ஜிடிபி சரிவினால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து, ரூ.84.74 ஆக உள்ளது!
ரூபாய் மதிப்பு 84.49-லிருந்து வீழ்ச்சியடைந்து 84.74 ஆக உள்ளது. இதுவரை இல்லாத புதிய வீழ்ச்சி நிலையை ரூபாய் மதிப்பு எட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் மதிப்பிழந்து நேற்று 84.70 என்று முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று காலை நிலவரப்படை மேலும் பலவீனமடைந்து டாலர் ஒன்றிற்கு ரூ.84.74 ஆக உள்ளது.
ரூபாய் மதிப்பு 84.49-லிருந்து வீழ்ச்சியடைந்து, 84.74 ஆக உள்ளது. இதுவரை இல்லாத புதிய வீழ்ச்சி நிலையை ரூபாய் மதிப்பு எட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஏப்ரல்-ஜூன் 2024 காலாண்டில் 6.7 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பரில் 8.1 சதவீதமாகவும் இருந்த நிலையில், 2024 ஜூலை-செப்டம்பரில் 5.4 சதவீதமாக 7 ஆண்டுகளின் குறைவை எட்டியது.
ஜிடிபி வீழ்ச்சியடைந்துள்ளது எனில், நிதிக்கொள்கை கொஞ்சம் தளர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதாவது, ஆர்பிஐ ரெபோ ரேட்டைக் குறைக்க வாய்ப்புள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பது இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள விகிதங்களுக்கு இடையிலான வேறுபாட்டை விரிவுபடுத்தும், இதன் விளைவாக உள்நாட்டு சந்தையில் இருந்து பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் இதனால் ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக கடும் அழுத்தங்களைச் சந்திக்கும்.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 1.16 லட்சம் கோடி முதலீட்டைத் திரும்ப பெற்றுள்ளனர். அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் அவுட் ஃப்ளோவும் அதிகம் இருந்தால் அயல்நாட்டு நாணயத்திற்கு அதிக தேவை ஏற்படும். இதனால் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது.
இதோடு, இறக்குமதியாளர்களின் டாலர் தேவையும் அதிகரிப்பதாலும் ரூபாய் மீது அதன் தாக்கம் எதிர்மறையாகவே இருக்கும் என்று இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Stock News: வலுவாகத் தொடங்கிய பங்குச் சந்தை - ஸ்ரீராம் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ் ஏற்றம்!