கட்டுமானத் துறையில் வெளிப்படைத்தன்மை - இந்தியாவுக்கு 31-வது இடம்!
கட்டுமானத் துறை வெளிப்படைத்தன்மையில் வேகமாக முன்னேறும் நாடுகளிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல்-இன் ஆய்வறிக்கையின் படி, கட்டுமானத்துறையில் வெளிப்படைத்தன்மையில் இந்தியா 89 நாடுகளில் 31வது இடம்பிடித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான வெளிப்படைத்தன்மை நாடுகளின் பட்டியலை ஜே.எல்.எல் வெளியிட்டுள்ளது. நிலை 1 எனப்படும் பெருநகர கட்டுமான சந்தைகள் முதல்முறையாக வெளிப்படைத்தன்மைக்கான 244 மதிப்பெண்களை பெற்றதன் வாயிலாக, பட்டியலில் உள்ள 89 நாடுகளில், இந்தியா, 31வது இடத்தைப் பிடித்துள்ளது.
கட்டுமானத் துறை வெளிப்படைத்தன்மையில் வேகமாக முன்னேறும் நாடுகளிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, ஜப்பான், பெல்ஜியம், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே அதிகபட்ச வெளிப்படைத்தன்மை கொண்ட 13 நாடுகளாகும்.
இதற்கு அடுத்த நிலையில் வெளிப்படைத்தன்மை கொண்ட நாடுகளாக ஃபின்லாந்து மற்றும் 21 நாடுகள் இருக்கின்றன. வெளிப்படைத்தன்மையில் 89 நாடுகளின் பட்டியலில், மீதமுள்ள நாடுகள் நடுத்தர வெளிப்படைத்தன்மை, குறைந்த வெளிப்படைத்தன்மை கொண்ட வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நிதிச்சூழல் அமைப்பு, காலநிலை ரிஸ்க் காரணிகள் குறித்து தெரிவிக்கும் விதிமுறைகள் கட்டட விதிகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகள், மின்னணுமயமாக்கப்பட்ட நில ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், கட்டுமானத் துறையின் வெளிப்படைத்தன்மை கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தைகள், தொழில்முறையாக்கம், புள்ளிவிவரப் பகிர்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளதால், வெளிப்படைத்தன்மை என்ற பிரதேசத்திற்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.