Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

13 வயதேயான வைபவ் சூரியவன்ஷி - ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ஏலம் எடுத்தது ஏன்?

“சூரியவன்ஷி சிறந்த திறமைகளைக் கொண்டவர். எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் சூழ்நிலை அவர் வளர ஏதுவாக இருக்கும். எங்கள் பயிற்சிகளுக்கு வைபவ் வந்துள்ளார்.” - ராகுல் திராவிட்

13 வயதேயான வைபவ் சூரியவன்ஷி - ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ஏலம் எடுத்தது ஏன்?

Thursday November 28, 2024 , 2 min Read

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு தற்போது பதின்ம வயதிலேயே பிரபலமாகியுள்ள கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷி பிஹார் மாநிலத்தின் சமஷ்டிபூரைச் சேர்ந்தவர். இவரை நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது உலக சாதனை. ஏனெனில், 13 வயதில் ஐபிஎல் ஒப்பந்தம் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் இவர்தான்.

நல்ல திறமை வாய்ந்த இடது கை பேட்டருக்கு நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொடுத்து அவரை பெரிய ஆளாக வளர்த்தெடுக்க முடியும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கோச் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

“சூரியவன்ஷி சிறந்த திறமைகளைக் கொண்டவர். எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் சூழ்நிலை அவர் வளர ஏதுவாக இருக்கும். எங்கள் பயிற்சிகளுக்கு வைபவ் வந்துள்ளார். சூரியவன்ஷி பிரபலமானது எப்படி எனில், சென்னையில் ஆஸ்திரேலியா U-19 அணிக்கு எதிராக சதம் விளாசி மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதால்தான்.
Vaibhav Suryavanshi

அதுவும் அவர் ஆடிய விதம் சற்றும் திறமைக்குக் குறைவில்லாத ஆஸ்திரேலிய யு-19 பவுலர்களுக்கு எதிராக அந்தப் போட்டியில் அதுவும் சென்னையில் அவர் 62 பந்துகளில் சதம் விளாசினார். இவர் இடது கை சுழற்பந்து வீச்சையும் தன் வசம் வைத்துள்ளார்.

2024ம் ஆண்டு தன் 12வது வயதில் பிஹார் ரஞ்சி அணிக்கு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார் சூரியவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் முகாமில் இவரது செல்லப்பெயர் ‘The Little Boy'.

பிஹார் சமஷ்டிபூருக்கு 10 கிமீ தொலைவில் உள்ள தாஜ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வைபவ். முதலில் தந்தைதான் இவருக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தார். 9வயது முதலே கிரிக்கெட் ஆடிவருகிறார்.

பிஹார் யு-19 அணிக்காக மதிப்புமிக்க வினு மன்கட் டிராபியில் 12 வயதில் ஆடியது அனைவரையும் ஆச்சரியப்படச் செய்தது. மும்பைக்கு எதிராக ரஞ்சி போட்டியில் பிஹாருக்குக் களம் இறங்கும்போதும் இவரது வயது 12.

1942-43-ல் அலிமுதின் என்ற வீரர் 12 வயது 73 நாட்களில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனையை வைத்திருப்பவர். ஆனால், வைபவ் சூரியவன்ஷி, யுவராஜ் சிங்கின் சாதனையை வயதளவில் முறியடித்தார். யுவராஜ் சிங் முதல் தர கிரிக்கெட் ஆடிய போது 15 வயது 57 நாட்கள். இப்போது வைபவ் இதை முந்தியுள்ளார்.

vaibav

2023-ல் நாற்தரப்பு யு-19 தொடரில் இந்தியா பி யு-19 அணிக்கு ஆடி 6 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களுடன் 177 ரன்களை எடுத்துள்ளார். அதன் பிறகுதான், ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக இவர் 58 பந்துகளில் சதம் கண்டு உலக சாதனை புரிந்தார்.

இது மொயின் அலி 2005-ல் யு-19 கிரிக்கெட் போட்டியில் 56 பந்துகளில் சதம் எடுத்ததையடுத்து வைபவின் சதம் 2வது இடத்தில் உள்ளது. ஆனால், இவரது உண்மையான வயது குறித்த சர்ச்சைகளும் இருந்து வருகின்றன.