Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை: 3 மணி நேரத்தில் முடிவு!

அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடிப்பு!

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை: 3 மணி நேரத்தில் முடிவு!

Saturday May 29, 2021 , 2 min Read

கொரோனா ஒழிப்பின் முதல் பணி கொரோனா சோதனைகளை அதிகப்படுத்துவதே என்பது நிபுணர்கள் கூற்றாக உள்ளது. இதனால் கொரோனா சோதனைகளை எளிதாக்கும் வகையில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.


சமீபத்தில் வீட்டில் இருந்தபடியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கருவிக்கு ஒப்புதல் தரப்பட்டது. இந்தநிலையில், உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் புதுமையானதுமான கொரோனா பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த முறையை கண்டுபிடித்துள்ளனர்.

corona test

இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

"உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் வகையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள. இந்த முறையானது எளிமையாகவும், விரைவாகவும் உள்ளது. இந்த முறையில் 3 மணி நேரத்தில் சோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ள இந்த முறை பொருத்தமாக இருக்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி டாக்டர் கிருஷ்ணா கையர்னர் இந்த முறை தொடர்பாக பேசுகையில்,

"சளி பரிசோதனை முறைக்கு அதிகநேரம் ஆகிறது. பழைய முறையில் மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சளி மாதிரிகளை எடுக்க வேண்டி இருப்பதால், அது நோயாளிகளை அசவுகரியமாக உணர வைக்கிறது. மேலும், அதனை சோதனை செய்ய, பரிசோதனை மையத்துக்குக் கொண்டு செல்ல அதிகநேரம் ஆகிறது. இந்தநிலையில் தற்போது கன்டுபிடிக்கப்பட்டுள்ள வாய் கொப்பளித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் முறை நோயாளிகளுக்கு எளிதாகவும், இந்த முறையில் சோதனை முடிவுகளை 3 மணி நேரத்தில் அறிய முடியும்," என்றுள்ளார்.

கொரோனா நோயாளிகள், மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, எளிமையான முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்பூர் - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த முறையை கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த முறையானது, கொரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே அதிவிரைவாக கண்டறிய வெகுவாக உதவும் என்பதால், இந்தப் பரிசோதனை முறை மூலம் அரசுகள் தங்கள் சோதனைகளை விரைவுப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.