர்களுக்கு வெகுமதி அளிக்கிறது. எனவே, நீங்கள் அடிக்கடி போஸ்ட் செய்வதால், உங்கள் தெரிவுநிலையை அதிகமாக்கி ஃபாலோயர்களை அதிகரிக்க வழிவகுக்கும்.

linkedin

3. எங்கேஜ் வித் ஆடியன்ஸ்:

லிங்க்ட்இன் ஃபாலோயர்களை அதிகப்படுத்துவது என்பது கன்டென்டுகளை வெளியிடுவது மட்டுமல்ல, அது உறவுகளை உருவாக்குவது பற்றியது. ஃபாலோயர்களுடன் எங்கேஜிங்காக இருப்பது அவர்களிடம் நம்பிக்கை உணர்வை வளர்ப்பதற்கு முக்கியமானது. அதற்கு கீழே சொல்லப்படும் முயற்சிகளை செய்யுங்கள்.

* உங்கள் போஸ்ட்டுக்கு வரும் கமெண்ட்களுக்கு பதிலளியுங்கள். சிந்தனைகளை தூண்டும் பதில் ஏற்கனவே உள்ள ஃபாலோயர்களுடனான உங்களின் உறவை வலுப்படுத்துவோடு, உங்களின் கன்டென்ட் மற்றவர்களின் ஃபீட்-களில் பகிரும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

பிற போஸ்ட்டுகளுக்கு லைக், கமென்ட் செய்வது மற்றும் பகிர்வதன் மூலம் மற்றவர்களுடன் எங்கேஜிங்காக இருங்கள். இப்படி இன்ட்ராக்ட் செய்வதனால் உங்கள் மீதான பார்வையை அதிகரிப்பதோடு அது பரஸ்பர எங்கேஜிங்கிற்கு வழிவகுக்கும்.

* சம்பந்தப்பட்ட லிங்க்ட்இன் குரூப்களில் சேர்ந்து அதில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று உங்களை நல்ல சிந்தனைமிக்க தலைவராக நிலைநிறுத்த முயற்சியுங்கள்.

நீங்கள் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான மக்கள் உங்கள் பெயரைப் பார்ப்பார்கள். அது உங்களை ஃபாலோ செய்ய வழிவகுக்கும்.

4. ஹேஷ்டேக், கீவேர்டுகளை பயன்படுத்துங்கள்:

ஹேஷ்டேக்ஸ் மற்றும் கீவேர்டுகள் உங்களின் போஸ்ட்களுக்கான ரீச்சை அதிகரிக்கும். உங்கள் தொழில் தொடர்புடைய ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தவும். இது உங்களின் நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ளவர்களும் உங்களின் பதிவை பார்க்க வழிவகுக்கும்.

* நல்ல முடிவுகளைப் பெற ஒரு பதிவுக்கு 3 முதல் 5 ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தவும்.

* முக்கியமான அதேநேரம் பிரபலமான ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தவும். (எ.கா. Entrepreneurship, #Leadership, #Marketing போன்றவை)

கூடுதலாக, சில கீவேர்டுகளை உங்கள் பதிவுடன் எம்பெட் செய்வது குறிப்பாக முதல் சில வரிகள், லிங்க்ட்இன் தேடல்களில் உங்கள் கன்டென்ட்டை முன்னிலைப்படுத்த உதவும். இது ஃபாலோயர்களை அதிகப்படுத்த உதவும்.

5. என்கேஜிங்கான விஷுவல் கன்டென்ட்டை ஷேர் செய்யலாம்:

டெக்ஸ்ட்களை தாண்டி விஷுவல் கன்டென்ட்டின் ரீச் அதிகமாக இருக்கும். இமேஜ், இன்போகிராபிக்ஸ் மற்றும் வீடியோக்கள் நல்ல எங்கேஜிங்கை ஏற்படுத்தலாம். நீங்கள் பகிர வேண்டியது இங்கே...

  • தொழில் பற்றிய ஆலோசனை மற்றும் நுண்ணறிவை வழங்கும் ஷார்ட் வீடியோக்கள் ஷேர் செய்யலாம்.
  • ட்ரெண்ட் மற்றும் டேட்டாக்களை சுருக்கமாக கூறும் இன்போகிராபிக்ஸ்.
  • பிஹைண்ட் தி சீன் படங்களை பகிரலாம். அது உங்கள் பிராண்டை மனிதாபிமானமாக கொண்டு சேர்க்கலாம்.

உங்கள் கன்டென்ட் எவ்வளவு அதிகமாக எங்கேஜிங்காக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது பகிரப்படும். இது புதிய ஃபாலோயர்கள் கிடைக்க வழிவகுக்கும்.

linkedin

6. லிங்க்ட்இன் அம்சங்களைப் பயன்படுத்தவும்:

உங்களின் ரீச்சை அதிகப்படுத்த லிங்க்ட்இன் தளத்தில் கிடைக்கும் அம்சங்களை பயன்படுத்தலாம். அவை:

லிங்க்ட்இன் கட்டுரைகள் - பெரிய கட்டுரைகளை வெளியிடுவது உங்களின் நிபுணத்துவத்தை இன்னும் விரிவான முறையில் வெளிப்படுத்த உதவும். லிங்க்ட்இன் அல்காரிதம் மூலம் உங்கள் கட்டுரைகள் அடிக்கடி எடுக்கப்படுவது உங்களுக்கான ஃபாலோயர்களை அதிகப்படுத்தும்.

கருத்துக் கணிப்புகள் - உங்கள் நெட்வொர்க்கில் உள்ளவர்களுக்கு ஏற்ப கருத்துக் கணிப்புகளை உருவாக்கி, அதில் அவர்களை பங்கேற்க செய்யலாம். இது அவர்களை எங்கேஜிங்காக வைப்பதோடு, உங்களின் கருத்துக் கணிப்புகள் அதிகம் ஷேர் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

லிங்க்ட்இன் கதைகள் - ஃபாலோயர்களிடம் ஈடுபாட்டுடன் இருக்க கதைகள் சிறந்த வழி மட்டுமல்ல, வேடிக்கையான வழியும்கூட. எனவே, சின்ன சின்ன உண்மைக் கதைகளை பகிரலாம்.

இந்த அம்சங்களை தொடர்ந்து பயன்படுத்துவது உங்களின் கன்டென்ட் ஸ்டேட்டர்ஜியில் பன்முகத்தன்மையை கொடுக்கிறது. இது ஃபாலோயர்களை எங்கேஜிங்காக வைத்திருப்பதோடு புதிய ஃபாலோயர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வழிவகுக்கும்.

7. இன்ஃப்ளூயன்சர்கள் உடன் சேரவும்:

உங்கள் தொழில் துறையில் உள்ள மற்ற லிங்க்ட்இன் பயனர்களுடன் சேர்த்துக் கொள்ளும்போது உங்களின் ஃப்ரொஃபைல் அவர்களின் ஃபாலோயர்களிடம் சேரலாம். இது புதிய ஃபாலோயர்களை கொண்டுவரலாம்.

இணை ஆசிரியர் கட்டுரைகள் (Co-author articles): இன்டஸ்ட்ரியில் உள்ள ட்ரெண்ட்ஸ் தொடர்பான தலைப்புகளில் ஆர்வமுள்ள விவாதத்தை ஏற்படுத்த லிங்க்ட்இன்னில் லைவ் செஷன்களை நடத்தலாம்.

ஒருவருக்கொருவர் தங்களின் கன்டென்ட்களை பகிர்ந்து விளம்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுடன் கூட்டணி சேர்வது, உங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும், ஃபாலோயர்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கவும் உதவும்.

இப்படியாக கன்சிஸ்டன்ஸி, குவாலிட்டி உடன் எங்கேஜிங் செய்வதை தொடர்ந்தால், ஒவ்வொரு மாதமும் 1,000 பேர் உங்கள் லிங்க்ட்இன் பக்கத்தை ஃபாலோ செய்வது என்பது எட்டக்கூடிய இலக்காக அமையும்.

உங்கள் ப்ரொஃபைலை மேம்படுத்துவதன் மூலமும், தொடர்ந்து போஸ்டுகளை பதிவிடுவதன் மூலமும், ஃபாலோயர்களுடன் இன்ட்ராக்ட் செய்வதன் மூலமும், லிங்க்ட்இன் தளத்தின் அம்சங்களை பயன்படுத்துவதன் மூலமும் உங்களின் பிராண்டை பிரபலப்படுத்தும் விசுவாசமிக்க ஃபாலோயர்களை உருவாக்க முடியும். இந்த உத்திகளை இன்றே பயன்படுத்தத் தொடங்குங்கள். அதன்பின் உங்கள் லிங்க்ட்இன் நெட்வொர்க் எப்படியான மாற்றத்தை அடையும் என்பதை பாருங்கள்.

உறுதுணைக் கட்டுரை: சானியா ஆசம் கான்


Edited by Induja Raghunathan