'72 மணி நேரத்துக்கு 1 கபே' - 2028க்குள் இந்தியாவில் 1000 கபே'க்கள் திறக்க Starbucks திட்டம்!
இந்தியாவில் மூன்று நாட்களுக்கு ஒரு விற்பனை நிலையம் அமைத்து, 2028ல், 1,000 விற்பனை நிலையங்கள் அமைத்து மற்றும் 4,300க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க ஸ்டார்பக்ஸ் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு ஒரு புதிய விற்பனை நிலையைம் திறக்க திட்டமிட்டுள்ள நிறுவனம், 2028 நிதியாண்டில் ஆயிரம் கபேக்களை அடைய விரும்புகிறது.
இந்தியாவின் வளர்ந்து வரும் காபி சந்தையில் முக்கிய சந்தை பங்கை கைபற்ற விரும்பும் நிறுவனத்தின் உறுதியை இந்த தீவிர விரிவாக்கம் உணர்த்துகிறது.
தற்போதைய நிலையும், எதிர்கால திட்டமும்
2024 டிசம்பரில், ஸ்டார்ப்கஸ், இந்தியாவில் டாடா கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் நிறுவன கூட்டு மூலம் 457 விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. டாடா ஸ்டார்பக்ஸ் எனும் பெயரில் 2012 முதல் இந்த பிராண்ட் இந்தியாவில் கால் பதித்து வருகிறது.
தற்போதைய நிலையை இரு மடங்காக்கும் வகையில், 2028ல் ஆயிரம் விற்பனை நிலையங்கள் எனும் இலக்கு கொண்டுள்ளது. இந்த விரிவாக்கம் நிறுவனத்தின் மூன்று அம்சங்கள் கொண்ட உத்தியை மையமாகக் கொண்டுள்ளது. செயல்பாடு விரிவாக்கம், வாடிக்கையாளர் அனுபவம் மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல் ஆகிய அம்சங்களை இந்த உத்தி கொண்டுள்ளது.
மெட்ரோக்களை கடந்து
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இந்திய உத்தியின் முக்கிய அம்சமாக, இரண்டாம் மற்றும், மூன்றாம் அடுக்கு நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வது அமைகிறது. நாட்டின் வளர்ந்து வரும் மத்திய வர்கத்தை இந்த உத்தி மையமாகக் கொண்டுள்ளது. மேலும், காபி கலாச்சாரத்தை முக்கிய நகரங்களை கடந்து கொண்டு செல்ல விரும்புகிறது.
விரிவாக்கத்தின் அம்சங்கள்:
- டிரைவ் த்ரு இடங்களை அதிகாக்குவது
- விமான நிலைய இருப்பை விரிவாக்குவது
- 24 மணி நேர கடைகள்
இந்த பலவகை விற்பனை நிலையங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன.
வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் வளர்ச்சி
இந்த விரிவாக்கத்திற்கு துணையாக டாடா ஸ்டார்பக்ஸ் தனது 4,300 ஊழியர்கள் என்ணிக்கையை 2028 வாக்கில் 8600 பங்குதாரர்களாக (ஊழியர்கள்) அதிகரிக்க உள்ளது. இந்த உயர்வு, 2030ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அமைந்துள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கம் தவிர, திறன் பயிற்சி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க ஸ்டார்பக்ஸ் விரும்புகிறது. ஸ்டார்பக்ஸ் அறக்கட்டலை மற்றும் இந்திய ரீடைலர்ஸ் மற்றும் ரீடைல் சங்கங்களுக்கான அறக்கட்டளை (TRRAIN) வாயிலாக நிறுவனம் 2000 இளம் பெண்களுக்கு திறன் பயிற்சி அளிக்க உள்ளது.
காபி அனுபவம் மேம்பாடு
இந்தியாவில் காபி கலாச்சாரத்த மேம்படுத்தும் வகையில், நிறுவனம் நாட்டில் தனது இரண்டாவது ஸ்டார்பக்ஸ் ரிசர்வ் ஸ்டோரை துவக்க உள்ளது. 2022ல் மும்பையில் திறக்கப்பட்ட முதல் ரிசர்வ் ஸ்டோரின் வெற்றியைத்தொடர்ந்து இது அமைகிறது.
நிறுவனம், இந்தியாவில் இருந்து பெறும் ஸ்டார்பக்ஸ் ரிசர்வ் முழு கொட்டை காபி வகைய மான்சூண்ட் மலபாரை இந்தியா மற்றும் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியா காபியை உலக அளவில் வழங்குவதோடு, பிரிமியம் காபி சுவையை நாடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதையும் இது உணர்த்துகிறது.
சவால்கள், வாய்ப்புகள்
ஸ்டார்பக்ஸ் விரிவாக்கம் பெரிய அளவில் இருந்தாலும், இந்திய சந்தையில் அது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது:
- உள்ளூர் காபி நிலையங்கள், டீ கலாச்சாரத்தின் போட்டி.
- பல்வேறு வகை பிராந்திய தேர்வுகளை சமாளிப்பது
- விரிவாகும் நிலையங்களில். தரம், சேவையை பராமரிப்பது.
எனினும், வாய்புகளும் கணிசமாக உள்ளன:
இந்தியாவின் வளர்ந்து வரும் மத்திய தர வர்கம், அதிகரிக்கும் உபரி வருமானம்
மேற்கத்திய காபி கலாச்சாரம் மீதான ஈர்ப்பு, குறிப்பாக இளம் தலைமுறையின் ஈர்ப்பு
தனிப்பட்ட மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவைக்காக டிஜிட்டல் உத்திகள்
ஸ்டார்பக்ஸ் விரிவாக்க திட்டம், இந்தியாவில் நிறுவனம் வளர்ச்சி வாய்ப்பை நம்புவதை உணர்த்துகிறது.
உள்ளூர் கூட்டு, பலவகை கடைகள், தரம் மீது உறுதி ஆகிய அம்சங்களால் ஸ்டார்பக்ஸ் இந்திய காபி சந்தையில் கணிசமான பங்கை கைபற்ற உறுதி கொண்டுள்ளது. 1000 விற்பனை நிலையங்களை நோக்கிய பயணம் நிறுவனம் மற்றும் இந்திய காபி ரசிகர்களுக்கு உற்சாகம் நிறைந்ததாக அமைய உள்ளது.
தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan