Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வர்த்தக மேம்பாட்டிற்கு வழி காட்டும் 80/20 விதி!

வர்த்தக செயல்திறனில் 80/20 விதி செலுத்தும் தாக்கத்தை புரிந்து கொண்டு, உங்கள் வர்த்தக உத்திகளை மேம்படுத்திக்கொள்ளும் வழிகளை கண்டறியுங்கள்.

வர்த்தக மேம்பாட்டிற்கு வழி காட்டும் 80/20 விதி!

Thursday February 08, 2024 , 3 min Read

'Pareto Principle' அல்லது சமத்துவமின்மை விதி என சொல்லப்படும் 80-20 விதி, பல்வேறு நிகழ்வுகளில் 80 சதவீத விளைவுகள் 20 சதவீத காரணங்களால் உண்டாவதாக தெரிவிக்கிறது. எளிதாக சொல்வது என்றால், எந்த செயலிலும், 80 சதவீத பலன், மொத்த முயற்சியின் 20 சதவீதத்தால் வருவதாகும்.

இத்தாலிய பொருளாதார மேதை வில்பிரடோ பெரேட்டோ இந்த கோட்பாட்டை முதலில் கண்டறிந்தார். இத்தாலி நாட்டில் 20 சதவீத மக்களிடம் 80 சதவீத நிலம் இருப்பதையும், செல்வமும் இதே விகிதத்தில் அமைந்திருப்பதையும் கவனித்தன் மூலம் இந்த கோட்பாட்டை கண்டறிந்தார்.

இதே கோட்பாட்டை வர்த்தகத்திற்கு பொருத்திப்பார்த்து 80 சதவீத விற்பனை 20 சதவீத வாடிக்கையாளர்கள் மூலம் வருவதாக கொள்ளலாம். அல்லது 20 சதவீத ஊழியர்களால் சாத்தியமாவதாக கருதலாம். மென்பொருள் உருவாக்கத்திலும் இதே போன்ற விகிதம் சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்ட் சேவைகளில் 80 சதவீத பிழைகளும், கோளாறுகளும் 20 சதவீத குறைகளால் (Bug) வருகின்றன. இந்த விகிதம் மாறலாம் என்றால், சமமில்லாத விநியோகத்திற்கான அடிப்படை மாறுவதில்லை.

Pareto principle

உங்கள் வர்த்தகத்தில் இந்த 80/20 சதவீத விதியை அமல் செய்து செயல்திறனை அதிகரித்து, விற்பனை, வர்த்தகத்தை வளர்ப்பதற்கான 6 வழிகள் இதோ:

வாடிக்கையாளர் கண்டறிதல்

வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அளவு லாபம் சிறிய அளவு வாடிக்கையாளர்களிடம் இருந்து வருகின்றன. மேலே பார்த்தது போல, 80 சதவீத விற்பனை 20 சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்து வரலாம். இந்த முக்கியமான 20 சதவீத வாடிக்கையாளர்களை கண்டறிவது உங்கள் வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். இதே போன்ற வாடிக்கையாளர்களை கண்டறியலாம் :

உங்கள் சிறந்த வாடிக்கையாளர்களை அறிய:

வழக்கமானவர்கள்

விற்பனை தகவல்களை அலசி, தொடர்ந்து வருகை தரும் வாடிக்கையாளர்களை கண்டறியவும். வாராந்திர, மாதாந்திர விற்பனை தகவல்கள் இதற்கு உதவும்.

பார்வையாளர்கள் விவரம்

சமூக ஊடகம் மூலமாக அல்லது இலக்கு விளம்பரங்கள் வாயிலாக என எவ்வாறு வாடிக்கையாளர்கள் உங்கள் வர்த்தகத்தை வந்தடைந்தனர் என பார்க்கவும். 20 சதவீத வாடிக்கையாளர்கள் வரும் வழிகளை அறிவது அதே வழிகளை பயன்படுத்து மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவரலாம்.

வாடிக்கையாளர்கள் புழங்குமிடம்

விற்பனை முனைகளை கொண்டு உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கே உள்ளனர் என்பதை அறியவும். இருப்பிடங்களை அறிவதன் மூலம் எளிதாக விளம்பரம் செய்யலாம். குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இதன் மூலம் கவரலாம்.

லாபம் தரும் சேவைகள்

வர்த்தகத்தில் ஒரு சில பொருட்கள் 80 சதவீத விற்பனையை கொண்டு வரலாம். அதிகம் பிரபலம் ஆகாத பொருட்களை முன்னிறுத்துவதைவிட முன்னணி 20 சதவீத பொருட்களில் கவனம் செலுத்தலாம். தரத்தை அதிகரிக்க அப்டேட்களை அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்கள் மேலும் பொருட்களை வாங்க தூண்டலாம்.

இணைய போக்குவரத்து

தேடியந்திர உத்தியிலும் (SEO), 80/20 விதி வருகிறது. 20 சதவீத போக்குவரத்து, 20 சதவீத குறிச்சொற்கள் மூலம் வரலாம். இந்த குறிப்பிட்ட குறிச்சொற்களை அடையாளம் காணவும். சமூக ஊடக தகவல்கள் அல்லது தேடியந்திர அலசல் மூலம் இதை அறியலாம். இந்த தகவல்களை கொண்டு, மார்க்கெட்டிங்கில் இந்த குறிச்சொற்களை அதிகம் இடம்பெற வைத்து இணைய போக்குவரத்தை மேலும் மேம்படுத்தலாம்.

80/20 rule

நேர நிர்வாகம்

சரியான நேர முதலீடு முக்கியம். 80/20 விதியை கொண்டு, 80 சதவீத விற்பனைக்கு வழிவகுக்கும் 20 சதவீத நிறுவன இலக்குகளை கண்டறியவும். இந்த இலக்குகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை அடைய நேரம் ஒதுக்கவும்.

செலவு சிக்கனம்

நிறுவனத்தின் 80 சதவீத செலவுகளுக்கு காரணமான 20 சதவீத அம்சங்களை கண்டறியவும். உற்பத்தி, விளம்பரம் என அதிகம் செலவாகும் பிரிவுகளை கண்டறிந்து செலவுகளை குறைக்க முடியுமா என பார்க்கவும். போதிய பலன் அளிக்காத செலவுகளை தவிர்த்து, லாபத்தை அதிகரிக்கும் பட்ஜெட் முடிவுகளை மேற்கொள்ளவும்.

சமூக ஊடக உள்ளடக்கம்

சமூக ஊடக பதிவுகளில் 80 சதவீத பகிர்வுகள் 20 சதவீத பதிவுகளால் வரலாம் என உணரவும். வாடிக்கையாளர்களை கவரும், அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து, பிராண்டை வலுவாக்கும் உள்ளடக்கத்தை கண்டறியவும். பின்னூட்டங்கள், விருப்பங்கள், பகிர்வுகள் போன்ற தகவல்களை பயன்படுத்திக்கொள்ளவும். இதே போன்ற உள்ளடக்கத்தை உருவாக்கி, தொடர்புடைய வாடிக்கையாளர்களை கவரலாம்.

தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan