Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ராம்ராஜ் காட்டனின் விளம்பரத் தூதராக அபிஷேக் பச்சன் நியமனம்!

இந்தியாவின் முன்னணி வேஷ்டி மற்றும் பாரம்பரிய ஆடை பிராண்டான ராம்ராஜ் காட்டன், பாலிவுட் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை தனது புதிய விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.

ராம்ராஜ் காட்டனின் விளம்பரத் தூதராக அபிஷேக் பச்சன் நியமனம்!

Wednesday November 20, 2024 , 1 min Read

இந்தியாவின் முன்னணி வேஷ்டி மற்றும் பாரம்பரிய ஆடை பிராண்டான ராம்ராஜ் காட்டன், பாலிவுட் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை தனது புதிய விளம்பர தூதராக நியமித்துள்ளது.

ராம்ராஜ் காட்டன் சார்பிலான புதிய விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களில் அபிஷேக் பச்சன் இடம்பெறுவார்.

ramraj

பாரம்பரிய ஆடை பிரிவில் சுதேசி வேர்களை வலுவாக்கி தனது வர்த்தக நிலையை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் ராம்ராஜ் காட்டனின் திட்டத்துடன் அபிஷேக் பச்சனுடனான கூட்டு பொருந்துகிறது. அபிஷேக் பச்சனின் வசீகரம், மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் தன்மை, ராம்ராஜின் வேஷ்டிகள், சட்டைகள், குர்தாக்கள் உள்ளிட்ட ஆடைகளுக்கு பொருத்தமாக அமையும், என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராம்ராஜ் குடும்பத்தில் அபிஷேக் பச்சனை வரவேற்கிறோம். அவரது மதிப்பு, நம்பகத்தன்மை மற்றும் பார்வையாளர்களுடனான் நெருக்கம் எங்கள் பிராண்டிற்கான இயற்கையான தேர்வாக அமைகிறது. இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை ராம்ராஜ் கொண்டாடி வருகிறது. அபிஷேக்குடன் இணைவதன் மூலம், இந்திய பாரம்பரியத்தை பார்வையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருகிறோம்,” என ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் கூறினார்.

இந்த கூட்டு இந்தியாவின் கலாச்சார இழையை கொண்டாட உள்ள நிலையில், ராம்ராஜ் காட்டன் அபிஷேக்கை கொண்டு 360 கோண விளம்பரங்களை கொண்டு வர உள்ளது.

இந்திய ஆடை உலகில் ஆழமாக கால் பதித்துள்ள ராம்ராஜ் காட்டன் போன்ற பிராண்டுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். பாரம்பரியம் மற்றும் தரத்தை மதிக்கும் ஒரு பிராண்டை முன்னிலைபடுத்துவதில் மகிழ்கிறேன், என நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.


Edited by Induja Raghunathan