Stock News: ஆட்டம் காணும் ஐடி நிறுவனப் பங்குகள்; ட்ரம்ப் வரி யுத்தம் தாக்கம்!
ட்ரம்ப் தொடங்கி வைத்துள்ள இந்த வரி யுத்தத்தால், மும்பை பங்குச் சந்தையில் ஐடி நிறுவனப் பங்குகள் கடுமையாக ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பின் தாக்கமாக பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. டரம்ப் தொடங்கி வைத்துள்ள இந்த வரி யுத்தத்தால், மும்பை பங்குச் சந்தையில் ஐடி நிறுவனப் பங்குகள் கடுமையாக ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.3) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 378.60 புள்ளிகள் சரிந்து 76,238.84 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 80.60 புள்ளிகள் சரிந்து 23,251.75 ஆக இருந்தது.
மீண்டும் கடும் வீழ்ச்சியை நோக்கி இந்திய பங்குச் சந்தை நகர்ந்து கொண்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தைத் தந்துள்ளது.
இன்று முற்பகல் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 224.47 புள்ளிகள் (0.29%) சரிந்து 76,392.97 ஆகவும், நிஃப்டி 51.50 புள்ளிகள் (0.22%) சரிந்து 23,280.85 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஓரளவு ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆனால், ஆசிய பங்குச் சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் என அனைத்திலுமே கடும் வீழ்ச்சி நிலவுகிறது.

இந்தியாவுக்கு 26% இறக்குமதி வரி உள்பட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது அறிவித்துள்ள புதிய வரிவிதிப்பு முறையால் சர்வதேச அளவில் வர்த்தகப் போக்குகளை ஆட்டம் கண்டுள்ளன. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் மென்மேலும் வீழ்ச்சி காணக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
டைட்டன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
எல் அண்ட் டி
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
மாருதி சுசுகி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
பாரதி ஏர்டெல்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டார்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
விப்ரோ
இன்போசிஸ்
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா வீழ்ச்சி கண்டு ரூ.85.78 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan