250 மில்லியன் மாதாந்திர பயனர்களை ஈர்க்கும் இந்தியாவின் ஷார்ட்- வீடியோ சந்தை!
டிக்டாக் தளம் 2020ம் ஆண்டு மத்தியில் தடை செய்யப்பட்ட பிறகே குறும் வீடியோ தளங்கள் 3.6 மடங்கு அதிகப் பயனர்களை ஈர்த்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறுகிய வடிவ வீடியோ சந்தை 3.6 மடங்கு வளர்ச்சி கண்டு மாதாந்திரம் 250 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து வருவதாக ரெட்சீர் ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
டிக்டாக் தளம் 2020ம் ஆண்டு மத்தியில் தடை செய்யப்பட்ட பிறகே குறும் வீடியோ தளங்கள் 3.6 மடங்கு அதிகப் பயனர்களை ஈர்த்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“India SFV in 2024: From ‘Likes’ to Monetising Millions”- என்னும் தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை 4 பிரதான விஷயங்களை அடையாளப்படுத்தியுள்ளது. மதிப்பு தேடுபவர்கள், டிஜிட்டல் கண்டுபிடிப்பாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் ஆகிய பயனர்களின் வகைகளை அடையாளம் கண்டுள்ளது.
"இந்தியாவின் டிஜிட்டல் விளம்பர சந்தை அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது, 2029 நிதியாண்டில் கிட்டத்தட்ட இரு மடங்காக 16–17 பில்லியன் டாலர்களை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வீடியோ விளம்பரம் வேகமாக வளர்ந்து வரும் விளம்பர வடிவமாக முன்னணியில் உள்ளது," என்று Redseer Strategy Consultants-ன் அசோசியேட் பார்ட்னர் முகேஷ் குமார் கூறினார்.
50%-க்கும் அதிகமான குறும்-வீடியோ பயனர்களை வைத்து பணமாக்க முடியும் என்றும், இந்த பயனர்களின் விருப்பமான செலவுகள் பெரும்பாலும் e-commerce, OTT, இன்-ஆப் பர்ச்சேஸ்கள் மற்றும் கட்டண கேமிங் சேவைகளை நோக்கி உள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் குறும் வீடியோ இயங்குதளங்கள் இப்போது 2024ல் $95-$100 மில்லியனை ஈட்டி வருகின்றன, விளம்பர வருவாய் தற்போது அதன் டிஜிட்டல் விளம்பரச் செலவில் 1%-2% ஆக உள்ளது.
இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் இடம் 40-45% வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் FY29க்குள் $3-$4 பில்லியனைத் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, 63% க்கும் அதிகமான குறுகிய வீடியோ பயனர்கள் இரண்டாம் அடுக்கு பிராந்தியங்களிலிருந்து வருபவை. Josh மற்றும் Moj போன்ற தளங்கள் உள்ளூர் மொழிகள் மற்றும் விருப்பங்களுக்கான உள்ளடக்கத்தை வடிவமைக்கின்றன.
சராசரியாக, பயனர்கள் இப்போது இந்திய SFV தளங்களில் ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்கள் செலவிடுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. குறிப்பாக இரண்டாம் அடுக்கு பிராந்தியங்களில் பயனர்களைத் தக்கவைப்பது குறும் வீடியோக்களின் தரநிலையைப் பொறுத்தது என்கிறது இந்த அறிக்கை.
பயனர்களின் வளர்ந்து வரும் முதிர்ச்சி மற்றும் பயனர்- இன்ஃப்ளூயன்சர் இணைப்புகளுடன், வீடியோ வர்த்தகம் FY29 க்குள் $5 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.