Gold Rate Chennai: உச்சம் தொடும் தங்கம் விலை - ரூ.55,000+ ஆனது சவரன் ரேட்!
கடந்த மூன்று வர்த்தக தினங்களில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டதன் விளைவாக உச்சம் தொடுகிறது ஆபரணத் தங்கம் விலை. இது, நகை வாங்க விழைவோருக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று வர்த்தக தினங்களில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டதன் விளைவாக உச்சம் தொடுகிறது ஆபரணத் தங்கம் விலை. இது, நகை வாங்க விழைவோருக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.6,855 ஆகவும், சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.54,960 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 உயர்ந்து ரூ.7,489 ஆகவும், சவரன் விலை ரூ.352 உயர்ந்து ரூ.59,912 ஆகவும் இருந்தது. தற்போது, இந்த விலை அதிகரிப்பு தொடர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (16.9.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.6,880 ஆகவும், சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.55,040 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.7,505 ஆகவும், சவரன் விலை ரூ.128 உயர்ந்து ரூ.60,040 ஆகவும் இருக்கிறது.
ஆக, கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,400 அளவுக்கு அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
வெள்ளி விலை:
சென்னையில் திங்கள்கிழமை (16-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.98 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.98,000 ஆகவும் விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் ஓர் அவுன்ஸ் தங்கம் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. அத்துடன், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித குறைப்புக்கான எதிர்பார்ப்பு நிலைத்திருக்கிறது. அதேபோல், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,880 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.55,040 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,505 (ரூ.16 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,040 (ரூ.128 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan