Stock News: பங்குச்சந்தை பின்னடைவு; சென்செக்ஸ் 600+ புள்ளிகள் சரிவு - அதானி குழுமப் பங்குகள் பின்னடைவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:21 மணி நிலவரப்படி, 617.05 புள்ளிகள் சரிந்து 76,961.33 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 220.10 புள்ளிகள் சரிந்து 23,298.40 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக் கிழமையான இன்று (21-11-2024) மீண்டும் சரிவுப்பாதைக்குத் திரும்பியுள்ளன. சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 220 புள்ளிகளும் சரிவு கண்டன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:21 மணி நிலவரப்படி, 617.05 புள்ளிகள் சரிந்து 76,961.33 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 220.10 புள்ளிகள் சரிந்து 23,298.40 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 604 புள்ளிகள் சரிய , நிப்டி ஐடி குறியீடு மட்டும் 140 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 660 புள்ளிகள் சரிந்தன. பொதுத்துறை வங்கிப் பங்குகள், உலோகம், ஆற்றல் துறை பங்குகள் 1-2% சரிவு கண்டன.
காரணம்:
கவுதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் லஞ்சப்புகார் எழுப்பியுள்ளதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் சரிவு கண்டதையடுத்தும், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நவம்பர் 19ம் தேதி ரூ.3,411 கோடி முதலீட்டை பங்குச் சந்தையிலிருந்து திரும்ப பெற்றதும் சந்தையை பின்னடைவை நோக்கி இட்டுச் சென்றது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
டெக் மகீந்திரா
டிசிஎஸ்
ஹிண்டால்கோ
பார்தி ஏர்டெல்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இறக்கம் கண்ட பங்குகள்:
எஸ்பிஐ
என்.டி.பி.சி.
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்
பிரிட்டானியா
ஓ.என்.ஜி.சி
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.43ஆக உள்ளது.