2021ல் வெளியாகி உலகையே பிரம்மிக்க வைத்த ’டாப் 10 வெப் சீரிஸ்’
ஆங்கிலத்திலோ அல்லது அந்தந்த மொழியிலோ மட்டுமே சப் டைட்டிலோடு கண்டு ரசிக்க முடியும் என்ற விதிகளையும் ஓடிடி தளங்கள் காலி செய்தன. எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களது மொழிகளிலேயே டப் செய்யப்பட்ட வெப் தொடர்கள் வெளியானது ரசிகர்களை கவர்ந்திழுத்தது.
கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் முடங்கிய இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்க அமைந்தது என்றால் அது வெப்சீரிஸ்கள் தான்.
கொள்ளை, காதல், துரோகம், தீவிரவாதம், சயின்ஸ் பிக்ஷன்ஸ் என விதவிதமான வெப் தொடர்கள் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.
ஆங்கிலத்திலோ அல்லது அந்தந்த மொழியிலோ மட்டுமே சப் டைட்டிலோடு கண்டு ரசிக்க முடியும் என்ற விதிகளையும் ஓடிடி தளங்கள் காலி செய்தன. எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களது மொழிகளிலேயே டப் செய்யப்பட்ட வெப் தொடர்கள் வெளியானது ரசிகர்களை கவர்ந்திழுத்தது.
உதாரணமாக இந்திய அளவில் தயாரிகப்பட்ட ‘பேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் இந்தி, தமிழ், தெலுங்கு என குறுகிய வட்டத்திற்குள் நிற்காமல் ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டதால் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.
அப்படி உலக அளவில் ஓடிடி பிளாட்ப்ராமில் ரசிகர்கள் கொண்டாடிய 2021ம் ஆண்டிற்கான டாப் 10 வெப் சீரிஸ்களை தற்போது காணலாம்...
1.மணி ஹீய்ஸ்ட்- 2 (Money Heist volume 2):
வங்கிக் கொள்ளையை கதைக்களமாகக் கொண்ட 'மணி ஹீஸ்ட்' தொடருக்கு உலகம் முழுவதிலும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இந்த வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 5 சீசன்களாக வெளியானது. ஒவ்வொரு முறை இந்த வெப் தொடரின் சீசன்கள் ஒளிபரப்பாக உள்ள நாள் அறிவிக்கப்படும் போது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதனை சோசியல் மீடியாக்களில் கொண்டாடி தீர்த்தனர்.
ஸ்பானிஷ் திரில்லர் வெப் தொடரான இது உலகம் முழுவதும் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது என்ற பெருமை கொண்டுள்ளது. ஏன்? 'மணி ஹீய்ஸ்ட்' வெப் சீரிஸைப் பார்ப்பதற்காகவே பல கார்ப்பெட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு லீவு எல்லாம் கொடுத்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், இதற்கான மவுசை.
கடைசியாக தங்க வேட்டை, புரட்சி, துரோகம், போலீஸ் அராஜகம் என ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் உடன் 'மணி ஹீய்ஸ்ட்' வெப் சீரிஸ் நிறைவடைந்தது.
2. ஹாக்காய் (Hawkeye):
‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படத்தின் நிறைவை தொடர்ந்து ஒவ்வொரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் பற்றி கதைகள் வெப் தொடர்களாக வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் படமாக எடுக்கப்பட்ட இவை, கொரோனா காரணமாக வெப் சீரிஸாக மாற்றப்பட்டு எபிசோட், எபிசோட்டாக வெளியானது.
லோகி, விஷன், வாண்டா போன்ற கதாபாத்திரங்களைத் தொடர்ந்து அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக ஹாக்காய் வெப் சீரிஸாக வெளியானது. வில், அம்புடன் துணிச்சலாக களத்தில் இறங்கி கலக்கும் கிளின்ட் கதாபாத்திரத்தில் ஜெர்மி ரென்னர் பட்டையைக் கிளப்பியிருப்பார். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த வெப் தொடருக்கு மார்வெல் ரசிகர்கள் அளித்த ஆதரவால் டாப் 10 வெப் சீரிஸ்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
3. தி பேமிலி மேன் 2 (The Family Man 2):
அமேசான் ப்ரைம் தளத்திலேயே அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடராக ‘தி பேமிலி மேன் 2’ இடம் பிடிக்க முதல் காரணம் மனோஜ் பாஜ்பாய் மற்றும் சமந்தா. இந்தத் தொடரில் சமந்தா ஈழத்து போராளியாக நடித்திருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதுவே இந்த வெப் சீரிஸை பலரும் பார்க்க தூண்டுகோலாகவும் அமைந்தது.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த சிலர், பயங்கர தாக்குதலுக்கு திட்டமிட, அதனை முறியடிக்க தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியான ஸ்ரீகாந்த்( மனோஜ் பாஜ்பாய்) என்ன செய்தார் என்பது தான் கதைக்களம்.
4. கிரஜான் (Grahan):
டிஸ்னி + ஹாட்ஸ்டார் வெப் சீரிஸாக உருவாகியிருக்கும் தொடர் 'கிரஹான்'. 1984 இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் நிகழ்ந்த சீக்கிய கலவரங்களை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டது. சத்ய வியாஸின் சௌராசி புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ரஞ்சன் சாண்டல் இயக்கி இருந்தார்.
பவன் மல்ஹோத்ரா, சோயா ஹுசைன், அன்ஷுமான் புஷ்கர் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மதக்கலவரம் தொடர்பான வெப் சீரிஸ் என்பதால் இதற்கு கடும் எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் கிளம்பியது.
5.மும்பை டைரிஸ் 26/11 (Mumbai Diaries 26/11):
நவம்பர் 26, 2008ம் ஆண்டு மும்பையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானில் இருந்து நுழைந்த நபர்களால் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் 174 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக பல படங்கள் வந்திருந்தாலும், இப்படிப்பட்ட எமர்ஜென்சியான சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நபர்கள் மற்றும் மருத்துவமனையில் நடப்பது என்ன என முழுக்க முழுக்க மருத்துவத்துறையைப் பற்றியே இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டிருந்தது வெற்றிக்கு வழிவகுத்தது.
6. ஹெல்பாண்ட் (Hellbound):
நெட்ஃபிளிக்ஸிற்காக இயோன் சாங்-ஹோ இயக்கிய தொடரில் பிரபல தென் கொரிய யோ ஆ-இன், பார்க் ஜியோங்-மின், கிம் ஹியூன்-ஜூ மற்றும் வோன் ஜின்-ஏ ஆகியோர் நடித்திருந்தனர். த்ரில்லர், சயின்ஸ் பிக்ஸ் பாணியில் வேற்று உலகத்தில் இருந்து வரும் குறிப்பிட்ட தெய்வீக மதத்தைச் சார்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள தனி நபர்களை நரகத்திற்கு கூட்டிச் செல்வது தான் கதை.
7. ஸ்க்விட் கேம் (Squid Game):
கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ’ஸ்க்விட் கேம்.’ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மணி ஹீய்ஸ்ட், லூபின் போன்ற ஆங்கில மொழி அல்லாத பிற மொழி வெப் தொடரான இது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் வெளியான 3 மாதத்தில் மட்டும் இதை பார்ப்பதற்காகவே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தை 44 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
முதல் நான்கு வாரத்தில் 142 மில்லியன் பேர் இந்த வெப் சீரிஸை கண்டு ரசித்துள்ளனர். கொரிய மொழியில் வெளியான இந்த வெப் தொடருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 35 மொழிகளில் டப் செய்யப்பட்டது. ஏறக்குறைய 90 நாடுகளில் ‘ஸ்க்விட் கேம்’ வெப் சீரிஸ் முதலிடம் வகிக்கிறது.
8.வாண்டாவிஷன் (WandaVision):
மார்வெல் சூப்பர் ஹீரோக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மற்றொரு வெப் சீரிஸ் வாண்டா விஷன். அவெஞ்சர்ஸ் திரைப்பட கதாபாத்திரங்களான ஸ்கார்லட் விட்ச் மற்றும் விஷன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக ஜாக் ஷாஃபர் என்பவர் உருவாக்கியிருந்தார்.
9. லோகி (LOKI):
‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. தானோஸால் அழித்த உலகத்தை மீட்க முயற்சிக்கும் சூப்பர் ஹீரோக்கள் கால மாற்றத்தில் செய்யும் சிறு தவறால் ‘லோகி’ தப்பிக்க நேரிடுகிறது. குறும்புக்கார கடவுளும், தோரின் தம்பியுமான லோகியின் இந்த பிரதி எந்த காலத்தோடும் ஒத்துப்போகாததால் கால மாறுபாடுகளைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பான டைம் வேரியன்ஸ் அத்தாரிட்டி அவனை அழைத்துச் செல்கிறது. அங்குள்ள அதிகாரிகளுடன் புதிய வேலை ஒன்றில் இறங்கும் லோகி அதில் வென்றாரா? என்பதே கதைக்களம்.
10. ஃபால்கன் அண்டு தி வின்டர் சோல்ஜர் (The Falcon and the Winter Soldier):
ஃபால்கன் அண்டு தி வின்டர் சோல்ஜர் இதுவும் ஒரு மார்வெல் சூப்பர் ஹீரோக்களை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸ் ஆகும். அவெஞ்சர்ஸ் ஹீரோக்களான ஷாம் (ஃபால்கன்) மற்றும் சூப்பர் வீரரான பக்கி பார்ன்ஸ் (வின்டர் சோல்ஜர்) ஆகிய கதாபாத்திரங்களை இணைத்து மால்கம் ஸ்பெல்மேன் என்பவர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக உருவாக்கியிருந்தார். சூப்பர் சோல்ஜர் தொடர்பான இந்த கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.