இந்தியாவின் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் புதுமையாக்க கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்திய IInvenTiv 2025
மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இன்வெண்டிவ் 2025 (IInvenTiv ) தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியாவின் முன்னணி ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் வேளாண்மை, உயிரிநுட்பம், 3டி பிரிண்டிங் மற்று இதர வளரும் துறைகளில் தங்கள் கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களை காட்சிப்படுத்தினர்.
மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற 'இன்வெண்டிவ் 2025' (IInvenTiv 2025) தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியாவின் முன்னணி ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்; வேளாண்மை, உயிரிநுட்பம், 3டி பிரிண்டிங் மற்று இதர வளரும் துறைகளில் தங்கள் கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களை காட்சிப்படுத்தினர்.
இன்வெண்டிவ் 2025 கண்காட்சி, விக்ஸித பாரத் 2047 நோக்கத்தை அடையும் வகையில், தொழில்துறைக்கு ஏற்ற, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆய்வின் பலன்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைகிறது. ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 185 அரங்குகளில், ஐஐடி, என்.ஐ.டி, மற்றும் இதர என்.ஐ.ஆர்.எப் பட்டியலில் இடம்பெறும் முன்னணி 50 தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தங்கள் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தின.

மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் பிப் 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் இந்த கண்காட்சி நடைபெற்றது. முன்னணி ஆய்வு குழுக்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
“இந்த கண்காட்சி, தொழில்நுட்ப தலைவர்கள், பயனாளிகள், முதலீட்டாளர்களுடனான வட்டமேசை, மற்றும் எட்டாவது சிந்தன் ஷிவிர் ஆகியவை தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான புரிதலை அளித்ததாக, ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி தெரிவித்தார்.
“இன்வெண்டிவ் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பல வகை தொழில்நுட்பங்கள் இந்திய கல்வி நிறுவனங்களின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. தொழில்துறையிடம் இருந்து நல்ல எதிர்வினை கிடைத்துள்ளது. இந்த உரையாடல் எதிர்காலத்தில் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும்,” என டீன் (ICSR) மனு சந்தானம் தெரிவித்தார்.
இந்த ஆய்வு திட்டங்களை பார்வையிட இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மத்திய கல்வித்துறை வழிகாட்டுதலுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
“இந்த முறை ஐஐடி திருப்பதி ஏழு அரங்குகள் அமைத்தது. பல தொழில் நிறுவன பிரதிநிதிகள் எங்களை பின்னர் தொடர்பு கொண்டு பேசினர். கல்வி நிறுவனம் மற்றும் தொழில் துறை இடையிலான கூட்டிற்கான மேடையாக நிகழ்ச்சி அமைந்தது என் ஐஐடி திருப்பதி இயக்குனர் கே.என்.சத்யநாராயனா தெரிவித்தார்.
“இந்த நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க அனுபவமாக அமைந்தது. எங்கள் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்ததோடு, புதுமையாக்கம், பொருள் வளர்ச்சி, வளரும் நிறுவன போக்குகளுடன் அவர்கள் தொடர்பு கொள்ளவும் வழிவகுத்தது, என விஐடி துணை வேந்தர் காஞ்சனா பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

“முன்னணி பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை சந்தைக்கு பொருளாக வராமல் நின்று விடுகின்றன. இந்த நிலை மாறி, தொழில்நுட்ப சந்தைக்கு தயாராக இருக்கும் வகையில் மேடை அமைத்து தரும் நிகழ்ச்சியாக இது அமைகிறது,“ என ஐஐடி கவுகாத்தி இயக்குனர் தேவேந்திர ஜலிஹால் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில், வேளாண்மை துறையில் ஐஐடி கான்பூர் ஸ்டார்ட் அப் நிறுவனம் ScaNxt தனது ரசாயனம் இல்லாத மண் பரிசோதனை சாதனம் BhuParikshak காட்சிப்படுத்தியது. ஆழ் கற்றல் முறையில் இது செயல்படுகிறது.
திருவனந்தபுரத்தின் IISER மண் ஈரப்பத அளவை கண்காணிக்கும் தானியங்கி ரோவரை காட்சிப்படுத்தியது. உயிரி நுட்பத்துறையில், எஸ்.ஆர்.எம் பல்கலையின் குளுகோஸ் மற்றும் பயோவேஸ்டில் இருந்து எடுக்கப்பட்ட பயோசர்பகண்ட்ச் காட்சி படுத்தப்பட்டது.
என்.ஐ.டி அருணாசல பிரதேசம் மூலிகை சரும நல தீர்வுகளை காட்சிப்படுத்தியது. ஐஐடி மெட்ராஸ் RoBuoy, எனும் தானியங்கி தண்ணிருக்கு அடியில் செயல்படும் கிளைடரை காட்சிப்படுத்தியது. ஐஐடி கான்பூர், ஏஐ திறன் கொண்ட டிரோனை காட்சிக்கு வைத்திருந்தது.
ஐஐடி காந்திநகர், கங்கா எனும் பெயரில் சாட்ஜிபிடி பாணியிலான இந்திய மொழிகளுக்கான ஏஐ மாதிரியை காட்சிப்படுத்தியது. இந்தி மற்றும் ஆங்கில திறன் கொண்டுள்ளது, தமிழ் மற்றும் தெலுங்கு வடிவங்கள் அறிமுகமாக உள்ளன. ஐஐடி தில்லி மனித இயந்திர இடைமுகத்தில் அடுத்த தலைமுறை வடிவை காட்சிப்படுத்தியது.
Edited by Induja Raghunathan