மின்சார இருசக்கர வாகன பிரிவில் பிப்ரவரி மாத விற்பனையில் பஜாஜ் ஆட்டோ மீண்டும் முதலிடம்!
பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில், பிப்ரவரியில் பஜாஜ் ஆட்டோ முன்னிலை பெற்றுள்ளது.
பஜாஜ் ஆட்டோ, பிப்ரவரி மாதத்தில் மின்சார இருசக்கர வாகனப் பரப்பில் 28 சதவீத சந்தை பங்கு பெற்று மீண்டும் முன்னிலை பெற்றுள்ளதாக வாஹன் இணையதள தகவல் தெரிவிக்கிறது. பஜாஜ் நிறுவனம், 21,389 வாகங்களை விற்பனை செய்துள்ளதாக இந்த தளம் தெரிவிக்கிறது.
மின்சார இருசக்கர வாகன பிரிவில், டிசம்பர் மாதம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்ற பின் மீண்டும், இரண்டாவது முறையாக பஜாஜ் நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது. இதனிடையே, விரிவாக்க திட்டத்தின் பயனாக, ஓலா எலெக்ட்ரிக் ஜனவரியில் மீண்டும் முதலிடம் பெற்றது.

பிப்ரவரி மாதம், இந்நிறுவனம் 8,647 வாகனங்கள் விற்பனை செய்துள்ளதாக இணையதள தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும், பதிவு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மறு சீரமைப்பு செய்து வருவதால் இணையத்தில் தகவல் பதிவேறுவது பாதிக்கப்படலாம் என நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. செலவுகளை குறைத்து, வாகன பதிவை எளிதாக்கும் நோக்கத்துடன் இந்த சீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
ஓலா எலெக்ட்ரிக், பிப்ரவரியில் 25,000 வாகனங்கள் விற்பனை செய்ததாகவும், மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்கு நகரங்கள் ஆதரவு இதற்கு காரணம் என்றும் கடந்த 28 ம் தேதி தெரிவித்தது. இருப்பினும், இந்த எண்ணிக்கை இணையதளத்தில் பிரதிபலிக்கவில்லை.
இதனிடையேம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 18,764 வாகனங்கள் விற்பனை செய்து 24.6 சதவீத சந்தை பங்கை பெற்றுள்ளது.
பொது பங்கு வெளியிட தயாராகும் ஏத்தர் நிறுவனம் பிப்ரவரி மாதம் 11,808 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. ஜனவரி மாதம் 13,062 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது.
ஹீரோ மோட்டார்கார்ப் 15.5 சதவீத சந்தை பங்கு பெற்றுள்ளது. முந்தைய மாதங்களோடு ஒப்பிடும் போது, பிப்ரவரி மாதம் மின் வாகனங்கள் விற்பனை 8 சதவீதம் சரிந்து, 76,089 வாகனங்களாக இருந்தது.
ஆங்கிலத்தில்: சாய்கீர்த்தி
Edited by Induja Raghunathan