Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

75 மில்லியன் புதிய பயனர்களைக் கடந்த Myntra - AI, தொழில்நுட்பப் பயன்பாட்டிலும் அசத்தல்!

ஃபிளிப்கார்ட்-க்கு சொந்தமான ஆன்லைன் ஃபேஷன் போர்டலான மிந்த்ரா 2023ம் ஆண்டில் 75 மில்லியன் பயனர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அதேபோல், பண்டிகை காலத்தில் 60 மில்லியன் பயனர்கள் மிந்த்ரா செயலியை பயன்படுத்தியுள்ளனர்.

75 மில்லியன் புதிய பயனர்களைக் கடந்த Myntra - AI, தொழில்நுட்பப் பயன்பாட்டிலும் அசத்தல்!

Thursday December 14, 2023 , 2 min Read

ஃபிளிப்கார்ட்-க்கு சொந்தமான ஆன்லைன் ஃபேஷன் போர்டலான Myntra' 2023ம் ஆண்டில் 75 மில்லியன் பயனர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதேபோல், பண்டிகை காலத்தில் 60 மில்லியன் பயனர்கள் மிந்த்ரா செயலியை பயன்படுத்தியுள்ளனர்.

ஃபேஷன் துறையில் வளர்ச்சி:

ஜென்-ஜி என்பது 1997 மற்றும் 2013க்கு இடையில் பிறந்த சுமார் $360 பில்லியன் வாடிக்கையாளர்களைக் குறிக்கிறது. இதில் 20 சதவீத இளம் தலைமுறை இந்திய வாடிக்கையாளர்களும் அடக்கம். அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் க்ராப் டாப்ஸ், ரிப்பட் டிரஸ், ஸ்னீக்கர்கள், பேக்கி ஜீன்ஸ் உள்ளிட்ட ஃபேஷன் ஆடைகளை வழங்குவதற்காக மிந்த்ரா 2023ம் ஆண்டின் மே மாதத்தில், ஜெனரல்-ஜி-ஃபோகஸ்டு என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் இளம் தலைமுறையினர் உலகளாவிய ஃபேஷன் கண்டுபிடிப்புகள் மற்றும் உடைகளை வாங்க முடியும். தற்போது FWD என்றழைக்கப்படும் ஆப் Gen Z பிரிவு இளைஞர்களை நோக்கி, 50க்கும் மேற்பட்ட பிராண்டுகளைச் சேர்ந்த 65,000க்கும் மேற்பட்ட ஸ்டைல்களை வழங்குகிறது. இந்த பிளாட்பார்ம் தற்போது 2.25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Myntra

அழகு துறையிலும் முன்னேற்றம்:

ஃபேஷன் துறையில் மட்டுமல்ல அழகு சாதனத் துறையிலும் மிந்த்ரா கடந்த 3 ஆண்டுகளில் 4 மடங்கிற்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக கடந்த காலாண்டில் மட்டும் நேரடி நுகர்வோர் பிரிவில் 70 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து மிந்த்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"முன்னணி பிராண்டுகளுக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது, அவற்றில் சில 100% க்கும் அதிகமான வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன, இந்த போக்கு, பார்ட்னர் பிராண்டுகளின் வெற்றிக்கு எங்கள் தளம் அளித்துள்ள முக்கியப் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப தளத்தில் கலக்கும் மிந்த்ரா:

ஜூன் மாதத்தில், பயனர் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒட்டுமொத்த ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் நோக்கமாக மினிஸ் என்ற குறுகிய வீடியோ தளத்தை மிந்த்ரா அறிமுகப்படுத்தியது. இதன் ரீல்ஸ் வடிவ வீடியோக்களை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

மிந்த்ராவின் CMO சுந்தர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,

"நாங்கள் ஒரு அற்புதமான ஆண்டைக் கொண்டுள்ளோம், மேலும் பிராண்டுகளுடன் இணைந்து எங்கள் டீம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பெருமிதம் கொள்கிறோம். நமது வளர்ச்சி எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான புதிய பயனர்களையும் புதிய வாடிக்கையாளர்களையும் சேர்த்துள்ளோம், அதே நேரத்தில் எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறோம். வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில், நாங்கள் தொடர்ந்து பல முன்னேற்றங்களைச் செய்து, முக்கிய மைல்கற்களை எட்டுகிறோம்,” என்றார்.

மிந்த்ரா தனது ஆன்லைன் தளத்தை சிறப்பாக்க AI மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறது.

உலகளவில் ChatGPTயைப் பயன்படுத்தி, MyFashionGPT மூலம் தயாரிப்புக் கண்டுபிடிப்பை மேம்படுத்தும் அம்சத்தையும், மாயா மற்றும் MyStylist உள்ளிட்ட AI அம்சங்களை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனங்களில் ஒன்றாக மிந்த்ரா இடம்பிடித்துள்ளது.