Stock News: மீண்டது பங்குச்சந்தை - சென்செக்ஸ் 700+ புள்ளிகள் உயர்வு- வங்கி, ஐடி துறை பங்குகள் ஏற்றம்!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 761.29 புள்ளிகள் உயர்ந்து 77,917.08 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 233 புள்ளிகள் உயர்ந்து 23,582.65 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக் கிழமையான இன்று (22-11-2024) மீண்டும் உயர்வுப்பாதைக்குத் திரும்பியுள்ளன. சென்செக்ஸ் சுமார் 700க்கும் கூடுதலான புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 220 புள்ளிகளும் உயர்வு கண்டன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:18 மணி நிலவரப்படி, 761.29 புள்ளிகள் உயர்ந்து 77,917.08 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 233 புள்ளிகள் உயர்ந்து 23,582.65 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 547 புள்ளிகள் உயர, நிப்டி ஐடி குறியீடு மட்டும் 660 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 271 புள்ளிகள் அதிகரித்தது. செக்டார்களில் ஆற்றல் அல்லது எரிசக்தி துறை மற்றும் மெட்டல் பங்குகள் பின்னடைவு கண்டன.
காரணம்:
நேற்று அதானி லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதையடுத்து பங்குச் சந்தை ஆட்டம் கண்டன, ஆனால், இன்று வங்கிகள் மற்றும் ஐடி துறை பங்குகளால் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளன. நேற்று அதானி குழுமப் பங்குகளின் விலைகள் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஹெச்.சி.எல். டெக்
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
ஐசிஐசிஐ வங்கி
எஸ்பிஐ
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்
ரிலையன்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
அதானி எண்டெர்பிரைசஸ்
எம் அண்ட் எம்
ஆக்சிஸ் வங்கி
ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.49ஆக உள்ளது.