Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நூற்றாண்டுப் பயணமும் கோடிகளில் வருவாயும் - ஆதிக்கம் செலுத்தும் ‘ஹல்திராம்’ கதை!

ஹல்திராம் நிறுவனம் தமது தயாரிப்புகள் மூலம் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் வருவாயை ஈட்டி வருவதற்குப் பின்னால் நீண்ட பயணமும், நேர்த்தியான உத்திகளும் நிறைந்துள்ளன.

நூற்றாண்டுப் பயணமும் கோடிகளில் வருவாயும் - ஆதிக்கம் செலுத்தும் ‘ஹல்திராம்’ கதை!

Wednesday December 06, 2023 , 3 min Read

ராஜஸ்தான் மாநில பிகானரில் சாதாரணமாக தொடங்கப்பட்ட இனிப்புக் கடை இன்று ‘ஹல்திராம் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ்’ (Haldiram's) எனப்படும் உலகளாவிய பிரபலமான வர்த்தக சங்கிலித் தொடர் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

ஹல்திராமின் இந்தப் பயணம் தொழில் முனைவோருக்கே உரிய புத்திசாலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்த வெற்றிக்கதை 1918ல் ஷிவ்கிசன் அகர்வால் தனது தந்தையின் கடையில் பூஜியாவை விற்ற முயற்சியில் இருந்து தொடங்கியது. இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஹல்திராம் நிறுவனம் தமது தயாரிப்புகள் மூலம் ஆண்டுக்கு 7,130 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி வருகிறது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்!

haldiram

ஆரம்பங்களும் விரிவாக்கங்களும்!

ஹல்திராமின் நிறுவனர் கங்கா பிஷன் அகர்வால் ஆரம்பத்தில் தனது தந்தையின் கடையில் பிகானேரி பூஜியாவின் தனித்துவமான ஒரு வகை இனிப்பை விற்று வந்தது முதல் தன் தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இது பிரபலமானதைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்தினார்.

இன்று, ஹல்திராம் இனிப்பு மற்றும் பிற உணவு வகைகள் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களிலும் பரவி பிரபலமாகியுள்ளது.

ஆனால், வர்த்தகத்தில் தடைக்கற்கள் இருக்கும் என்ற விதி இவர்கள் வர்த்தகத்தையும் விட்டு வைக்கவில்லை. பெரிய வர்த்தகக் குடும்பங்களில் உள்ள பிரச்சனைகள் இவர்களிடத்திலும் மூண்டது. பிராண்ட் செய்வதில் சண்டை, வர்த்தகப் பகுதிகளை குடும்பத்தினரிடையே பிரிப்பதில் போராட்டம், அதிருப்திகள், சண்டைகள் முண்டன.

ஆனாலும், நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. அவர்களின் வளர்ச்சி, 2017ல் இந்தியாவின் மிகப்பெரிய சிற்றுண்டி நிறுவனமாக உருவெடுத்து, உலகளாவிய ஜாம்பவான்களைக் கூட முறியடிக்க வழிவகுத்தது.

பலதரப்பட்ட தயாரிப்புகளின் இருப்பிடம்!

ஹல்திராம் என்னும் பிராண்ட் பூஜியா நம்கீன் என்பதுடன் தொடங்கியது. காலப்போக்கில் இனிப்புகள், தின்பண்டங்கள், அப்பளங்கள், குக்கீகள் மற்றும் முக்கிய இந்திய நகரங்களில் உள்ள உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அவர்களின் திறமை விரிவடைந்தது.

செயல்பாடுகளில் பிராந்திய வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஹல்திராமின் தயாரிப்புகளின் சாராம்சம் சீரானதாக இருந்தது. பலதரப்பட்ட தயாரிப்புகளில் பிராந்திய மக்களின் ருசிக்கேற்ப வேறுபாடுகள் இருப்பினும் ஹல்திராம் குடும்பச் சமையல் முறை என்னும் முத்திரையுடன் இருந்ததால் வேறுபாடுகள் தெரியவில்லை.

haldiram

மார்க்கெட்டிங் திறமைகள்:

ஹல்திராமின் இன்னொரு தனித்துவம் என்னவெனில், அவர்கள் பேக்கேஜிங்குகளில் அதிக கவனம் செலுத்தினர். நவீனமயமாக்கப்பட்ட பேக்கேஜ்கள், ஜிப் மூடித்திறக்கும் பேக்கேஜ்கள், ஸ்டாண்டி பை பேக்கேஜ்கள் என்று அசத்தினர். இப்படிப்பட்ட தொழில் நேர்த்தியான பேக்கேஜிங்குகள் ஹல்திராம் என்னும் பிராண்ட் அல்லது வணிக முத்திரையின் அங்கீகாரத்தை உயர்த்தின.

இந்தியா முழுதும் ஹல்திராம் ஸ்டோர்கள் மற்றும் மின் - வர்த்தகத்தில் நுழைந்தது போன்றவை ஹல்திராமின் சந்தை இருப்பை உறுதி செய்தன. இந்த புதுமையான அணுகுமுறை, வருவாயில் அயல்நாட்டு ஜெயன்ட்களான மெக்டொனால்ட்ஸ் மற்றும் டோமினோஸ் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளையும் கூட விஞ்சுவதற்கு அவர்களுக்கு உதவியது.

மீட்சியும் வளர்ச்சியும்

இருப்பினும், தடையில்லா வெற்றி என்பது எங்கும் கிடையாது என்பதற்கேற்ப மேகியைத் தடை செய்தது போல் ஹல்திராம் தயாரிப்புகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், தளராத இவர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தடைக்கான காரணங்களை தங்கள் தயாரிப்புகளிலிருந்து விலக்கி, இந்திய ரயில்வேயுடன் கூட்டாண்மை முதலான முன்னெடுப்புகளால் மீண்டெழுந்தது. சந்தையும் மீண்டது.

ஹல்திராமின் லட்சிய எதிர்காலத் திட்டங்கள், பேக்கரி தயாரிப்புகளையும் இணைக்க மிகுந்த ஆர்வத்தை உள்ளடக்கியதாகும். அவர்கள் விரைவில் ஐபிஓ சந்தையில் ஊடுருவி தங்கள் உணவகச் சங்கிலியை மேலும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளனர். இப்போது புதுடெல்லியில் 100 உணவகங்கள் மற்றும் நாக்பூரில் 30-40 உணவகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், உலகளாவிய விரிவாகக்த் திட்டத்தில் அல்ஜீரியா, ஜோர்டான், யேமன் மற்றும் பல சந்தைகளை குறிவைக்கிறது ஹல்திராம்.

haldiram

ஹல்திராமின் வெற்றி பயணம் தடைகள் உள்ளிட்ட பெரிய இடையூறுகள் வந்தாலும் குடும்ப சச்சரவுகள் வந்தாலும் வர்த்தகத்தில் ஒற்றைக் குறிக்கோள் லட்சியம் எப்போதும் பெரிய வெற்றியைத் தரும் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். ஹல்திராமின் வளர்ச்சிப் பெருங்கதை வளரும் தொழில்முனைவோருக்கு ஓர் உத்வேகமாக செயல்படுகிறது. அர்ப்பணிப்பு மற்றும் வணிகத் தொலைநோக்குப் பார்வையுடன், எந்தவொரு முயற்சியும் உலகளாவிய அங்கீகாரத்தை அடைய முடியும் என்பதை வலியுறுத்துகிறது.

“எங்கள் நிறுவன ஊழியர்களின் அர்ப்பணிப்பு, விசுவாவம் மற்றும் கடின உழைப்பு ஆகியவையும் இந்த வெற்றிப் பயணத்துக்குப் பெருந்துணை.”

ஹல்திராம் நிறுவனத்தின் இந்தக் கூற்று முற்றிலும் உண்மை. அதேபோல், ஊழியர்களின் நலனிலும் கவனத்துடன் செயல்படுவதாகச் சொல்கிறது ஹல்திராம் நிறுவனம்.

மூலம்: Nucleus_AI


Edited by Induja Raghunathan