Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

குக்கிராமங்களில் நல்ல குடிநீர் கிடைக்க வழிவகுத்த தண்ணீர் தேவதைகள்!

‘பெண் தண்ணீர் சாம்பியன்’களாக விளங்கும் ரேணுகா, ஆஷாட்டை, பபிதா மற்றும் ராதா மீனா ஆகியோர் ‘வாட்டர் எய்ட் இந்தியா’ உதவியுடன் தங்களது குக்கிராமங்களில் தூய்மையான குடிநீர் வசதி கிடைக்கச் செய்திருப்பதோடு, ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

குக்கிராமங்களில் நல்ல குடிநீர் கிடைக்க வழிவகுத்த தண்ணீர் தேவதைகள்!

Saturday March 11, 2023 , 5 min Read

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் குக்கிராமங்கள் சிலவற்றில் உள்ள பெண்கள் முக்கியமான இயக்கம் ஒன்றை வழிநடத்தி வருகின்றனர். பலவிதங்களில், அவர்கள் வாழ்க்கை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் வாழ்க்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்கமாக அது அமைகிறது.

இந்தப் பெண்கள் தண்ணீர் எடுக்க கால்வாய், நதிகள் அல்லது குழாயைத் தேடி 4-5 கிமீ நடந்து சென்ற காலம் இருந்தது. இந்த நீர் நிலைகளில் இருந்து சுத்தமான குடிநீர் கிடைப்பது கடினம் என்றாலும், அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அத்துடன், தண்ணீரின் தரத்தை கண்டறியும் வழியும் இல்லை. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

குடிநீர் மற்றும் கழிவறை வசதியை அணுகச் செய்வது மற்றும் நல்ல ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் சமூகத்தில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான மாற்றத்தை கொண்டு வருவதில் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

தொண்டு நிறுவனமும், உலகலாவிய வாட்டர் எய்ட் நெட்வொர்க் அமைப்பின் அங்கமான வாட்டர் எய்ட் இந்தியா (WaterAid India) பெண்கள் - தண்ணீர் கூட்டணி எனும் திட்டத்தின்  (The W+W Alliance”- USAID & Gap Inc) ஒரு பகுதியாக பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இந்தத் திட்டம் ‘வாட்டர் எய்ட்’ அமைப்பால் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் சமூக, பொருளாதார அம்சங்களையும் கொண்டுள்ளது. பெண்களுக்கு ‘பெண் தண்ணீர் சாம்பியன்கள்’ எனும் பட்டத்தை வழங்குவதோடு, தனிநபர் மற்றும் சமூக அளவில் மாற்றம் எற்படுவதையும் அவர்கள் உறுதி செய்கின்றனர்.

ஜல சக்தி அமைச்சகத்தின் ஜல ஜீவன் திட்டத்தின் கீழ், அனைத்து சமூகத் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. USAID மற்றும் Gap Inc இடையிலான ஆறு ஆண்டு உலகலாவிய வளர்ச்சி கூட்டணி (GDA) ஆகும். வாட்டர் எய்ட் இந்தியா இதில் 2019 முதல் பங்குதாரராக இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சேஹோர், இந்தூர், தேவாஸ், கண்ட்வா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள வார்த்தா மற்றும் யவத்மால் ஆகிய மாவட்டங்களில் தூய்மையான குடிநீரை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என ‘ஹெர் ஸ்டோரி’யிடம் வாட்டர் எய்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி வி.கே.மாதவன் கூறினார்.

சமூக அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கட்ட செயல்முறைகளின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் 13,834 பெண்கள், இளைஞர்கள் தண்ணீர் தர சோதனை மற்றும் கள சாதனத்தை பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். 4,067 பெண்கள் பங்கேற்பு திட்டமிடல் மற்றும் கிராம செயல் திட்டம் வளர்ச்சியில் 135 பெண்கள், தண்ணீர் பாதுகாப்பு திட்டமிடலில் 4,634 பெண்கள், கிராம சபை பங்கேற்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களாக 184 பெண்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.  

பெண்கள் தண்ணீர் சாம்பியன்களின் செயல்பாடுகள் மற்றும் சமூகத்தின் அவர்களின் தாக்கம் குறித்து அறிவதற்காக இவர்களில் சிலரிடம் பேசினோம்.

ரேணுகா கோடம்ப்கர் - அடிப்படை மாற்றம்

ரேணுகா கோடம்ப்கர்

ரேணுகா கோடம்ப்கர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்த்தா மாவட்டத்தில் உள்ள கொடம்பா கிராமத்தின் ஊராட்சி தலைவராவதற்கு முன்பே ரேணுகா கோடம்ப்கர் கிராமத்தில் நல்ல தண்ணீர் வசதிக்காக பாடுபட்டுக் கொண்டிருந்தார்.  

“திருமணமாகி இந்தக் கிராமத்திற்கு வந்தபோது நல்ல தண்ணீருக்காக பெண்கள் 2-3 கி.மீ நடந்து செல்ல வேண்டியிருந்தது. நான் பெண்களை திரட்டி அடி பம்பு கோரினேன். அதன் பிறகு கிராமத்தில் பொதுக் குழாயும் வந்தது” என்கிறார்.

அவரது இடைவிடாது முயற்சியைப் பார்த்த கிராமவாசிகள் ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட கோரினர். இதில் அவர் வெற்றி பெற்றார். இப்போது இரண்டாவது முறையாக தலைவர் பதவி வகிப்பவர், கிராம வளர்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பெண்கள் + தண்ணீர் திட்ட உதவி மற்றும் வாட்டர் எய்ட் இந்தியா ஆதரவுடன் கிராமத்தில் உள்ள நான்கு அரசு கட்டிடங்களின் மழை நீர் சேகரிப்பு வசதிகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் திட்டம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் வளர்ச்சிக்கான தேசியக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டது. மேலும், கிராமத்தில் உள்ள 285 குடும்பங்களையும் குழாய் இணைப்பின் கீழ் கொண்டு வருவதிலும் வெற்றி பெற்றார்.

“இத்தனை ஆண்டுகளில் தண்ணீர் சேமிப்பின் அவசியம் பற்றி கற்றுக்கொண்டுள்ளோம். பருகுவதற்கு தகுதியானதா என்பதை அறிய எட்டு காரணிகள் அடிப்படையில் தண்ணீரை பரிசோதிக்க கற்றுக்கொண்டுள்ளோம். அனைத்து குடும்பங்களுக்கும் தண்ணீர் வருவதை, வரி வசூலிக்க, கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பெண்கள் குழுவை உருவாக்கி உள்ளோம்” என்கிறார்.

ரேணுகா ஒருங்கிணைக்கும் இந்த செயல்கள், அரசு நிதி, மக்கள் நிதி மற்றும் கிராமவாசிகள் கூட்டு முயற்சியால் நிறைவேற்றப்படுகின்றன. மாதம் ரு.50 எனும் குறைந்த கட்டணம் செலுத்தி அனைத்து ஏழைக் குடும்பங்களும் குழாய் இணைப்பு பெற வழி செய்திருக்கிறார். இவரது சேவைகளை பாராட்டி, மகாராஷ்ட்ரா அரசு நிர்மல் கிராம் விருது, சிறந்த ஊராட்சி தலைவர் விருது, ஸ்மார்ட் கிராமம் விருது உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது.

“கோடைக்காலத்தில் கூட தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதில்லை என்பது கிராமத்திற்கு பெருமிதம் அளிக்கிறது. அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில் மழைநீர் சேகரிப்பை அமைப்பது எங்கள் நோக்கம்” என்கிறார்.

ஆஷாட்டை அத்மாராம் கோம்தா - மாற்றத்தை நோக்கி ...

பத்தாண்டுகளுக்கு முன் மகாராஷ்டிராவில் உள்ள ஆஷாட்டையின் ஷிவானி கிராமத்தில் பெண்கள் தினமும் தண்ணீர் கொண்டு வர விவசாய நிலங்களைச் சுற்றி பல முறை சென்று வர வேண்டியிருந்தது.

“பெரும்பாலான பெண்கள் கடினமான வேலைகளை செய்வதால், பெண்கள் கிராம சபை கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதன் மூலம் கிராமத்திற்கான தனி குழாய் இணைப்பு அமைக்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்கிறார்.

அஷாட்டை முயற்சியின் பலனாக, நான்கு கிராமங்களின் பெண்களைத் திரட்டி வீடுகள் அளவில் மழை நீர் பள்ளங்களை அமைத்தார். திட்டக் குழுவின் உதவியுடன் 148 பள்ளங்களை அமைத்தார். மேலும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜான திட்டத்தின் கீழ் 25 வீடுகள் மற்றும் கழிவறைகளை அமைத்துக் கொடுத்தார். கிணற்றில் தண்ணீர் ஊறுவதற்கான அமைப்பையும் உண்டாக்க வைத்தார். இப்போது நிறைய தண்ணீர் இருக்கிறது என்பவர், வாட்டர் எய்ட் அமைப்புடன் இணைந்து செயல்பட்டது சமூக மாற்றத்தை உண்டாக்கியது என்கிறார்.

“தண்ணீரை சேமித்து, பரிசோதிக்க கற்றுக்கொண்டது தவிர, சமத்துவத்தின் முக்கியத்துவத்தையும் இந்தத் திட்டம் புரிய வைத்துள்ளது” என்கிறார்.

“இதற்கு முன் பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படவில்லை. பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இந்தத் திட்டம் சமத்துவத்தையும், உள்ளூர் நிர்வாகத்தில் பங்கேற்பது எப்படி என்பதையும் உணர்த்தியது” என்கிறார்.

பபிதா லிரோலியா: சவால்களை எதிர்கொள்வது...

பபிதா லிரோலியா

பபிதா லிரோலியா

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டம் நயபூரா கிராமத்தைச் சேர்ந்த பபிதா லிரோலியாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை எனும் வார்த்தை அதிகம் புரிந்தது இல்லை. ஆனால், கிராமத்தில் பயிற்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண்மணி என்ற முறையில் இந்த சவாலை எதிர்கொண்டு தனது கிராமத்தில் தண்ணீர் சேமிப்பு முயற்சியில் முன்னிலை வகித்தார்.

இன்று லிரோலியா, தேசிய தண்ணீர் திட்டத்தால் தண்ணீர் சாம்பியனாக அங்கீகரிக்கப்பட்டு, ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

தண்ணீர் தரத்தை பரிசோதிப்பதுதான் அவரது முக்கிய வேலை. கை பம்புகளை பழுது பார்ப்பத்ற்கான பயிற்சிக்கும் தேர்வாகியிருக்கிறார். கிராமத்தில் உள்ள பழுதான தண்ணீர் குழாவை சீராக்குவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார்.

“தேசிய கிராமப்புற வாழவாதார திட்டத்தில் பணி செய்திருந்தாலும் தண்ணீர் சேமிப்பு பற்றி அறிந்தது இல்லை. இந்தத் திட்டம் தண்ணீரை அனைத்து காரணிகளிலும் சோதிக்க கற்றுக்கொடுத்தது” என்கிறார்.

லிரோலியா தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தண்ணீர் முறையாக சேமிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார். தண்ணீரை பரிசோதிக்க, கை பம்புகள் வரைபடத்தை தயாரிக்கவும், அனைத்து குடும்பங்களுக்கும் தண்ணீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவுஇம் 10 பெண்கள் கொண்ட குழு அமைத்தார்.

“தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்ய பருவமழைக்கு முன்னும் பின்னும் தண்ணீரை பரிசோதிக்கிறோம். பல்வேறு இடங்களுக்குச் சென்று பழுதான குழாய்களை கண்டறிந்து சரி செய்கிறோம். பிஎச் சோதனை கற்றுத் தருவது மற்றும் நீரால் பரவும் நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்பை புரிய வைக்கிறோம்” என்கிறார்.

ராதா மீனா: ஓங்கி ஒலிக்கும் குரல்

ராதா மீனா

ராதா மீனா

மத்தியப் பிரதேசத்தின் சோஹோர் மாவட்டம் மதுகலா கிராமத்தைச் சேர்ந்த ராத மீனா, பெண்கள் + தண்ணீர் கூட்டணியின் தன்னார்வலராக இருக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார். அவரது கணவர் ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார்.

அதன் பிறகு அவர் தனது குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். கிராமத்தின் குழாய் நீர் திட்டத்தையும் கவனித்துக்கொள்கிறார். இந்த கிரமாத்தில் 174 குடும்பங்கள் வசிக்கின்றன. மர்தான்பூர் கிராமப்புற தண்ணீர் குழாய் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 143 குடும்பங்களுக்கு குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

“மர்தான்பூர் கிராமப்புற தண்ணீர் குழாய் திட்டம் அங்கீகரிக்கப்பட பொதுமக்கள் ஆதரவு திரட்டினேன். இந்தத் திட்டத்தின் சோதனை, கட்டுமானம் மற்றும் செயலாக்கத்திலும் கவனம் செலுத்தினேன்” என்கிறார்.

சரியான இடங்களில் செக் வால்வ்களை பரிசோதிப்பது, குழாய் கசிவுகளை கவனிப்பது உள்ளிட்ட பணிகளிலும் கவனம் செலுத்தினார். இந்த அனுபவத்தை கொண்டு மற்றவர்களுக்குக்கும் குழாய் பராமரிப்பு போன்றவற்றை கற்றுக் கொடுத்தார். பெண்கள் கூட்டங்களில் பங்கேற்பதை ஊக்குவித்தவர் தனது குரல் ஓங்கி ஒலிக்க மைக்கையும் பயன்படுத்தினார்.

“2019-க்கு முன் பெண்கள் மற்றும் கிராம மக்களுக்கு போதுமான சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. ஆனால், இன்று பெண்கள் தங்களை குடும்பத்தை கவனித்துக் கொள்வதோடு, குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிடுகின்றனர்” என்கிறார் மீனா.

உறுதுணைக் கட்டுரை: ரேகா பாலகிருஷ்ணன்


Edited by Induja Raghunathan