Stock News: சாதனை உயர்வுக்கு அருகில் சென்செக்ஸ்- பஜாஜ் ட்வின்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் பங்குகள் ஏற்றம்!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, பிரதான சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 253 புள்ளிகள் வரை உயர்ந்து 82 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (29-08-2024) சாதனை உயர்வுக்கு அருகில் வந்துள்ளன. மும்பைப் பங்குச்சந்தையின் பிரதான சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 253 புள்ளிகள் வரை உயர்ந்து 82 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 253.67 புள்ளிகள் உயர்ந்து 82,039.23 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 59 புள்ளிகள் உயர்ந்து 25,110.40 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு 108 புள்ளிகள், நிப்டி ஐடி குறியீடு 269 புள்ளிகள் உயர்ந்து காணப்பட மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 94 புள்ளிகள் பின்னடைவு கண்டுள்ளது.
காரணம்:
அமெரிக்க பெடரல் ரிசர்வின் பணவீக்க இலக்கு 2% என்பதைச் சாதிக்கும் என்று நம்பப்படுவதாலும் அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 4 நாட்களாக பாசிட்டிவ் நோக்குடனும் அணுகுவதால் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பஜாஜ் ஃபின் சர்விஸ்
பஜாஜ் பைனான்ஸ்
ஸ்ரீராம் பைனான்ஸ்
ஹெச்.சி.எல். டெக்
விப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹிண்டால்கோ
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்
கிராசிம்
அல்ட்ரா டெக் சிமெண்ட்
கோ இந்தியா
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே கூடி டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.91 ஆக உள்ளது.