Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வாழ்ந்தான்..! செம்மையா வாழ்ந்தானு..! சொல்ற அளவுக்கு Successful-a வாழ சில வழிகள்..!

ஒரு பழக்கத்தை உங்கள் வாழ்வில் வழக்கமாக்குவதற்கு முன் நீங்கள் சில அடிப்படை வினாக்களை கேட்க வேண்டியது அவசியம். அவை என்ன? எப்படி பழக்கவழக்கத்தை சரிசெய்து வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்று தெரிந்து கொள்ள உதவும் கட்டுரை!

வாழ்ந்தான்..! செம்மையா வாழ்ந்தானு..!  சொல்ற அளவுக்கு Successful-a வாழ சில வழிகள்..!

Saturday November 27, 2021 , 4 min Read

நம் வாழ்வில் அனைவருக்குமே ஒரு தலைசிறந்த வெற்றியாளராக வர வேண்டும் என்கிற ஆசை இருக்கக்கூடும். ஆனால், அதில் வெகு சிலரே தனது கனவை நிறைவேற்றி வெற்றி பெறுகிறார்கள்.

 

வெற்றி பெற்றவர்களும், தோல்வியுற்றவர்களும் ஒரே குறிக்கோள்களைக் கொண்டு இருந்தாலும், இவர்களுக்கிடையில் உள்ள சிறு வித்தியாசம் என்னவென்றால்,  வெற்றியாளர்கள் எடுத்த தொடர்ச்சியான சிறிய முன்னேற்றங்கள் மட்டுமே.

Success

உங்கள் பழக்கங்கள் உங்கள் மதிப்புகளாக மாறும், உங்கள் மதிப்புகள் உங்கள் விதியாக மாறும் என்பர். உதாரணமாக உங்களது உணவுப் பழக்கவழக்கங்களே உங்கள் எடை  பருமனுக்கான காரணம் ஆகும்.

 

அப்படிப்பட்ட நம் பழக்கவழக்கங்களை 1% Better Everyday என்கிற விதியை பின்பற்றுவதன் மூலம் நமது இலக்கை எளிதாக அடைந்து வாழ்வில் சிறந்த வெற்றியாளராகவும் திகழ முடியும்.

 

1% Better Everyday விதியை எளிமையாகக் கூற வேண்டுமென்றால்,  நீங்கள் ஒரு பனிக்கட்டியை உருக்க எண்ணி 15 நிமிடங்களாக 35  டிகிரியிலிருந்து மெல்ல மெல்ல குறைத்து 22 வது டிகிரியில் தொடர்ந்து  வெப்பமூட்டி வருகிறீர்கள் என வைத்துக் கொள்ளவோம். அந்நிலையில், அப்பனிகட்டியில் எந்தவொரு மாற்றமும் நிகழாததை போன்று தோன்றலாம், இதனால் உங்கள் உழைப்புக்கு எந்த பயனுமில்லை என்றாகாது. அவை அனைத்தும் சேமிக்கப்படுகிறது. அனைத்து மாற்றங்களும் 21வது டிகிரியில் வெப்பமூட்டும் போது அந்த பனிக்கட்டி உருகத் தொடங்கும்.

1% Better Everyday Rule!


இதுபோன்று நம் பழக்கவழக்கத்தில் 1% Better Everyday என்கிற விதியை பின்பற்றி தொடர் சிறு சிறு மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் எப்படி நமது இலக்கை அடைய முடியும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.


ஒரு பழக்கத்தை உங்கள் வாழ்வில் வழக்கமாக்குவதற்கு முன் நீங்கள் சில அடிப்படை வினாக்களை கேட்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க எண்ணினால்,

1. நான் ஏன் உடல் எடையை குறைக்க வேண்டும்?


2. உண்மையிலேயே உடல் எடையை குறைப்பதில் எனக்கு தீராப்பசி அல்லது தேவை இருக்கிறதா?


3. உடல் எடையை குறைப்பதன் மூலம் என் வாழ்வில் எவ்விதமான மாற்றத்தை உருவாக்கப் போகிறது?


இது போன்று ஒரு விசயத்தை வழக்கமாக்கிக் கொள்வதற்கு முன் மேலே குறிப்பிட்ட கேள்விகளை உங்களுக்குள் கேட்டு அதன் தேவையை நீங்கள் முதலில் உணர வேண்டும். தேவையை உணராததே நல்பழக்கத்தை கைவிடுவதற்கான முக்கியக் காரணம்.


பழக்கத்தை தேர்வு செய்தபின் நீங்கள் ஒரு தீர்மானத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

நான் இத்துறையின் மீது தீராக்காதல் கொண்டுள்ளதால், இதை நான் என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து புத்துணர்வுடன் செயல்படுவேன் என்கிற தீர்மானத்தையும் தெளிவாக எடுங்கள்.


இப்போது நாம் ஒரு பழக்கத்தை நம் வாழ்வின் வழக்கமாக மாற்றுவதற்கான முக்கிய விதிகளை காண்போம் :


1. விழிப்புணர்வுடன் செயல்படல் :


சுய விழிப்புணர்வு இல்லாததே அனைத்திற்க்கும் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது.


* சுயமதிப்பீடு செய்தல்:


உங்கள் தினசரி நடவடிக்கைகளுக்கு ஒரு பட்டியலை உருவாக்கி அதற்கு மதிப்பெண்களையும் கொடுங்கள்.


உதாரணமாக : உங்களுடைய ஒரு நாளில் நீங்கள் செய்த நல்லப் பழக்கங்களுக்கு 1 என்ற மதிப்பும், தீயப் பழக்கங்களுக்கு -1 என்ற மதிப்பையும் கொடுங்கள். இறுதியாக இந்த மதிப்பெண் அட்டையை கொண்டு உங்களுடைய தினசரி நடவடிக்கையை கவனியுங்கள், முதலில் நாம் எங்கு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதை எளிதாகர்க் தெரிந்து கொள்ள இது உதவும்.


ஏனென்றால் ஒரு சிலருக்கு நல்ல பழக்கத்தை உருவாக்குவதைக் காட்டிலும் தீய பழக்கத்திலிருந்து விலகினாலே அவர்கள் தெளிவாக சிந்தித்து இலக்கை அடைய முடியும்.

Break Bad Habits

* தள்ளிப்போடும் பழக்கத்தை நிறுத்துதல்:

தள்ளிப்போடாமல் ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய விரும்பினால், முந்தைய இரவே அன்றைய நாளில் செயலாற்றக்கூடிய செயல்களை Reminder மூலம் Schedule பண்ணுவதன் மூலம் தள்ளிப்போடும் பழக்கத்தைக் குறைக்க முடியும்.


உதாரணமாக :

1. நான் நாளை காலை 4 மணிக்கு எழுவேன்.

2. காலைக்கடனிற்கு பிறகு அரை மணி நேரம் யோகா பயிற்சியில் ஈடுபடுவேன்.

3. காலை உணவிற்குப் பிறகு, எனது வாசிக்கும் பழக்கத்திற்காக 15 நிமிடம் புத்தகம் படிக்க செலவிடுவேன்.


இவ்வாறு நாம் ஒரு செயலை எப்போது செய்யப் போகிறோம், எப்படி செய்யப் போகிறோம் என்று தெளிவாக அட்டவணைப்படுத்துவதன் மூலம் தள்ளிப்போடும் பழக்கத்தைக் குறைக்க முடியும்.

Task Scheduling

* சாதகமான சுற்றுச்சூழலை உருவாக்குதல் :

உங்கள் சுற்றுச்சூழலைப் பொறுத்து உங்கள் பழக்கம் மாறும். உதாரணமாக நீங்கள் கிட்டார் பயிற்சி செய்ய விரும்பினால். உங்கள் கிட்டார் ஸ்டாண்டை அறையின் நடுவில் கண்ணிற்கு புலப்படும் படி வைக்கவும்.


மேலும், நீங்கள் கடைப்பிடிக்க விரும்பும் பழக்கத்திற்கு தொடர்பான சுவரொட்டிகளை உங்களைச் சுற்றியுள்ள சுவரில் ஒட்டி கண்ணிற்கு புலப்படும் படியும் அமைக்கவும்.

Create Good Environment

2. கவனத்தை கவரும் படி பழக்கத்தை அமைத்தல் :

ஒரு செயலில் அதீத ஆர்வம் கொள்வதற்கு டோபமைன் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்களுக்கு நீங்களே அல்லது மற்றவர்கள் மூலமாகவோ சிறு சிறு Rewards & Recognition பெறுவதன் மூலமாக நம்முடைய பழக்கத்தில் அதீத ஆர்வம் காட்ட முடியும்.

உதாரணமாக : தொடர்ந்து 30 நாள்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பழக்கத்தை தொடர்ந்தால் இரண்டு நாள் கேரளா சுற்றுலா செல்வோம் என்று திட்டமிடுதல் மூலம் அந்த பழக்கத்தை தொடர்வதில் ஒரு வித எதிர்பார்ப்பை உண்டாக்கும்.


3. பழக்கத்தை எளிதாக்க முயல்தல் :


ஒரு பழக்கம் ரொம்ப கடினமாக இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கைவிட்டுவிடுவோம்.மிகவும் எளிதாக இருந்தாலும் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அதனால் நாம் தேர்ந்தெடுத்த பழக்கத்தை சரியான முறையில் கையாள வேண்டும்.


உதாரணமாக : எடுத்தவுடன் 10 கிலோமீட்டர் மாரத்தான் ஓட எண்ணாமல், முதல் ஒரு வாரம் காலையில் நடக்க பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு படிப்படியாக வேகத்தை கூட்டிக் பழக்கத்தை தொடர்வதே சிறந்தது.

* இரண்டு நிமிட விதியை கடைபிடித்தல் :

தினமும் எனது உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு நிமிடம் தியானத்தில் ஈடுபடுவேன். நேரம் குறைவாக தேவைப்படுவதால் பழக்கத்தை எளிதாக தொடர முடியும். சில வாரங்களுக்கு பிறகு தியான நேரத்தை கூட்டிக் கொள்ளலாம்.

Satisfaction

4. திருப்திகரமான மனநிலையை அடைதல் :

திருப்திகரமான மனநிலையை அடைதல் என்பது மிக முக்கியம். அதுவே பழக்கத்தைத் தொடர வழிவகுக்கும். ஒரு சில நேரங்களில் நமது பழக்கத்தைத் தொடர முடியாமலும் போகலாம் அதனால் தாங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. 100% முழுமை அடைதல் சாத்தியமில்லை. சில நாட்கள் தவறினாலும் பரவாயில்லை ஒரிரு நாட்களிலே மீண்டும் பழக்கத்தை தொடருங்கள்.


இறுதியாக,வெற்றியாளர்களுக்கும் தோல்வியுற்றவர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு கவனம். நாம் கவனத்துடன் நமது பழக்கத்தை ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுயபரிசீலனை செய்து கொள்வதன் மூலம் நம் இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ளோம் என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.