Gold Rate Chennai: குறைந்தது தங்கம் விலை - நகை வாங்குவோருக்கு சற்றே நிம்மதி!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. பெரிய அளவில் குறைவு இல்லாவிட்டாலும், மென்மேலும் விலை உயராதது ஆறுதலுக்கு உரியதாக உள்ளது.
நகை வாங்க விழைவோருக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. பெரிய அளவில் குறைவு இல்லாவிட்டாலும், மென்மேலும் விலை உயராதது ஆறுதலுக்கு உரியதாக உள்ளது.
சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.6,880 ஆகவும், சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.55,040 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.7,505 ஆகவும், சவரன் விலை ரூ.128 உயர்ந்து ரூ.60,040 ஆகவும் இருந்தது. தற்போது சற்றே விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (17.9.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,865 ஆகவும், சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.54,920 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.7,489 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.59,912 ஆகவும் இருக்கிறது.
கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,400 அளவுக்கு அதிகரித்த தங்கம் விலை இப்போது சற்றே குறைந்திருப்பது நகை வாங்க விழைவோருக்கு ஆறுதல் தந்துள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை (17-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.97 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.97,000 ஆகவும் விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித குறைப்புக்கான எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. அதேபோல், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தொடர்ச்சியாக தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தாலும், உலக அளவில் முதலீட்டாளர்கள் இடையே உறுதியான போக்கு இல்லாததால் தற்போது தங்கம் விலை சற்றே குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,865 (ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,920 (ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,489 (ரூ.16 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,912 (ரூ.128 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,865 (ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,920 (ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,489 (ரூ.16 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,912 (ரூ.128 குறைவு)
Edited by Induja Raghunathan