ரூ.1,435 கோடி செலவில் PAN2.0 திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ), வருமான வரித் துறையின் பேன் 2.0 திட்டத்திற்கு ரூ.1,435 கோடி நிதி செலவில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
அரசு முகமைகளின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண்ணை (Pan) 'பொது வணிக அடையாளங்காட்டியாக' மாற்ற ரூ.1,435 கோடி பேன் 2.0 திட்டத்தை மத்திய அரசு திங்களன்று அறிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ), வருமான வரித் துறையின் பேன் 2.0 திட்டத்திற்கு ரூ.1,435 கோடி நிதி செலவில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
PAN 2.0 திட்டமானது வரி செலுத்துவோர் பதிவு சேவைகளை தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை செயல்படுத்துகிறது மற்றும் அணுகலை எளிதாக்குவதையும், மேம்பட்ட தரத்துடன் விரைவான சேவையை வழங்குவதையும் செயல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உண்மை மற்றும் தரவு நிலைத்தன்மையின் ஒற்றை ஆதாரம்; சூழல் நட்பு செயல்முறைகள் மற்றும் செலவு மேம்படுத்தல்; மேலும் அதிக சுறுசுறுப்புக்கான உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் ஆகியவை திட்டத்தின் மற்ற நன்மைகளாகும்.
"குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாளங்காட்டியாக PAN-ஐ பயன்படுத்துவதன் மூலம், டிஜிட்டல் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் PAN 2.0 திட்டம் எதிர்நோக்கப்படுகிற்து," என்று ஒரு அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவோரின் மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்திற்காக PAN/TAN சேவைகளை தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தின் மூலம் வரி செலுத்துவோர் பதிவு சேவைகளின் வணிக செயல்முறைகளை மறு-வடிவமைப்பதற்கான மின்-ஆளுமைத் திட்டமே இந்த PAN 2.0.
"இது தற்போதைய PAN/TAN 1.0 செயல் அமைப்பின் மேம்பட்ட வடிவமாக இருக்கும், இது முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அது அல்லாத PAN/TAN செயல்பாடுகள் மற்றும் PAN சரிபார்ப்பு சேவையை ஒருங்கிணைக்கும்," என்று அந்த வெளியீடு கூறுகிறது.
தற்போது, சுமார் 78 கோடி பேன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, அதில், 98 சதவீதம் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.