Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச் சந்தையில் மீண்டும் வீழ்ச்சி - காரணம் என்ன?

சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் வீழ்ச்சி நிலவுகிறது.

Stock News: பங்குச் சந்தையில் மீண்டும் வீழ்ச்சி - காரணம் என்ன?

Wednesday January 08, 2025 , 1 min Read

சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் வீழ்ச்சி நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.8) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 236.42 புள்ளிகள் சரிந்து 77,962.69 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 62.45 புள்ளிகள் சரிந்து 23,645.45 ஆக இருந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் மீண்டெழுந்த பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளது, முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 513.66 புள்ளிகள் (0.66%) சரிந்து 77,685.45 ஆகவும், நிஃப்டி 137.40 புள்ளிகள் (0.58%) சரிந்து 23,570.50 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் பாதக நிலையுடன்தான் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் பங்குச் சந்தையில் மட்டும் ஏற்றம் உள்ளது. டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தையில் இறக்கம் நிலவுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் மிகவும் குறைந்திருப்பதும் இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம்.

sensex

ஏற்றம் காணும் பங்குகள்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மாருதி சுசுகி

ஏசியன் பெயின்ட்ஸ்

ஆக்சிஸ் பேங்க்

பஜாஜ் ஃபின்சர்வ்

எம் அண்ட் எம்

இந்துஸ்தான் யூனிலீவர்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

டிசிஎஸ்

சன் பார்மா

கோடக் மஹிந்திரா பேங்க்

டாடா ஸ்டீல்

பாரதி ஏர்டெல்

டாடா மோட்டார்ஸ்

எல் அண்ட் டி

விப்ரோ

ஐசிஐசிஐ பேங்க்

இன்ஃபோசிஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து ரூ.85.83 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan