Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச் சந்தையில் ஒளிரும் பச்சை விளக்கு - சென்செக்ஸ் 400+ புள்ளிகள் உயர்வு

கடந்த இரு தினங்களாக இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் பெறத் தொடங்கியிருக்கிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

Stock News: பங்குச் சந்தையில் ஒளிரும் பச்சை விளக்கு - சென்செக்ஸ் 400+ புள்ளிகள் உயர்வு

Wednesday January 15, 2025 , 1 min Read

கடந்த இரு தினங்களாக இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் பெறத் தொடங்கியிருக்கிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.15) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 401.53 புள்ளிகள் உயர்ந்து 76,901.16 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 97.5 புள்ளிகள் உயர்ந்து 23,273.55 ஆக இருந்தது.

பங்குச் சந்தை மீளத் தொடங்கியதுடன் தொடர்ந்து பச்சை விளக்குடன் ஏறுமுகம் கண்டுள்ளது முதலீட்டாளர்களிடையே உத்வேகத்தைக் கூட்டியுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 429.57 புள்ளிகள் (0.56%) உயர்ந்து 76,929.20 ஆகவும், நிஃப்டி 95.15 புள்ளிகள் (0.41%) உயர்ந்து 23,271.20 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் சற்றே உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், டோக்கியோ, ஹாங்காங் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. ஷாங்காய் பங்குச் சந்தை மட்டும் இறங்குமுகம் கண்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்தியப் பங்குச் சந்தையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி முதலான பங்குகளின் ஏற்றமும், சில்லரை பணவீக்கத்தில் சற்றே சரிவு ஏற்பட்டதன் தாக்கமும் இன்றைய பங்குச் சந்தை எழுச்சிக்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

sensex

ஏற்றம் காணும் பங்குகள்:

மாருதி சுசுகி

என்டிபிசி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கோடக் மஹிந்திரா

எல் அண்ட் டி

எஸ்பிஐ

இன்ஃபோசிஸ்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

பாரதி ஏர்டெல்

விப்ரோ

ஐசிஐசிஐ பேங்க்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

டிசிஎஸ்

டாடா மோட்டார்ஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

சன் பார்மா

எம் அண்ட் எம்

டைட்டன் கம்பெனி

நெஸ்லே இந்தியா

ஆக்சிஸ் பேங்க்

பஜாஜ் ஃபைனான்ஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2 பைசா குறைந்து ரூ.86.55 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan