லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் அட்டவணையில் தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் சாதனையாளராக அங்கீகாரம்!
ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் செயல்திறனை சுட்டிக்காட்டும் வகையில் இந்த அட்டவணை அமைகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிஷா மற்றும் தில்லி ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024 லாஜிஸ்டிக்ஸ் அட்டவனையில் 'சாதனையாளர்கள்' (Achievers) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் செயல்திறனை சுட்டிக்காட்டும் வகையில் இந்த அட்டவனை அமைகிறது. கடந்த ஆண்டும் இந்த அட்டவனையில் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சாதனையாளர்கள் பிரிவில் இடம்பெற்றிருந்தன.
சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற மாநிலங்கள் வருமாறு: சண்டிகர், அரியானார், தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தர்காண்ட், அசாம், அருணாசல பிரதேசம்.
இந்த அட்டவனையில், ஆந்திரா, கோவா, இமாச்சல பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ, ஜம்மூ- காஷ்மீர், லட்சத்தீவுகள், புதுச்சேரி, 'வேகமான முன்னேறும்' ("fast movers") பிரிவில் இடம்பெற்றுள்ளன.
வளர்ச்சியை விரும்புவதை குறிக்கும் 'அஸ்பயர்ஸ்' ("aspirers") பிரிவில் கேரளா, மேற்கு வங்கம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லடாக் இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிரா, ஒடிஷா, உத்தர்காண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடந்த ஆண்டு அட்டவணையில் இருந்து இந்த ஆண்டு முன்னேறியுள்ளன. பஞ்சாப் வேகமாக வளரும் பிரிவில் இருந்து கீழ் இறங்கியுள்ளது. ஆந்திர பிரதேசம் சாதனையாளர் பிரிவில் இருந்து வேகமாக வளரும் பிரிவுக்கு சரிந்துள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் உள் கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் சேவைகள், செயல்முறை மற்றும் கட்டுப்பாடு செயல்திறன், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நீடித்த தன்மை லாஜிஸ்டிக்ஸ் ஆகிய நான்கு அம்சங்களில் இந்த அறிக்கை மாநிலங்களை பட்டியலிடுகிறது, என மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலால் வெளியிடப்பட்ட ஆறாவது லீட்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
மாநிலங்களிடையே லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் இந்த அட்டவணை கவனம் செலுத்துகிறது. நாட்டின் தொழில் வளர்ச்சி மேம்பாட்டிற்கு இது அவசியம். உலக வங்கியின் லாஜிஸ்டிக்ஸ் செயல்முறை அட்டவனை அடிப்படையில் இந்த அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி லாஜிஸ்டிக்ஸ் அட்டவணை கருத்துக்கணிப்பு அடிப்படையில் அமைந்துள்ள நிலையில், இந்திய அட்டவணை மேலும் விரிவானதாக அமைகிறது.
இந்த அறிக்கை, லாஜிஸ்டிக்ஸ் துறையின் முக்கிய தூண்களாக அமையும் நான்கு பிரிவுகளில் மாநிலங்களின் செயல்பாட்டை கருத்தில் கொள்கிறது. மேலும், தகவல் சார்ந்த முடிவெடுக்கவும், விரிவான வளர்ச்சிக்கு வழிகாட்டவும் தேவையான பிராந்தியம் சார்ந்த புரிதலை வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்த ஆண்டு முதல் மதிப்பீடு முறையை மேலும் தீவிரமாக்கி, மாநிலங்களிடையே போட்டியை வளர்க்கும் வகையில் அனைத்து காரணிகளையும் தீவிரமாக்க வேண்டும், என DPIIT–யை கேட்டுக்கொண்டார்.
"பல மாநிலங்கள் சாதனையாளர்கள் பிரிவில் வருகின்றன. எனவே, மதிப்பீடு முறையை தீவிரமாக்க வேண்டும். இதனால் எதிர்பார்ப்பு அதிகமாகும். ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்த எதிர்பார்ப்புகளுக்கு நாம் ஏற்றவர்களாக இருக்க முடியாது,” என அவர் கூறினார்.
லாஸ்ஜிட்க்ஸ் செலவுகளை இந்தியாவில் மதிப்பிடுவதற்கான காரணிகளையும் துறை வெளியிட்டுள்ளது.
"இதற்குக் காரணம் நாம் இதுவரை வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பு அமைப்புகளை சார்ந்திருந்ததால், இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் செலவு ஜிடிபியில் 13-14 சதவீதம் எனும் எண்ணத்தை கொண்டிருந்தோம். இதில் கண்ணுக்குத்தெரியாத அம்சங்கள் உள்ளன,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு என்று யூபிஐ போல, டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அமைச்சர் கூறினார்.
"பல்வேறு பிரிவினர் மேடையில் செயல்பட்டு, தரவுகளை பகிர்ந்து கொண்டு, நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் யூபிஐ அமைந்துள்ளதோ அதே போல, ஒரு மேடையை உருவாக்க வேண்டும். நம்முடைய விஷயத்தில் பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பான காகித பணிகளுக்காக இது அமையும். இதனால் வர்த்தகம் செய்வதில் ஏற்படக்கூடிய பெரும் மாற்றத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்,” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இது தவிர்க்க இயலாதது, இல்லை எனில், லட்சக்கணக்கான காகித ஆவணங்கள் சுமையாக அமையும், என்றார்.
"ஒரு வலைப்பின்னலில் அனைவரையும் கொண்டு வர வேண்டும். அரசு நிர்வாக செயல்முறையை மாற்றி அமைக்கும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பையும் நாம் உருவாக்க வேண்டும். இது உங்கள் அனைவருக்கும் செயல்முறையை மேம்படுத்தி, முடிவெடுத்தலை வேகமாக்க மற்றும் செலவை குறைக்க உதவும்,” என்றும் அமைச்சர் கூறினார்.
நிறுவனங்களுக்கு லாஜிஸ்டிக்ஸ் வர்த்தகத்தை எளிதாக்க தேவையான பிராந்திய திட்டங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வகுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். முதலீட்டை ஈர்க்க எதிர்கால திட்டமிடல் அவசியம் மற்றும் உலகமே நீடித்த வளர்ச்சி செயல்முறையை நாடுவதால், நீடித்த வளர்ச்சி லாஜிஸ்டிக்ஸ் நுட்பங்களை தழுவிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan