Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஸ்காலர்ஷிப்பில் படித்து இன்று ரூ.37,000 கோடிக்கு அதிபர் - அர்ஜுன் மெண்டா இந்திய ரியல் எஸ்டேட் டைகூன் ஆனது எப்படி?

அன்று குடும்ப சொத்துகளை இழந்து பூஜ்ஜியத்துடன் தொடங்கி இன்று ரூ.37,000 கோடி சொத்துடன் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பிய அர்ஜுன் முண்டாவின் அசாத்திய பயணம்.

ஸ்காலர்ஷிப்பில் படித்து இன்று ரூ.37,000 கோடிக்கு அதிபர் - அர்ஜுன் மெண்டா இந்திய ரியல் எஸ்டேட் டைகூன் ஆனது எப்படி?

Thursday June 08, 2023 , 2 min Read

அதிகம் அறியப்படாதவரான இந்தியாவின் 3வது பெரிய செல்வந்தர் அர்ஜுன் மெண்டா இன்று பெரிய அளவில் சொத்துக்களை ஈட்டி வருகிறார். அவர் தனது பல கோடி ரூபாய் செல்வந்தக் கோட்டையைக் கட்டியெழுப்பி வருகிறார். ஆனால், அவரது தொடக்க காலமோ மிகவும் எளிமையானது.

‘குரோஹே - ஹுருன் 2023-ம் ஆண்டு பணக்காரர்கள்’ (Grohe-Hurun Rich List 2023) பட்டியலில் திடீரென ரியல் எஸ்டேட் துறையில் 3-வது பெரிய செல்வந்தர் என்ற இடத்திற்கு உயர்ந்தவர்தான் இந்த அர்ஜுன் மெண்டா.

இவரது குடும்பமும் இவரும் நடத்துவதுதான் RMZ கார்ப்பரேஷன். லோதா குரூப் குடும்பத்தினர், டி.எல்.எஃப். குழுமத்தின் ராஜீவ் சிங் ஆகியோர்தான் ரியல் எஸ்டேட் துறை பணக்காரர்கள் பட்டியலில் மெண்டாவுக்கு முன் 2 இடங்களில் இருக்கின்றனர்.

arjun munde

மெண்டாவின் சொத்து நிகர மதிப்பு ரூ.37,000 கோடி.

மெண்டா இன்று பெரும் செல்வத்திற்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனது பல கோடி ரூபாய் மதிப்பிலான பேரரசைக் கட்டியெழுப்ப எளிய தொடக்கத்திலிருந்து உயர்ந்தார் என்றே கூற வேண்டும்.

கடினமான காலக்கட்டத்தில்தான் இவரது ஆரம்பகால வாழ்க்கை இருந்தது. 1947ம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை கால வன்முறையின்போது இவரது குடும்பமும் வன்முறையில் சிக்கியது. இப்போது, பாகிஸ்தானில் உள்ள ஷிகர்பூர் சிங்கில் பிறந்த மெண்டாவும் அவரது குடும்பத்தினரும் பிரிவினையின்போது இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தபோது சொத்துக்கள் அனைத்தையும் அங்கேயே விட்டு விட்டு வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

கஷ்டத்திலும் கல்வியில் ஆர்வம்

குடும்பத்தில் அதிக வளங்கள் இல்லாத நிலையில், ஐஐடி கரக்பூரில் அர்ஜுன் மெண்டா படிக்கக் காரணம், அவர் உதவித்தொகைப் பெற்று படித்ததுதான். இன்று மெண்டா அறக்கட்டளை சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுக்கும் முகமாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகையுடன் தங்கள் கனவுகளைத் தொடர உதவுகிறது.

ஒரு மதிப்பு மிக்க கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற மெண்டா, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் தொழில்துறை பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1967-ஆம் ஆண்டு பெங்களூருவில் ஒரு சிறிய அளவிலான யூனிட்டில் இருந்து தொழிலதிபராக அவரது பயணம் தொடங்கியது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1980-களில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அவர் தனது வாழ்க்கைப் பயணத்தை மாற்றினார். அவரது இரண்டு மகன்கள் ராஜ் மற்றும் மனோஜ் மெண்டா நிறுவனத்தைக் கவனித்து வருகின்றனர். RMZ கார்ப்பரேஷன் 2002-ம் ஆண்டில் நிறுவப்பட்டது.

இன்றைய தேதியில் அவரது நிறுவனம் கட்டுமானத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் உள்ளது. ஹைதராபாத், பெங்களூரு, புனே மற்றும் சென்னை ஆகிய மென்பொருள் உற்பத்தி மைய நகரங்களில் கார்ப்பரேட் அலுவலகங்களை நிர்மாணிப்பதில் அவரது நிறுவனம் முன்னணியில் உள்ளது.

arjun munde

அர்ஜுன் மெண்டா; ரியல் எஸ்டேட் அதிபரும், கே ரஹேஜா கார்ப்பரேஷனின் தலைவருமான சந்துரு ரஹேஜாவின் சகோதரியை மணந்தார். ரஹேஜா ரியல் எஸ்டேட் பணக்காரர்கள் பட்டியலில் மெண்டாவுக்குப் பின்னால் 26,620 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கிறது.

அன்று உதவித்தொகையால் ஐஐடி-யில் படிப்பை முடித்த அர்ஜுன் முண்டா இன்று தனது அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு 700-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குகிறார். இந்த கல்வி உதவித்தொகைத் திட்டம் மூலம் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை நம் சமூகத்துக்கு கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.

2017-ம் ஆண்டு அர்ஜுன் மெண்டாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.


Edited by Induja Raghunathan