Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: மீண்டும் குறைந்தது தங்கம் விலை; சவரனுக்கு இவ்வளவா?

தங்கம் விலை இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Gold Rate Chennai: மீண்டும் குறைந்தது தங்கம் விலை; சவரனுக்கு இவ்வளவா?

Tuesday March 26, 2024 , 2 min Read

தங்கம் விலை இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

தங்கம் விலை நிலவரம் (26/03/2024):

நேற்று சரசரவென உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சற்றே சரிந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

சென்னையில் நேற்றைய இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 6,205 ரூபாய்க்கும், சவரன் 49,640 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து 6,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 49,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து 6,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 53,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் குறைந்து 80 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோவிற்கு 300 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

gold

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கக்கூடும் என்பது உறுதியாகியுள்ளதால், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 66 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்த புதிய உச்சம் தங்கம் வாங்குவோரின் ஆர்வத்தை குறைத்துள்ளதால் உள்நாட்டு சந்தையில் விலை சற்றே குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,200 (மாற்றம்: ரூ.5 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.49,600 (மாற்றம்: ரூ.40 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,670 (மாற்றம்: ரூ.5 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,360 (மாற்றம்: ரூ.40 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,15 (மாற்றம்: ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,920 (மாற்றம்: ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,671 (மாற்றம்: ரூ. 11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 53,368 (மாற்றம்: ரூ.88 குறைவு)