'GB WhatsApp' - உங்கள் வாட்ஸ்அப் கணக்கை தடை செய்துவிடும் தெரியுமா?
ஜிபி வாட்ஸ்அப் பாதுகாப்பானதா?
வாட்ஸ்அப்’பின் குளோனிங் எனச் சொல்லப்படும் அப்ளிகேஷன் ஜிபி வாட்ஸ்அப். தற்போது இந்த ஜிபி வாட்ஸ்அப் அதிவேகமாக வளர்ந்து வருகிறது . இது பிரபலமடைவதற்குக் காரணம், வாட்ஸ்அப்பில் தடைசெய்யப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் இதில் உள்ளது.
GB Whatsapp வழங்கும் அம்சங்கள்!
ஜிபி வாட்ஸ்அப்பில் ஆட்டோ ரிப்ளை, கூடுதல் புகைப்படங்களை அனுப்பும் வசதி, அதிக தீம் மாற்றும் வசதி, ஸ்டேட்டஸ் டவுன்லோடு செய்யும் வசதி, மெசேஜ் பில்டர் போன்ற வாட்ஸ்அப்'பில் தடைசெய்யப்பட்டுள்ள பிற வசதிகளும் உள்ளன.
மேலும், வாட்ஸ்அப் வீடியோக்களை உங்களுக்கு விருப்பமான மீடியா ப்ளேயரில் பார்க்கும் வசதி, ஆன்லைனில் இருப்பதை மறைக்கும் வசதி, வாட்ஸ்அப்பில் டிக் (Tick) அடையாளங்கள் அனுப்பியவருக்கு சென்றடையாமல் தவிர்க்கும் வசதி என்பது போன்ற அம்சங்களும் உள்ளன. அதேபோல் வாட்ஸ்அப் மெசேஜ் பிராட்கேஸ்ட் வரம்பு 600 நபர்கள் வரை இதில் அனுமதிக்கப்படுகிறது.
ஜிபி வாட்ஸ்அப்பை எவ்வாறு பதிவிறக்குவது?
இத்தனை அம்சங்கள் இருந்தாலும், இந்த வெர்சன் பாதுகாப்பானதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இந்த ஆப் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதால் பிளே ஸ்டோர் அல்லது பிற நம்பகமான Android ஆப் ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இதை APK பதிவிறக்க தளங்களிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இப்படி பதிவிறக்கம் செய்வது தனியுரிமைக் கொள்கைகள் விஷயத்தை ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்த பதிவிறக்கங்கள் எப்போதும் பாதுகாப்பாக இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிகவும் ஆபத்தானது என்னவென்றால், ஜிபி வாட்ஸ்அப் உங்கள் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்கை தடை செய்ய முடியும் என்கிறது.
"ஆதரிக்கப்படாத அப்ளிகேஷன்கள், வாட்ஸ்அப் பிளஸ், ஜிபி வாட்ஸ்அப் அல்லது தொலைபேசிகளுக்கு இடையில் உங்கள் வாட்ஸ்அப் அரட்டைகளை நகர்த்துவதாகக் கூறும் அப்ளிகேஷன்கள், வாட்ஸ்அப்'பின் மற்ற சில வெர்சன்கள் போன்ற அதிகாரப்பூர்வமற்ற அப்ளிகேஷன்கள் மூன்றாம் தரப்பினரால் உருவாக்கப்பட்டவை மற்றும் எங்கள் சேவை விதிமுறைகளை மீறுகின்றன.
"இந்த மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை வாட்ஸ்அப் ஆதரிக்கவில்லை. ஏனெனில் அவற்றின் பாதுகாப்பு நடைமுறைகளை எங்களால் சரிபார்க்க முடியாது," என்பது வாட்ஸ்அப் FAQs சொல்லும் மிக முக்கிய அறிவுரை ஆகும். அதனால் ஜிபி வாட்ஸ்அப் உங்கள் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்கை தடை செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஜிபி வாட்ஸ்அப்பை பதிவிறக்குவது பாதுகாப்பானதா?
வாட்ஸ்அப்'பின் கேள்விகள் படி, ஜிபி வாட்ஸ்அப்'பை பதிவிறக்குவது நிச்சயமாக பாதுகாப்பானது அல்ல. முதலாவதாக, இது நம்பகமான தளத்திலிருந்து வரவில்லை. இதனால் பாதுகாப்பற்ற ஒன்றாகவே ஜிபி வாட்ஸ்அப் இதுவரை பார்க்கப்படுகிறது.