Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ராக்கெட் வேகத்தில் தங்கம் ரேட் - ரூ.7,000-ஐ நெருங்கும் கிராம் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது, தங்கம் வாங்க விழைவோருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,200 அளவுக்கு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Gold Rate Chennai: ராக்கெட் வேகத்தில் தங்கம் ரேட் - ரூ.7,000-ஐ நெருங்கும் கிராம் விலை!

Monday September 23, 2024 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது, தங்கம் வாங்க விழைவோருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,200 அளவுக்கு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.75 உயர்ந்து ரூ.6,960 ஆகவும், சவரன் விலை ரூ.600 உயர்ந்து ரூ.55,680 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து ரூ.7,593 ஆகவும், சவரன் விலை ரூ.656 உயர்ந்து ரூ.60,744 ஆகவும் இருந்தது. இந்த விலை உயர்வு நீடிக்கும் நிலையில், சவரன் விலை ரூ.56,000-ஐ நெருங்கும் சூழல் நிலவுகிறது.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (23.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.6,980 ஆகவும், சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.55,840 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.7,615 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.60,920 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் திங்கள்கிழமை (23-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.98 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.98,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனையாகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை சமீபத்தில் குறைத்தது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதேபோல், உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்தப் போக்கு நீடிக்கலாம் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,980 (ரூ.20 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.55,840 (ரூ.160 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,615 (ரூ.22 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,920 (ரூ.176 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan