Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை ஷாக் - இரு நாட்களில் சவரனுக்கு ரூ.500+ உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை மென்மேலும் அதிகரித்து வருவது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தரும் தகவலாக உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை ஷாக் - இரு நாட்களில் சவரனுக்கு ரூ.500+ உயர்வு

Friday January 10, 2025 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை மென்மேலும் அதிகரித்து வருவது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தரும் தகவலாக உள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500-க்கு மேல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.7,260 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.280 உயர்ந்து ரூ.58,080 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 உயர்ந்து ரூ.7,920 ஆகவும், சவரன் விலை ரூ.304 உயர்ந்து ரூ.63,360 ஆகவும் இருந்தது. தற்போது மேலும் விலை உயர்வு காணப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (10.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.7,285 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 உயர்ந்து ரூ.58,280 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 உயர்ந்து ரூ.7,947 ஆகவும், சவரன் விலை ரூ.216 உயர்ந்து ரூ.63,576 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (10.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.101 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,01,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோல், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே உயர்ந்துள்ளதாலும், பண்டிகை காலம் என்பதாலும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,285 (ரூ.25 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,280 (ரூ.200 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,947 (ரூ.27 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,576 (ரூ.216 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,285 (ரூ.25 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,280 (ரூ.200 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,947 (ரூ.27 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,576 (ரூ.216 உயர்வு)


Edited by Induja Raghunathan