Gold Rate Chennai: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - ரூ.64,000-க்கு கீழ் குறைந்தது தங்கம் விலை!
கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை ரூ.64,000-க்கு கீழாக குறைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
புதிய உச்சங்களைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக சரியத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. தங்கம் வாங்க இதுவே சரியான தருணம் என வர்த்தகர்கள் கூறுவதால், நகை வாங்குவோருக்க்கு புதிய நிம்மதி பிறந்துள்ளது. தங்கம் விலை ரூ.64,000-க்கு கீழாக குறைநந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 குறைந்து ரூ.8,010 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 குறைந்து ரூ.64,080 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 குறைந்து ரூ.8,738 ஆகவும், சவரன் விலை ரூ.352 குறைந்து ரூ.69,904 ஆகவும் இருந்தது. இந்த அதிரடி விலை குறைவு இன்றும் தொடர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (28.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.54 குறைந்து ரூ.8,684 ஆகவும், சவரன் விலை ரூ.432 குறைந்து ரூ.69,472 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (28.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.105 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,05,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடரும் அதிரடி நடவடிக்கைகளின் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவியது. அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததும் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சங்களை எட்ட காரணமாக அமைந்தது.
தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஓரளவு மீண்டெழத் தொடங்கியுள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையும் சற்றே குறைந்து வருவதால் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்று தினங்களாக வெகுவாக குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,690 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,680 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,684 (ரூ.54 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,472 (ரூ.432 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,690 (ரூ.50 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,680 (ரூ.400 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,684 (ரூ.54 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,472 (ரூ.432 குறைவு)
Edited by Induja Raghunathan