Gold Rate Chennai: ஒரே நாளில் ரூ.640 உயர்வு; ரூ.64,000-ஐ தாண்டிய தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.640 அதிகரித்து, சவரனுக்கு ரூ.64,480 என விற்பனை ஆகிறது. ரூ.64,000-ஐ அதிவேகமாக கடந்திருப்பது நகை வாங்கும் மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.640 அதிகரித்து, சவரனுக்கு ரூ.64,480 என விற்பனை ஆகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை ரூ.64,000-ஐ அதிவேகமாக கடந்திருப்பது நகை வாங்கும் மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.7,980 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.280 அதிகரித்து ரூ.63,840 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.39 உயர்ந்து ரூ.8,706 ஆகவும், சவரன் விலை ரூ.312 அதிகரித்து ரூ.69,648 ஆகவும் இருந்தது. இப்போது தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (11.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.8,060 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 அதிகரித்து ரூ.64,480 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.8,793 ஆகவும், சவரன் விலை ரூ.696 அதிகரித்து ரூ.70,344 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (11.2.2025) 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா குறைந்து ரூ.106.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 குறைந்து ரூ.1,06,900 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. அமெரிக்கா - சீனா இடையிலான வரிவிதிப்பு யுத்தம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நிலவுகிறது. தங்கத்தில் முதலீடு செய்வதே இப்போதைக்கு பாதுகாப்பு என்று மக்கள் நம்புகின்றனர். இந்தக் காரணங்களால், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,060 (ரூ.80 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,480 (ரூ.640 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,793 (ரூ.87 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,344 (ரூ.696 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,060 (ரூ.80 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,480 (ரூ.640 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,793 (ரூ.87 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,344 (ரூ.696 உயர்வு)
Edited by Induja Raghunathan