Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தொழில்நுட்பத் தீர்வு தரும் ஸ்டார்ட் அப்’களுக்கு ரூ.3 கோடி வரை நிதியுதவி; தென்னக ரயில்வே அசத்தல் வாய்ப்பு!

ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அறிவித்துள்ளார்.

தொழில்நுட்பத் தீர்வு தரும் ஸ்டார்ட் அப்’களுக்கு ரூ.3 கோடி வரை நிதியுதவி;  தென்னக ரயில்வே அசத்தல் வாய்ப்பு!

Friday June 17, 2022 , 3 min Read

ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்தத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அறிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்திய ரயில்வே நிதியளிக்கும் என இந்திய ரயில்வே வெளியிட்டு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ரயில்வே:

இந்திய ரயில்வே கண்டுபிடிப்பு கொள்கையின் கீழ், ரயில்வே, ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்ய உள்ளதாகவும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் 50 சதவீதமும், இந்திய ரயில்வே 50 சதவீதமும் என செலவு பகிரப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

Startup
"இந்திய ரயில்வேயுடன் ஸ்டார்ட்-அப்கள் ஒத்துழைத்தால், சிறந்த புதுமையான தீர்வுகளை உருவாகலாம் மற்றும் பல தொழில்நுட்ப சவால்களை தீர்க்க முடியும். ஸ்டார்ட்அப் இந்தியாவின் கீழ் நாங்கள் இன்று ஒரு கண்டுபிடிப்புத் திட்டத்தைத் தொடங்கினோம், மேலும், 11 பொதுவான பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம், ”எனக்கூறிய மத்திய அமைச்சர் வைஷ்ணவ், ரயில்வேயின் கள அதிகாரிகள், RDSO, மண்டல மற்றும் ரயில்வே வாரிய அதிகாரிகள் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தென்னக ரயில்வே அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில்வே ஸ்டார்ட் அப்-களுக்கு ரூ.3 கோடி வரை நிதியுதவி:

ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அறிவித்துள்ளார்.

ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கு திறனை கண்காணிப்பது, பயணிகள் சேவையை மேம்படுத்த மின்னணு தரவுகளை பகுப்பாயும் தொழில்நுட்பம் உள்ளிட்ட ரயில்வே துறைக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வாய்ப்பு தரப்பட இருப்பதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த விரிவான தகவல்களை www.innovation.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஜூன் 21 முதல் இணையத்தில் தொழில் முனைவோர் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்படும் தொழில்நுட்பத்துக்கும் ரூ.1.50 கோடி நிதியுதவி, தொழிலை விரிவுபடுத்த ரூ.3 கோடி நிதியுதவி வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட புதிய தொழில்நுட்பம் இந்திய ரயில்வே முழுவதும் செயல்படுத்தப்படும்.
train

மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை நிறைவு பெற்றவுடன் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். மதுரை - தேனி ரயிலை சென்னை வரை நீட்டிக்கும் திட்டமில்லை. மதுரை - போடி இடையே சரக்கு ரயில் இயக்க மதுரை ரயில்வே கோட்டம் தயாராக உள்ளது. மதுரை - தேனி இடையே ரயில் இயக்குவது சவாலாக உள்ளது, ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் மக்கள் நடந்து செல்கிறார்கள், செல்பி எடுப்பது, ரயிலுக்கு மிக அருகில் நடந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கும் போது மக்கள் குறுக்கே வருவதால் ரயிலை இயக்குவதில் சிரமம் உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமான ரயில்கள் கையாளப்படுகிறது. இந்த ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கு போதிய இடவசதியும் இல்லை. இதனால் மதுரை - கோயம்புத்தூர் பிரிவில் கூடுதல் ரயில்கள் இயக்குவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

ரூ.358.63 கோடி மதிப்பில் நடைபெறப் போகும் மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு வேலைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களுடன் நாளை சென்னையில் நேர்காணல் நடைபெற இருக்கிறது. வருகிற ஜூலை 25 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அதன்பின்பு மறு சீரமைப்பு பணிகள் துவங்கும் எனத் தெரிவித்தார்.