'எரிசக்தித் துறை அடுத்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ச்சி காணும்' - முதலீடு செய்ய பிரதமர் அழைப்பு!
இந்திய எரிசக்தி வார கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள் வெறும் பங்குதார்கள் மட்டுமல்ல இந்தியாவின் எரிசக்தி இலக்குகளை அடைவதற்கான முக்கிய உதவுகோல் அவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2025 இந்திய எரிசக்தி வாரம் கொண்டாடப்படுவதையொட்டி தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரான்ஸ் தலைநகர் பிரான்சிஸ் நடைபெறும் ஏஐ தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றுள்ள பிரதமர், எரிசக்தி வாரவிழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் இலக்கை அடைய இந்தியா எரிசக்தித் துறையில் பல வாய்ப்புகளை வழங்க உள்ளது, எனவே முதலீட்டாளர்கள் இந்திய எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும், என்றார்.
500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, 5 மில்லியன் பசுமை ஹைட்ரோஜன் உள்ளிட்டவற்றை 2030க்குள் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று எண்ணெய் மற்றும் கேஸ் உற்பத்தியை பொறுத்தமட்டில் புதிதாக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட உள்ளன, என்றும் மோடி தெரிவித்தார். “
புதிய முதலீடுகளுக்கு இந்தியாவில் பல வாய்ப்புகள் உள்ளன, நீங்கள் அனைவரும் அதன் பலன்களை அடைவீர்கள்,” என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
எரிசக்தித் துறையில் வளர்ச்சி காணும் பல வாய்ப்புகள் உள்ளன. “எரிசக்தி வாரத்தை கொண்டாட்டத்தில் நீங்கள் வெறும் பங்குதாரர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எரிசக்தி இலக்குகளை அடைவதற்கான முக்கிய உந்துகோல் முதலீட்டாளர்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.

Prime Minister Narendra Modi. Picture credit: PTI
21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என நிபுணர்கள் சொல்கின்றனர். இந்தியா தனது வளர்ச்சியை மட்டும் அல்லாமல், உலகத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது. இதில் நமது எரிசக்திக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்தியாவின் எரிசக்தி இலக்குகள் ஐந்து முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
“நம்மிடம் வளம் இருக்கிறது அதை நாம் பயன்படுத்த வேண்டும். நம்முடைய இளம் தலைமுறையை புதுமைகள் படைக்க நாம் ஊக்கப்படுத்துகிறோம். மூன்றாவதாக நம்மிடம் உறுதியான பொருளாதாரமும் ஸ்திரமான அரசும் உள்ளது,” என்றார்.
வளர்ந்த பாரதத்திற்கு அடுத்த இரண்டு தசாப்தங்கள் முக்கியமானவை. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைய சாதனை படைக்கப் போகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி உள்ளது.
இந்தியாவின் புவி அமைப்பு எரிசக்தி வணிகத்தை இலகுவானதாக்குகிறது. அடுத்த தசாப்தம் மிகவும் முக்கியமான காலகட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் நாம் பல மைல்கற்களை அடைய வேண்டும். நம்முடைய எரிசக்தி இலக்குகளை சமன்செய்ய 2030 கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2030ல் நாம் கூடுதலாக 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் கொண்டிருக்க வேண்டும், அதே போன்று 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரோஜன் இலக்கையும் எட்டி இருக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை பார்க்கும் போது இதுவும் சாத்தியமே. கடந்த தசாப்தத்தில் இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்கிறது, அதுவும் 10வது நாடாக இருந்தது 5வது நாடாக வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், சூரிய சக்தி மின்சாரத்திறன் 32 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தியா இன்று சூரிய மின்சார உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக வளர்ந்திருக்கிறது புதைபடிவ எரிபொருளில் 3 மடங்கு வளர்ச்சியை கண்டிருக்கிறது.
பாரிஸ் காலநிலை மாற்ற மாநாட்டில் கார்பன் குறைப்புக்காக ஜி20 மாநாட்டில் போடப்பட்ட இலக்கை அடைந்த முதல் நாடு இந்தியா என்பதை நாம் பெருமையாகச் சொல்வோம். இந்திய எரிசக்தி வாரம் 2025ன் போது, எரிசக்தி முதலீட்டாளர்கள் உற்பத்தியாளர்களுடன் தலைநகரில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 1 லட்சம் சதுர அடியில் அரங்குகள் அமைத்து பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட உள்ளிட்ட அரசின் முக்கிய எரிசக்தி திட்டங்கள் பிரம்மாண்டமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சர்வதேச முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் விதத்தில் இந்தியா வகுத்துள்ள கொள்கைகள், தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவையும் இந்த கண்காட்சியில் விளக்கப்பட்டு இருந்தன.