Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.110-ல் தொடங்கி ரூ.1.64 கோடி வரை... சஹேலி எனும் நியூஜென் இன்ஸ்பிரேஷன்!

சஹேலி தனது தொழில்முனைவோர் பயணத்தில் தன் வளர்ச்சியை தாண்டி, மற்றவர்களும் தன்னைப் போல் பலன் பெற கவனம் செலுத்தினார். இதற்காக அவர் தொடங்கியதுதான் ‘ஃப்ரீலான்ஸ் 101’ அகாடமி.

ரூ.110-ல் தொடங்கி ரூ.1.64 கோடி வரை... சஹேலி எனும் நியூஜென் இன்ஸ்பிரேஷன்!

Tuesday May 07, 2024 , 3 min Read

சஹேலி சாட்டர்ஜி - நியூஜென் டிஜிட்டல் உலகில், குறிப்பாக சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கில் சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய நபர்.

ஒவ்வொரு டைகூன்களின் கதையும் நிச்சயம் சாதாரணப் பின்னணியில் இருந்தே ஆம்பிக்கும். அதேபோல், சாதாரண பின்னணியில் இருந்து வந்து ஒரு சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் நிபுணராக மாறுவதற்கான அவரது பயணம் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு நிச்சயம் ஓர் இன்ஸ்பிரேஷன்.

தனது முதல் வருமானமாக வெறும் 110 ரூபாய் சம்பளத்தில் தொடங்கும் அவரது கதை, டிஜிட்டல் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக தன்னை நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட விடாமுயற்சி, அர்ப்பணிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல.

சஹேலியின் கதை வெறும் எண்களைப் பற்றியது மட்டுமல்ல என்றாலும், ரூ.110-ல் தொடங்கி சுவாரஸ்யமாக அவரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடியே 64 லட்சம் வரை உயர்ந்தது என்றால் பாருங்களேன்!
Saheli Chatterjee

சஹேலி சாட்டர்ஜியின் கதை, அவரின் 18 வயதில் இருந்து தொடங்குகிறது. பள்ளிப் படிப்பை முடித்ததும் எல்லோரும் ஐஐடி, ஐஐஎம் அல்லது என்ஐடி என ஓட, தனது 18 வயதில் இவற்றில் சேர தகுதி இருந்தும், வழக்கமான பாதைகளில் இருந்து விலகி டிஜிட்டல் தொழில்முனைவோர் உலகில் நுழைய தீர்மானித்தார்.

கொல்கத்தாவில் உள்ள பெத்துன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பெற்றதில் இருந்து அவரது வாழ்க்கை தொடங்கியது. கல்லூரி முடிந்த பின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் நுழைந்தார்.

டிஜிட்டல் பயணம்...

சஹேலியின் டிஜிட்டல் பயணம் அவரது தகவலமைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்று. டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் கன்டென்ட் எழுதுவதில் தொடங்கி விரைவில் மார்க்கெட்டிங் என்ற முக்கிய இடத்தைப் பிடித்தார்.

தொடர்ந்து தனது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தனது டிஜிட்டல் தடயத்தின் விரிவாக்கமாக தனக்கென ஒரு பிராண்டையும் நிறுவினார். அது தான் ஆம்பிஃபெம் (AmbiFem). இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி.

சஹேலியின் டிஜிட்டல் சாம்ராஜ்ஜியத்தின் மையத்தில் ஆம்பிஃபெம் என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி உள்ளது. பெண்களின் லட்சியம் மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் வகையில் ஆம்பிஃபெம் எனப் பெயரிடப்பட்ட இந்நிறுவனம் சஹேலியின் விஷனுக்கு (vision) சான்றாக அமைந்தது.

சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், அது தொடர்பான ஆலோசனைகள், தனிப்பட்ட பிராண்டுகளை நிர்வகிப்பது, இன்ஃப்ளூயன்சர்களுக்கான சேவை வழங்கி வருகிறது இந்த ஆம்பிஃபெம். இவர்களுக்கான பெய்டு புரோமோஷன்கள் தொடங்கி அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவது என ஆம்பிஃபெம் மூலம் சஹேலி டிஜிட்டல் சந்தையில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் குறுகிய காலத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டவராக மாறினார்.

saheli

அறிவை விரிவுபடுத்துதல்:

சஹேலி தனது தொழில்முனைவோர் பயணத்தில் தன்னுடைய வளர்ச்சியை தாண்டி, தனது அறிவை மற்றவர்களுக்கு அளிப்பதிலும் கவனம் செலுத்தினார். இதற்காக அவர் தொடங்கியது தான் ஃப்ரீலான்ஸ் 101 (Freelance 101) அகாடமி.

இந்த அகாடமி மூலம் தன்னைப் போன்று டிஜிட்டல் துறையில் முன்னேறத் துடிபவர்களுக்கு தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறார். டிஜிட்டல் நிலப்பரப்பில் எவ்வாறு காலூன்றுவது என்பதில் தொடங்கி அத்துறையில் செழிப்பான வளர்ச்சியை எட்டுவது வரை ஃப்ரீலான்ஸர்களுக்கு சஹேலி வழிகாட்டுகிறார்.

சஹேலியின் இந்த அணுகுமுறைக்கு காரணம், தனது அறிவை பகிர்ந்தளிப்பது மட்டுமல்ல, தன்னை போன்ற தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட சமூகத்தை வளர்ப்பதே.

அவரின் இந்த எண்ணம் அவரின் பணிகளில் எதிரொலிக்கிறது. டிஜிட்டல் தொழில்முனைவோரின் சோதனைகளை எதிர்கொண்டு தனது திறமைகளை வளர்த்த சமயத்தில் சஹேலி, பெண் விரோதபோக்குடன் கொண்ட ட்ரோலிங்கை எதிர்கொள்ளவும் செய்தார். எனினும், தனது அர்ப்பணிப்பு மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக டிஜிட்டல் தொழில்முனைவோர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக தனது பயணத்தை மாற்றினார்.

கொல்கத்தா டச்...

சஹேலிக்கு உலகளவில் தடம் பதிக்கும் திறமையும், வளமும் இருந்தபோதும், அவரது சொந்த ஊரான கொல்கத்தாவை தாண்டிச் செல்ல அவருக்கு மனமில்லை. இது கொல்கத்தா நகரம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான சஹேலியின் அன்பை பிரதிபலிக்கிறது.

டெக் தொழில்நுட்பங்களுக்கு சற்று பின்தங்கிய நகரமாக ஸ்டார்ட்அப்களுக்கான மையமாக கொல்கத்தா இல்லாவிட்டாலும் சஹேலிக்கு கொல்கத்தா மீது தீராக் காதல். கொல்கத்தாவே அவருக்கான உத்வேகத்தையும், அவரது பயணத்துக்கான தொடக்கத்தையும் கொடுத்தது. அதனால் தான் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறார் சஹேலி.

மூலம்: Nucleus_AI




Edited by Induja Raghunathan