Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தாய் பாலில் இருந்து பெண்டென்ட், மோதிரம், கம்மல் தயாரிக்கும் சென்னை தாய்!

தாய் பால் மட்டும் அல்லாமல் குழந்தையின் தொப்புள் கோடி, உதிரும் முடி, பல், நகம் ஆகியவற்றில் இருந்தும் அணிகலன்களை உருவாக்குகிறார் இந்த சென்னை இளம் தாய்.

தாய் பாலில் இருந்து பெண்டென்ட், மோதிரம், கம்மல் தயாரிக்கும் சென்னை தாய்!

Tuesday August 04, 2020 , 3 min Read

தாய்மை, முதல் குழந்தை இவை எல்லாம் பெண்கள் நினைத்து பெருமை கொள்ளும் பெரிய தருணம். பத்து மாதம் கருவை சுமப்பதில் இருந்து குழந்தை வளர்ப்பு வரை தனித்துவமான பந்தத்தை தன் பிள்ளைகளுடன் உருவாக்குகிறாள் தாய். தாய் பால் மூலம் அந்த பந்தம் இன்னும் வலுவாகிறது. அந்த தாய் பாலை பேணும் வகையிலும், அதன் உன்னதத்தை நினைவில் கொள்ளவும்; தாய் பாலில் அணிகலன்களை உருவாக்குகிறார் பிரீத்தி விஜய்.


தாய் பால் மட்டும் அல்லாமல் குழந்தையின் தொப்புள் கோடி, உதிரும் முடி, பல், நகம் ஆகியவற்றில் இருந்தும் அணிகலன்களை உருவாக்குகிறார் இந்த சென்னை இளம் தாய்.

 பிரீத்தி விஜய்
 பிரீத்தி விஜய்

பிரீத்தி விஜய்க்கு கைவினை பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம், ஐந்து வருடங்களாக கிளே பயன்படுத்தி அணிகலன்கள் செய்து வந்தார். அவரிடம் சமூக ஊடகம் மூலம் ஒரு தாய் இந்தியாவில் தாய் பாலில் அணிகலன்களை தயாரிப்பை பற்றி வினவியுள்ளார். அதன் பிறகே இந்த யோசனை பிரீத்திக்கு தோன்றியுள்ளது.

“அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் இது அதிகம் இருக்கிறது, நமக்கு தான் இது புதிது. கைவினை பொருட்கள் மீது ஆர்வம் கொண்ட எனக்கு இதை முயற்சிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது,” என்கிறார் ஆர்வத்துடன்.

இதைச் செய்ய வேண்டும் என ஆர்வம் இருந்த பிரீத்திக்கு அதற்கான செயல் முறை தெரியவில்லை. ஆரம்பத்தில் முயற்சித்த போது ஒரு சில நாட்களில் பாலின் நிறம் மஞ்சளாக மாறியது.

“இதற்கான முறையான செயல்முறை விளக்கம் எந்த ஒரு வலைத்தளத்திலும் இல்லை. பின் வேதியியல் படித்திற்கும் என் நண்பர்களின் உதவி பெற்று, தாய்பாலை பாதுகாக்கும் முறையை கற்றுக்கொண்டேன்.”
image
image

ஒரு சில நாட்களில் நிறம் மாறும் தன்மையை கொண்டது தாய் பால். ஆனால் பதப்படுத்துவதற்கு பிரிசர்வேடிவ் சேர்ப்பதால் தாய் பால் நிறம் மாறாமல் தூய்மையாய் இருக்கும். இதன் மூலம் தாய்மார்கள் தாய்மை அடைந்த முதல் தருணத்தை தங்களோடு என்றும் வைத்துக்கொள்ளலாம்.


பெண்டென்ட், மோதிரம், கம்மல் என பல வகைகளில் மிக துல்லியமாக, அழகான அணிகலன்களை செய்கிறார். பிரீத்தி செய்யும் அனைத்து வடிவமைப்புகளும் அவரின் சொந்த வடிவமைப்புகளாகும். சில பெண்கள் ஆன்லைனில் உள்ள டிசைன்கள் போல் செய்து தர சொன்னால் உடனே மறுத்துவிடுகிறார்.

“எனக்கு காப்பி அடிப்பதில் விருப்பம் இல்லை, என் சொந்த வடிவமைப்புகளை தயாரிக்க விரும்புகிறேன். என் டிசைனில் செய்யக் கூடிய ஒரு சில மாற்றங்களை ஏற்று செய்வேன்,” என்கிறார்.
image
image

தாய் பாலை எப்படி அனுப்ப வேண்டும் என்று தெளிவான விவரத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார். அதன் பின் தாயின் பெயர் விவரத்துடன் பிரிசர்வேடிவ் சேர்த்து பாதுகாக்கிறார். பொதுவாக ஒரு அணிகலன் தயாரிக்க இரண்டு அல்லது மூன்று மாதம் ஆகிறது.


இந்த புதிய படைப்பை பல பெண்கள் வரவேற்கின்றனர். தாய்கள் மட்டும் அல்லாமல் திருமணம் ஆகாத பெண்களும் பிரீத்தியை தொடர்புக்கொண்டு அவரின் படைப்பிற்காக பாராட்டுகின்றனர். பாராட்டுகள் கிடைக்கும் இடத்தில் நிச்சயம் சில விமர்சனங்கள் இருக்கும் அதை பற்றி பிரீத்தி இடம் வினவினோம்.


தன் காது பட எந்த விமர்சனத்தையும் கேட்கவில்லை என்றாலும், சமூக ஊடகங்களின் தாய் பால் வீணாகிறது என்று பலர் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர் என்றார்.

“தாய் பால் வீணாகிறது என்று சொல்பவர்களுக்கு என் பதில் நான் பயன்படுத்துவது 10-15 ml பால் மட்டுமே, அதாவது 3 தேக்கரண்டி. இது ஒன்றும் அதிகம் இல்லையே? மேலும் தாய்மார்கள் விருப்பப்பட்டே இதை செய்கிறார்கள்.”

இவரது படைப்பு 1000 ரூபாயில் இருந்து 4000 ரூபாய் வரை இருக்கிறது. தற்போது முகநூல் வழியே விற்கும் இதை, கூடிய விரைவில் வலைதளம் ஆக்க உள்ளார் பிரீத்தி. மேலும் வெள்ளியில் தயாரிக்கும் இந்த அணிகலன்களை, தங்கத்தில் தயாரிக்க உள்ளார்.

குழந்தையில் நகத்தைக் கொண்டு செய்துள்ள மோதிரம்
குழந்தையில் நகத்தைக் கொண்டு செய்துள்ள மோதிரம்
“தற்போதிய நிலையில் அடுத்தக்கட்டம் என்பது எனக்கு மிக பெரிய அடி ஆகும். முதலீடு ரீதியாக இல்லை என்றாலும் இந்த தயாரிப்பிற்கான தேவை, நீட்டிக்கும் தன்மை குறித்து அமையும்,” என்கிறார் பிரீத்தி.

பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், தொடக்கத்தில் இருந்தே ஹோம்ரூனர் ஆகவே இருந்துள்ளார். வீட்டில் இருந்தே தனக்கு ஆர்வம் உள்ளதை செய்து நன்கு சம்பாதிக்கிறார் இவர். கடந்த ஆகஸ்ட் மாதம் பிராண்ட் அவதார் நடத்திய சுயசக்தி விருது விழாவில் “கலை மற்றும் கலாச்சாரம்” பிரிவில் விருதும் வென்றுள்ளார்.


தாய்பால் அணிகலன்கள் பெற தொடர்புக்கு: Momma's Milky Love