Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹர்திக் பாண்டியாவின் புதிய வாட்ச்: அப்படி என்ன ஸ்பெஷல்?

ரூ.5 கோடி மதிப்புள்ள வாட்ச்!

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹர்திக் பாண்டியாவின் புதிய வாட்ச்: அப்படி என்ன ஸ்பெஷல்?

Friday August 27, 2021 , 2 min Read

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் அதில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


ஹர்திக் பாண்டியா ஆடம்பரத்தை விரும்பும் நபர். இதை அவரின் வலைதள பக்கத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். ஆடம்பர பிராண்டுகளை வைத்திருப்பது என ஆடம்பரமான வாழ்க்கை முறையை வெளிப்படுத்தி வருகிறார். அவரது வீடு முதல் கார்கள் மற்றும் உடைகள் வரை அவரது படங்கள் சமூக ஊடகங்களில் ஆடம்பரத்தைப் பற்றி பேசுகின்றன.


இப்போது அவர் வைத்துள்ள விலையுயர்ந்த சொத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருககும் பாண்ட்யா, ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த ஆல்பத்தில் கடைசி படமாக அவர் வெளியிட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தில், அரிய படேக் பிலிப் நாட்டிலஸ் பிளாட்டினம் 5711 (Patek Philippe Nautilus) அணிந்திருந்தது தெரியவந்தது.

32 பச்சை மரகதங்கள் பதிக்கப்பட்ட இந்த வாட்ச் முழுக்க முழுக்க பிளாட்டினத்தால் ஆனது மற்றும் அதன் விலை 5 கோடி.
ஹர்திக் பாண்டியா

தானியங்கி கடிகாரமான இது, 45 மணிநேர இயங்கும் சக்தி கொண்டது. மேலும் இந்த வாட்சின் 5711 மாடல் அரிதான ஒன்று. மேலும் பாண்டியா தேர்ந்தெடுத்துள்ள கலரும் அரிதானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


இதற்கிடையே, முன்னதாக, பாண்டியா தனது சகோதரர் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து சமீபத்தில் மும்பையில் 8 பிஹெச் கே கொண்ட சொகுசு பிளாட்டை வாங்கினார். சுமார் 3838 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் ஆகும்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா சில காலமாக மிகப்பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தவில்லை. கடைசியாக இலங்கையில் நடந்த லிமிடெட் ஓவர் போட்டிகளில் கலந்துகொண்டவர் பெரிதாக விளையாடவில்லை. என்றாலும், வரவிருக்கும் ஐபிஎல் 2021 பதிப்பில் அவர் மீண்டும் தனது முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மும்பை இந்தியன்ஸ் அணியின் பாண்டியா சகோதரர்கள் பல ஆண்டுகளாக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஐபிஎல் 2021 க்குப் பிறகு, டி20 உலகக் கோப்பை நடக்கவிருக்கிறது. ஐபிஎல் தொடரில் நல்ல பெர்பாமென்ஸை வெளிப்படுத்தும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பையில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது.