Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘விஸ்தாரா’வின் கடைசி ட்ரிப்... - ‘ஏர் இந்தியா’ இணைவுக்கு முன் பிரியாவிடை!

கடைசியாக ஒருமுறை பயணம் செய்த விஸ்தாராவுக்கு பயணிகள் பிரியாவிடை கொடுத்திருக்கின்றனர். விஸ்தாராவுடனான தங்களின் நினைவுகளை உணர்வுபூர்வமாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

‘விஸ்தாரா’வின் கடைசி ட்ரிப்... - ‘ஏர் இந்தியா’ இணைவுக்கு முன் பிரியாவிடை!

Tuesday November 12, 2024 , 3 min Read

இந்திய விமானப் போக்குவரத்தில் தரத்துடன் சேவைகளை வழங்கிய ‘விஸ்தாரா ஏர்லைன்ஸ்’ நேற்றுடன் (நவ.11) விடைபெற்றுள்ளது. ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் இன்று முதல் ஏர் இந்தியா விமானமாக ‘விஸ்தாரா’ இயங்கவுள்ளது. எனவே, தனது இறுதி பயணத்தை முடித்த விஸ்தாராவுக்கு பயணிகள் நெகிழ்ச்சியாக விடைகொடுத்துள்ளனர்.

ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடா முதன்முதலில் இந்தியாவில் விமான சேவையை தொடங்கினார். அப்போதே இந்தியாவில் பணக்காரர்கள் மத்தியில் விமான சேவை பிரபலமாக இருந்தது. ஆனால், டாடாவின் விமான சேவையை 1953-ல் மத்திய அரசு தேசியமயமாக்கியதோடு ‘ஏர் இந்தியா’ என்கிற பெயரில் இயக்கி வந்தது. இதனால் புதிதாக தங்களுக்கென 2015-ல் விமான சேவையை தொடங்கிய டாடா குழுமம், அதற்கு ‘விஸ்தாரா’ என்றும் பெயர் வைத்தது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் கூட்டு சேர்ந்து தொடங்கப்பட்ட ‘விஸ்தாரா’ இந்தியாவில் சொகுசான விமான சேவையாக அறியப்படுகிறது. கொடுக்கின்ற கட்டணத்துக்கு தகுந்தாற்போல் சேவையை வழங்கியதால், இந்தியப் பயணிகள் மத்தியில் விரைவாக பிரபலமானது விஸ்தாரா. இதனால், அனைத்து நகரங்களுக்கும் சேவையை விரிவுபடுத்தியது.

இந்தநிலையில்தான், ‘ஏர் இந்தியா’ மீண்டும் டாடா குழுமத்தின் வசம் வர, விமான சேவையை விரிவுபடுத்தும் விதமாக விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் இணைக்க டாடா குழுமம் முடிவெடுத்தது. அதன்படி, நவம்பர் 12-ம் தேதி (இன்று) முதல் ஏர் இந்தியாவுடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்படுகிறது.

பயணிகள் நெகிழ்ச்சிப் பதிவு

கடைசியாக ஒருமுறை பயணம் செய்த விஸ்தாராவுக்கு பயணிகள் பிரியாவிடை கொடுத்திருக்கின்றனர். விஸ்தாராவுடனான தங்களின் நினைவுகளை உணர்வுபூர்வமாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். பார்த் சுபா என்கிற பயணி தனது நன்றியை தெரிவித்து இட்ட பதிவு:

“விடைபெறுகிறது விஸ்தாரா... இந்தியாவின் மிகச் சிறந்த உள்நாட்டு விமான நிறுவனம், இன்று தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. 2015 முதல் விஸ்தாரா இந்திய வான் எல்லையில் சிறப்பான சேவை மற்றும் வசதியை அளிப்பதில் புதிய தரத்தை நிறுவியது.

ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாததாக மாற்றியதற்கு நன்றி, விஸ்தாரா. ஏர் இந்தியாவுடன் புதிய எல்லைகளுக்கு உயரப் பறப்போம்” என எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ந்துள்ளார்.

சிராக் நாயக் என்கிற பயணியோ, “விஸ்தாரா விமானத்தில் கடைசி பயணம். நாஸ்டால்ஜி நிறைந்திருந்தது. அதன் சிறந்த சேவை விஸ்தாராவை இந்தியாவின் சிறந்த விமான நிறுவனமாக மாற்றியது. இந்த புதிய அத்தியாயத்திற்காக விஸ்தாராவுக்கு நல்வாழ்த்துக்கள்!” எனக் கூறியுள்ளார்.

vistara

மேலும் பல பயனர்கள் விஸ்தாரா வழங்கிய உயர்தர சேவையையும், அவற்றுடனான பயண அனுபவத்தையும் நினைவுகூர்ந்தனர்.

அனுபவ் கோயல் என்பவர் தனது பகிர்வில் கூறியது: “தனது இறுதி பயணத்தில் விஸ்தாராவின் சேவையை அனுபவித்துள்ளேன். பயணத்தின் போது 'ஒரு புதிய உணர்வு' வழங்கப்படும் என்ற வாக்குறுதியை உண்மையிலேயே நிறைவேற்றிய நிறுவனம் விஸ்தாரா.

செலவு குறைப்பு மற்றும் குறுகிய கால வருவாயை விட பிசினஸில் வேறு சிலவும் இருக்கிறது என்பதை விஸ்தாராவின் கவனிப்புகள் எடுத்துச் சொல்கின்றன.”

ஆதர்ஷ் இளங்கோ என்கிற பயனர், விஸ்தாராவுடனான தனது இறுதிப் பயணத்தின் ஸ்னாப்ஷாட்டைப் பகிர்ந்து, “உண்மையிலேயே ஆடம்பரமான சேவையை வழங்கிய ஏர்லைன் விஸ்தாரா. ஏர் இந்தியாவுடன் இணைய உள்ள நிலையில் விஸ்தாராவுடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களின் நினைவலைகளுடன் விஸ்தாரா நிறுவனத்துக்கு பிரியா விடை அளித்து வருகின்றனர்.

புதிய நடவடிக்கை

விஸ்தாராவை இணைத்ததன் மூலம், வாடிக்கையாளர் சேவைக்கான புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. நேற்று முதல் விஸ்தாரா விமானங்கள் புதிய நான்கு இலக்க ஏர் இந்தியா குறியீட்டின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு, UK 955 என்கிற விமானம் இனி AI 2955 என்று பட்டியலிடப்படும். அதேநேரம், ரூட், அட்டவணைகள் மற்றும் சேவைகள் அப்படியே இருக்கும் என்றாலும், ஏர் இந்தியா வழியாக இனி பயணிகள் விஸ்தாராவின் சலுகைகளை பெறுவார்கள்.

சேவையை எளிதாக்கும் வகையில், ஏர் இந்தியா முக்கிய விமான நிலையங்களில் உதவி மையங்களை அமைத்துள்ளது. உதவுவதற்காக, “How may I assist you?” என்கிற டி-ஷர்ட் அணிந்த குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சர்வதேச விமான நிலையங்களில், செக்-இன் செய்வதற்கான சிக்னல்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

விஸ்தாராவின் டிக்கெட் அலுவலகங்கள் மற்றும் செக்-இன் டெர்மினல்கள் படிப்படியாக மாற்றப்பட்டு, ஏர் இந்தியாவின் புதிய குறியீட்டைத் தேர்ந்தெடுக்க பயணிகளுக்கு வழிகாட்ட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா ஏற்கனவே 270,000 விஸ்தாரா பயணிகளையும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான விசுவாச உறுப்பினர்களையும் தனது அமைப்புக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், விஸ்தாரா உடனான இணைப்பு மூலம், ஏர் இந்தியா நெட்வொர்க் 90-க்கும் அதிமான இடங்களுக்கு விரிவடைந்துள்ளது.


Edited by Induja Raghunathan