Stock News: பங்குச் சந்தையில் தடுமாற்றம்: சென்செக்ஸ் சரிவுக்குப் பின் உயர்வு!
இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் வீழ்ச்சி, எழுச்சி என தடுமாற்றம் நிலவி வருகிறது. எனினும், சரிவுக்குப் பின் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் வீழ்ச்சி, எழுச்சி என தடுமாற்றம் நிலவி வருகிறது. எனினும், சரிவுக்குப் பின் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.11) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 111.85 புள்ளிகள் சரிந்து 81,809.44 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 39.2 புள்ளிகள் சரிந்து 25,001.90 ஆக இருந்தது.
இதனால், முதலீட்டாளர்களிடையே இன்று ஆரம்பத்தில் சற்று கலக்கம் இருந்தது. ஆனால், சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றம் நிலவத் தொடங்கியது.
முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 138.22 புள்ளிகள் (0.17%) உயர்ந்து 82,059.51 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 35.20 புள்ளிகள் (0.14%) உயர்ந்து 25,076.30 ஆக இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் பாசிட்டிவ் உடன் நிறைவடைந்தது. எனினும், ஆசிய பங்குச் சந்தைகளில் தடுமாற்ற சூழல் நிலவுகிறது. அதேவேளையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கூடியுள்ள ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. அதேபோல், முக்கிய நிறுவனப் பங்குகளில் உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
பார்தி ஏர்டெல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஐடிசி
சன் பார்மா
டெக் மஹேந்திரா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஹெஃப்சி பேங்
அல்ட்ரா டெக் சிமென்ட்
எல் அண்ட் டி
என்டிபிசி
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜி
இந்திய ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று டாலர் ஒன்றுக்கு ரூ.83.96 ஆக உள்ளது.
Edited by Induja Raghunathan