Gold Rate Chennai: புதிய உச்சம்; தங்கம் வாங்குவோர் அதிர்ச்சி - சவரன் ரூ.60,760
கடந்த இரு தினங்களாக சற்றே குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது புதிய உச்சத்தை எட்டியிருப்பது, தங்கம் வாங்க விழைவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களாக சற்றே குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இப்போது புதிய உச்சத்தை எட்டியிருப்பது, தங்கம் வாங்க விழைவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 குறைந்து ரூ.7,510 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.60,080 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.32 குறைந்து ரூ.8,193 ஆகவும், சவரன் விலை ரூ.256 குறைந்து ரூ.65,544 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (29.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.85 உயர்ந்து ரூ.7,595 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.680 உயர்ந்து ரூ.60,760 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.92 உயர்ந்து ரூ.8,285 ஆகவும், சவரன் விலை ரூ.736 உயர்ந்து ரூ.66,280 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (28.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,04,000 ஆகவும் நீடிக்கிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே குறைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. சர்வதேச சந்தைப் போக்குகளின் எதிரொலியாக, தற்போதைய சூழலில் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி மக்கள் நகருகின்றனர்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை உயரவே கூடும் என வர்த்தகர்கள் கணிக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்பின் சில அதிரடி முடிவுகளும், எதிர்வரும் மத்திய பட்ஜெட்டும் இனி வரும் நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,595 (ரூ.85 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,760 (ரூ.680 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,285 (ரூ.92 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66.280 (ரூ.736 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan