Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

பயணிகளின் கனிவான கவனத்திற்கு: இனி ரயில் லொகேஷனை நீங்கள் WhatsApp-இல் தெரிந்து கொள்ளலாம்!

ரயில் எப்போது வரும் என்று காத்திருந்து நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமின்றி, நாம் இருக்கும் இடத்திலிருந்தே ரயில் எப்போது வந்து சேரும் என்பதைத் தெரிந்துகொண்டு பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளலாம்.

பயணிகளின் கனிவான கவனத்திற்கு: இனி ரயில் லொகேஷனை நீங்கள் WhatsApp-இல் தெரிந்து கொள்ளலாம்!

Sunday July 17, 2022 , 1 min Read

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பஸ் டிக்கெட்டிங் தளம் redBus. இந்தத் தளம் ரயில்களின் லைவ் லொகேஷனைத் தெரிந்துகொள்ளும் புதிய வசதியை WhatsApp-இல் அறிமுகம் செய்திருக்கிறது.

'Live Train Status’ (LTS) அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனம் redBus என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் 9538039911 என்கிற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணைத் தொடர்பு கொள்வதன் மூலம் பயணிகள் ரயில் எண்ணை பதிவிட்டால் ரயில் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எங்கு இருக்கிறது, எங்கு சென்றுகொண்டிருக்கிறது, எப்போது குறிப்பிட்ட இடத்தை வந்தடையும் போன்ற தகவல்களைப் பெறமுடியும்.

அவ்வப்போதைய தகவல்கள் மட்டுமல்ல முந்தைய நாள் நிலவரத்தையும் பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

1

ரயில் எப்போது வரும் என்று காத்திருந்து நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமில்லை. நாம் இருக்கும் இடத்திலிருந்தே ரயில் எப்போது வந்து சேரும் என்பதைத் தெரிந்துகொண்டு பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளலாம்.

மேலும், PNR எண்ணைப் பதிவிட்டு டிக்கெட் கன்ஃபர்மேஷன் பற்றிய தகவல்களையும் பெறமுடியும்.

அதுமட்டுமல்ல பயணம் சென்று கொண்டிருக்கும்போதே லைவ் லொகேஷனை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

வாட்ஸ் அப் தவிர வேறு எந்த ஒரு கூடுதல் அப்ளிகேஷனோ அல்லது இன்ஸ்டலேஷனோ தேவைப்படாது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். இதனால் மொபைல் டேட்டாவும் பேட்டரி பயன்பாடும் மிச்சமாகும்.

2

பெருந்தொற்று பரவல் அதிகமிருந்த சமயத்தில் பலர் ரயில் பயணங்களைத் தவிர்த்துவிட்டனர். தற்போது ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பயணிகளுக்கு டென்ஷன் இல்லாத ஒரு அனுபவத்தை வழங்க முன்வந்துள்ளது redBus.

“மக்களுக்கு, குறிப்பாக கிராப்புற மக்களுக்கு ரயில்களைப் பற்றிய நிகழ்நேர தகவல்களை வழங்கி உதவவேண்டும். இதற்காகவே வாட்ஸ் அப்பில் இந்த வசதியை ஏற்பாடு செய்திருக்கிறோம். நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகிறார்கள். எனவே, இதைப் பயன்படுத்தி பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குகிறோம்,” என்கிறார் redBus நிறுவனத்தின் redRail பிரிவின் தலைமை வணிக அதிகாரி பரிக்‌ஷித் சௌத்ரி.